ஒட்டிப்போன தன்
வயிறு மடியும் அளவுக்கு
குனிந்து ,நிமிர்ந்து
மிக உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தான்...
அவன் உதடுகள் எதோ
ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தன...
யாரும்புரிந்து கொள்ள முடியாத
மொழியில் அது...
உற்சாக நடத்திற்கிடையே
தன் கண்களை
விரல்களால் அழுத்தியபடியே
சில நொடிகள் நிறுத்தினான்...
மீண்டும் நடனம் தொடந்தது...
அவனை இதற்கு முன்
பார்த்ததில்லை
பேருந்து நிறுத்தத்தின்
தேனீர் கடை திட்டில் அமர்ந்திருந்தான்
சிலர் சிரித்தார்கள்,
சிலர் பரிதாபப்பட்டார்கள்
அவனின் அடுத்த சைகை எதிர்பார்ததார்கள் சிலர்...
யார் அவன்..
தன்னையே
தொலைத்துவிட்டவன்
யாரோ ஒருவன்.
- அ.தமிழ்ச்செல்வன்
வயிறு மடியும் அளவுக்கு
குனிந்து ,நிமிர்ந்து
மிக உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தான்...
அவன் உதடுகள் எதோ
ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தன...
யாரும்புரிந்து கொள்ள முடியாத
மொழியில் அது...
உற்சாக நடத்திற்கிடையே
தன் கண்களை
விரல்களால் அழுத்தியபடியே
சில நொடிகள் நிறுத்தினான்...
மீண்டும் நடனம் தொடந்தது...
அவனை இதற்கு முன்
பார்த்ததில்லை
பேருந்து நிறுத்தத்தின்
தேனீர் கடை திட்டில் அமர்ந்திருந்தான்
சிலர் சிரித்தார்கள்,
சிலர் பரிதாபப்பட்டார்கள்
அவனின் அடுத்த சைகை எதிர்பார்ததார்கள் சிலர்...
யார் அவன்..
தன்னையே
தொலைத்துவிட்டவன்
யாரோ ஒருவன்.
- அ.தமிழ்ச்செல்வன்
Comments