ரத்த சிவப்பு நிலா தோன்றிடும் தினமான செப்டம்பர் 28ம் தேதி உலகம் அழியப்போவதாக வெளியாகிடும் தகவல்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை உலகம் அழிவதற்கான வாய்ப்பு கிடையாது என்பதால் இது தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்பிட வேண்டாம்என்று மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரைச் சேர்ந்த பிரபல வானவியல் மற்றும் ஜோதிடவியல் நிபுணர் யோகி.வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
உலகம் அழிவது தொடர்பான பல்வேறு செய்திகள் நாள்தோறும் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி வரு கிறது.விண்கல் மோதவுள்ளது,உலகப் போர் தொடங்கவுள்ளது,ஜலப்பிரளயம் வரவுள்ளது என்பன போன்ற வதந்திகள் உலகமெங்கிலும் பரவி பொதுமக்களை குழப்பிவருவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கும் ரத்த சிவப்பு நிலா தொடர்பான தகவல்கள் மக்களை மனமுடைய வைத்து வருகிறது.வரும் செப்டம்பர் 28-ம் தேதி வானில் ரத்த சிவப்பு நிலா தோன்ற இருப்பதாக வானவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள நிலையில் அன்றைய தினம் உலகம் அழியப்போவதாக தகவல்கள் வெளியாகி உலகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக அமெரிக்காவில் ரத்த சிவப்பு நிலா தோன்றிடும் செப்டம்பர் 28-ம் தேதி உலகம் அழியப்போவதாக வெளியான தகவல்களால் அந்நாட்டு மக்கள் மனநிம்மதியிழந்து தவித்து வருகின்றனர்.இதில் பெரும்பாலானோர் உலக அழிவின் போது தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் அதிகளவு உணவு மற்றும்அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க இந்தியாவிலும் செப்டம்பர் 28ம் தேதி ரத்த சிவப்பு நிலா தோன்றும் சமயத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல்கள் மக்களிடையே வேகமாக பரவி பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.ரத்த சிவப்பு நிலா தோன்றும் சமயத்தில் தீய சக்திகளின் ஆதிக்கத்தால் ராட்சத விண்கற்கள் பூமியின் மீது மோதி உலக அழிவிற்கு வித்திடும் என்று பீதியை கிளப்பிடும் பல்வேறு தகவல்கள் வலைத்தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது.இதன் காரணமாக இந்தியா முழுவதிலும் செப்டம்பர் 28ம் தேதி ரத்த சிவப்பு நிலாவால் உலகம் அழிந்திடும் என்று பொதுமக்கள் நம்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால் உலகம் அழிவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்று மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் வெங்கிடாத்திரி சந்தில் வசித்து வரும் பிரபல வானவியல் மற்றும் ஜோதிடவியல் நிபுணரான யோகி.வாசுதேவ் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார்.கடந்த 16ஆண்டுகளாக வானவியல் மற்றும் ஜோதிடவியல் குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு முக்கியமான தகவல்களை 43200 பக்கங்களில் யோகி.வாசுதேவ் எழுதி வைத்துள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக யோகி.வாசுதேவ் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில்: உலகம் அழியப்போகிறது என்று கவலையுற்று செய்திகளை பரப்பிடும் மானிடா,நமக்காக உழைத்திடும் உழவனுக்காகவே மட்டுமே நீ கவலைப்பட வேண்டும்.உலகம் என்கிற சொல் பூமியைக் குறிப்ப தாகும்.பூமித்தாயின் வயது 304128000000 ஆண்;டுகள் ஆகும்.இதில் பூமிக்கு தற்போதைய வயது 002143040000 ஆண்டுகள் ஆகும்.எனவே பூமிக்கு இன்னும் 301984960000 ஆண்டுகள் ஆயுள் இருக்கிறது.ஆகவே இது சம்மந்தமான பயம் நமக்குத் தேவையில்லை. அதே சமயம் இந்த ஆண்டு இந்தியாவில் நல்லமழை இருக்கும்.வடப பாரதத்தில் மழை அதிகமாகவும்,தென் பாரதத்தில் மழை சற்றே குறைவாகவும் இருக்கும்.மேலும் மலைக்குன்றுகளில் சரிவுகள் ஏற்படும்.எனவே மலைப்பிரதேசங்களில் வசித்திடும் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும்.உலகப்போர் வராது.உலகத்திற்கு அக்கப்போர்கள் வரும்.ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் வரும்.இந்திய தேசத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியே நீடிக்கும்.ஆட்சி மாற்றம் வராது.ஆட்சிக்குள் சிறிது மாற்றங்கள் வரும்.15.12.2017ம் தேதிக்குள் அணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துவிடும் பிரச்சனைகள் ஏதும் கிடையாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரத்த சிவப்பு நிலா தோன்றிடும் தினமான செப்டம்பர் 28ம் தேதி உலகம் அழியப்போவதாக தகவல்கள் வெளியாகி உலக மக்களிடையே பீதியை யும்,பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் உலகம் அழியப்போவதில்லை,வதந்திகளை நம்பவேண்டாம் என்று திரும ங்கலத்தைச் சேர்ந்த பிரபல வானவியல் ஆராய்ச்சி நிபுணர் யோ கி.வாசுதேவ் தகவல் தெரிவித்திருப்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.
திருமங்கலம் செல்வராஜ்
Comments