எதிர்பார்ப்பில் ஒடும் படம் பாகுபலி...


பாகுபலி  -1 உருவாக்கிய எதிர்பார்ப்பிலேயே பாகுபலி  -2 ஒடுகிறது.முதல் பகுதி ஏற்படுத்திய தாக்கம் இராண்டாம் பாகத்திற்கு உதவுகிறது. ஒரு படம் வெற்றியடைய  வேண்டுமானல் எதிபார்ப்பை உருவாக்க வேண்டும். ரஜினி படங்கள் படு குப்பையாக இருந்தாலும் படத்தை பற்றி எதிர்பார்ப்பை உருவாக்கிய படத்தை  ஒட வைப்பார்கள். விமானத்தின் மீது விளம்பரம். மலேசியாவே ரஜினிகாக காத்திருப்பதாக  ஊடகங்களில் எழுத்துவது. ஊடகங்களுக்கு விளம்பர வருவாய் அதிகமாக கிடைத்தால் போதும் என்ன வேண்டுமானாலும் எழுதும்.கூடுதலாக சினிமா நிறுவனங்களின் "கவனிப்பு" - நிருபர்கள் எப்படி வேண்டுமானலும் படத்தை பில்டப் பண்ண வைக்கும்.

                  இப்படியான விளம்பர உத்தி.மேலும் இருக்கிறது கன்னட வாட்டாள் நாகராஜ் போன்றவர்களின் எதிர்ப்பு கூடுதல் விளம்பரம். இது தான் பாகுபலி -2 படத்தின் வெற்றிக்கு ஒரு வகையில் காரணம்
                   ஆந்திர சினிமாக்களில் இன்னும் பயன்படுத்தும் ஊழுத்துப்போன பார்முலாவை விடமாட்டார்கள். அப்பாவை கொன்றவனை பலிவாங்கும் கதை.அதை வரலாற்று பிண்ணியில் சொல்லியிருக்கிறார். இதில் எந்தவித வரலாறும் இல்லைஎன்பது உண்மை .அதிதமான ஹீரோயிசம், கலர் கலரான உடைகளில் நடனங்கள்,பிரமாண்டம், இது தான் ஆந்திர சினிமா. எதிர்பார்ப்பை உருவாக்கி கல்லாகட்டும் படம். படத்தில் பிரமாண்டத்தை தவிர எதுவும் இல்லை.சினிமா என்பது பிரமாண்டம் மட்டும் தானா....

போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள். இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக பிரபாஸை பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். கூடவே கட்டப்பா சத்யராஜும் செல்கிறார்.

அவ்வாறு பிரபாஸ் செல்லும்போது குந்தலதேசத்தில் கொள்ளையர்களால் நிறைய மக்கள் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரத்தில், குந்தலதேசத்தின் யுவராணியான அனுஷ்காவையும் பார்க்கிறார். வாள் வீச்சில் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்யும் அவரது வீரத்தை கண்டு வியக்கிறார். மேலும், அவளது அழகிலும் மயங்குகிறார்.
அவளிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொண்டு, கவர நினைக்கிறார் பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸும், சத்யராஜும் குந்தலதேசத்தில் இருக்கிறார்கள் என்று ஒற்றன் மூலமாக அரண்மனையில் இருக்கும் ராணாவுக்கு தகவல் செல்கிறது. அந்த தகவலில் பிரபாஸ், அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் செய்தி இருக்கிறது. கூடவே அனுஷ்காவின் ஓவியமும் இருக்கிறது. அனுஷ்காவின் ஓவியத்தை பார்த்து ராணாவுக்கும் அவள்மீது ஈர்ப்பு வருகிறது.
அவளை தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதை தனது அம்மாவிடம் சொல்ல, அவரும் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்துவைப்பதாக உறுதி கொடுக்கிறார். பெண் கேட்பதற்கு முன்பாக விலையுயர்ந்த பொருட்களை அனுஷ்காவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய வீட்டுக்கு நேரில் வந்து பெண் கேட்க தைரியமில்லாமல், தன்னை ஒன்றும் இல்லாதவர் போல் விலையுயர்ந்த பொருட்களை அனுப்புகிறார்களே என்று பதிலுக்கு அனுஷ்கா, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பதில் கடிதம் ஒன்றை அனுப்புகிறார்.
இதனால் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன் கோபமடைகிறார். உடனே, அனுஷ்காவை கைது செய்துவர ஆணையிடுகிறார்கள். அந்த நேரத்தில் பிரபாஸ் அங்கிருக்கும் விஷயத்தை நாசர், ரம்யா கிருஷ்ணனிடம் சொல்ல, அவர் மூலமாகவே அனுஷ்காவை கைது செய்து அழைத்துவர தூது அனுப்புகிறார்கள்.
அதற்குள் குந்தல தேசத்தில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எதிர்க்க குந்தலதேசத்து வீரர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், பிரபாஸ் உள்ளே புகுந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அவரது வீரத்தை கண்டு குந்தலதேசமே வியந்து நிற்கிறது. அப்போதுதான், பிரபாஸ் மகிழ்மதி அரசாங்கத்தின் இளவரசர் பாகுபலி என்ற விஷயத்தை கட்டப்பா போட்டு உடைக்கிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மீது அவர் காதல் கொண்டுள்ள விஷயத்தையும் கூறுகிறார்.
இதைக்கேட்டு குந்தலதேச மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அதேநேரத்தில் மகிழ்மதி அரசாங்கத்தால் பறவை மூலமாக அனுப்பப்பட்ட தூது பிரபாஸ் கைக்கு கிடைக்கிறது. அன்னையின் கட்டளைப்படி அனுஷ்காவை கைது செய்யப்போவதாகவும், அதற்கு அனுஷ்கா ஒத்துழைக்கவேண்டும் என்றும் அன்பாக கூறுகிறார். முதலில் முரண்டு பிடிக்கும் அனுஷ்கா, அதன்பிறகு பிரபாஸ் அவளுடைய கற்புக்கும், மானத்துக்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் உயிருள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று கொடுக்கும் வாக்கின் அடிப்படையில் அவனுடன் செல்ல முடிவெடுக்கிறாள்.

ஒருபக்கம் ராணாவுக்கு அனுஷ்காவை மணம் முடித்துக் கொடுப்பதாக ரம்யா கிருஷ்ணன் வாக்கு கொடுத்திருக்கிறார். மறுபக்கம் திருமணம் செய்துகொள்வேன் என்று அனுஷ்காவிட்ம் பிரபாஸ் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குகளால் யார் யாருக்கு? என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது  என்பது தான் படம்..
பாகுபலி  - 2  போதும்  நிறுத்தி கொள்ளளாம்...உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments