கரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து தகவல்களை மீட்பது எப்படி.?


நாம் அனைவருமே இண்டர்னெல் மெமரி எனப்படும் நமது கருவிகளின் உள்ளடக்க சேமிப்புத் திறனை மட்டுமே கையாளுவதில்லை. தரவுகளின் எண்ணிக்கைகளுக்கும் அளவுகளுக்கும் ஏற்ற வண்ணம் நாம் நமது கருவிகளுக்கான மெமரி நீட்டிப்பு வசதி முறையான எஸ்டி அட்டைகளையும் (மெமரி கார்டு) பயன்படுத்திவருகிறோம். அப்படியான எஸ்டி கார்டை நாம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
விலை குறைவான மற்றும் அங்கீகாரமில்லாத அட்டைகளை வாங்கினால் அவைகள் மிக விரைவில் கரப்ட் ஆகி நமக்கும் நம் முக்கியமான தரவுகளுக்கும் சிக்கலை விளைவிக்கலாம். அதுபோன்றதொரு மெமரி கார்ட் கரப்ட் சிக்கலில் நீங்கள் உள்ளீர்கள் என்றால் நீங்கள் என்னென்ன வழிமுறைகள் கொண்டு உங்கள் தரவுகளை மீட்கலாம் என்பதை பற்றிய தொகுப்பே இது!

முதலில் உங்கள் கார்டில் எவ்வளவு ஸ்டோர் செய்து வைக்க முடியும் என்பதை பாருங்கள். அதாவது அதன் ஸ்டோரேஜ் கெபாசிட்டி எப்படி உள்ளது என்பதை அறிய வேண்டும். உங்கள் எஸ்டி கார்டு சாதாரண வகை அல்லது உயர் கெபாசிட்டி அடங்கியதா என்று பார்க்க வேண்டும். மெமரி அல்லோகேஷன் என்பது ஒவ்வொரு கார்டுக்கும் மாறுபட்டிருக்கும்.

உங்கள் தரவுகள் எஸ்டிஎச்சி கார்டில் இருந்தால் உங்களுக்கு ரீட் செய்வதற்கு எஸ்டிஎச்சி டிவைஸ் தேவை. சில டிவைஸ்களில் மென்பொருள் டவுன்லோட்ஸ் இருக்கும். இவற்றை பயன்படுத்தி டிவைஸை அப்கிரேட் செய்து கார்டுகளை ரீட் செய்யலாம். ஆகையால் கார்டின் உற்பத்தியாளர்கள் அளிக்கும் வெப்சைட்டுக்கு சென்று அதைப் பற்றி படியுங்கள்.

டிரைவ் லெட்டர் கணினியில் பொருத்தப்படவில்லை என்றால் கணினி ரீட் செய்யாது. சிலவற்றில் ஒரு டிரைவ் லெட்டரை ரீடர் நியமித்திருக்கும். நீங்கள் அதன் மீது கிளிக் செய்தால் உங்களுக்கு இன்சர்ட் டிஸ்க் டூ ட்ரைவ் இ (insert disk into drive E) தகவல் கிடைக்கும். அப்படியென்றால் இதனால் கார்டை ரீட் பண்ண முடியவில்லை என்று அர்த்தம்.

உங்கள் ரீடர் சில கோப்புகளை மட்டும் படித்து மற்றவற்றை விட்டுவிட்டால் ஒரு சில கோப்புகள் மட்டும்தான் பாழாகி உள்ளது என்று அர்த்தம். அதற்கு ஃபைல் ரிக்கவரி புரோகிராம்களை இணையத்தில் தேடி பிரச்சனையை முடியுங்கள்.

சில நேரத்தில் கார்டை ஸ்கேன் செய்வதால் பிரச்சனையை தீர்க்க முடியும். இது கரப்ட் ஆன கோப்பை சரி செய்ய வேண்டும் என்று இல்லை. மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ( My computer or windows explorer) கார்டை தேடி எடுத்து அதன் மீது ரைட் க்ளிக் செய்யவும். பாப் அப் மெனுவிலிருந்து ப்ராப்பர்டீஸ் மீது கிளிக் செய்யவும். இப்பொழுது டூல்ஸ் டேபை தேர்வு செய்து எரர் செக்கிங் பட்டன் (Error checking button) மீது கிளிக் செய்யவும். செக் பாக்ஸை கிளிக் செய்து கோப்பின் தவறுகளை சரி செய்யவும்.

கோப்பின் பெயர்களை டைரக்ட்ரி பட்டியலிடும். அதன் பின்பும் சரி செய்ய முடியவில்லையென்றால் டிரைவ் லெட்டர் மீது ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டீஸை தேர்வு செய்யவும். எல்லா காலி இடத்தையும் இது காண்பித்தால் ஒன்று ஃபைல் டெலீட் ஆகியிருக்கலாம் அல்லது டைரக்ட்ரீ நீங்கி இருக்கலாம். இந்த சமயத்தில் ஃபைல் ரிக்கவரி அல்லது அன்டெலீட் ப்ரோகிராம் ஃபன்க்ஷன் உங்களுக்கு உதவும்.

உங்கள் கார்ட் ஓகே என்று ரீட் செய்தும் ஃபைலை சேமிக்க முடியவில்லை என்றால் உங்கள் கார்ட் ரைட் ப்ரொடக்டட் (write protected) ஆக இருக்கலாம். இதற்கு கார்டின் ஓரத்தில் உள்ள லாக் செல்லவும். இந்த சுவிட்ச் நழுவி இருந்தால் இதை லாக்டு ஆர் ரைட் ப்ரொடக்டட் (locked or write protected) என்று உறுதிப் படுத்தி கொள்ளுங்கள். சுவிட்ச் (Switch)மூடப்படாத நிலையில் இருக்கும் பொழுது இதை சேவ் செய்யவும்.

நன்றி தீக்கதீர்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Kasthuri Rengan said…
பயன் மிகு பதிவு
Yarlpavanan said…

அருமையான தொழில் நுட்பப் பதிவு

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html