எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?
மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?
அன்றாடம் காட்சிகளை அலையவிடும் பணத்தை எங்கே தேடுவேன்?
அம்பானி அடுப்பறையில் புகைந்து விட்டாயோ?
அதானி கழிவறையில் கசங்கி விட்டாயோ?
பாஜக ஆபிசில் பதுங்கிவிட்டாயோ?
ஆர்எஸ்எஸ் ஆபிசில் அமுங்கி விட்டாயோ?
வரிசையில் நின்று மயங்கி விட்டாயோ?
வாழவழியின்றி இறந்து விட்டாயோ?
நம்பிய பேர்களை கைவிட்ட பணத்தை
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
நாசிக் அச்சகத்தில் கிழிந்துவிட்டாயோ?
நிலமாய் மாறி படுத்து விட்டாயோ?
பொன்னாய் மாறி கட்டிப்பட்டாயோ?
லாக்கருக்குள்ளே உறங்குகின்றாயோ?
ஆற்று வெள்ளத்தில் மிதந்து விட்டாயோ?
ஏடிஎம் மிசினில் சிக்கிக் கொண்டாயோ?
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
சுவிஸ் வங்கிக்கு பறந்துவிட்டாயோ?
மொரீசியஸ் பாதையில் ஓடிவிட்டாயோ?
சிங்கப்பூர், மலேசியா சேர்ந்து விட்டாயோ?
ஆஸ்திரேலிய ஆப்பிளாய் காய்த்து விட்டாயோ?
டாலராய் மாறி சிரிக்கின்றாயோ?
கண்டைனர்களில் கடந்து போனாயோ?
ரயிலில் ஓட்டை போட்டு ஓடிவிட்டாயோ?
ஏழை மக்களை பந்தாடும் பணத்தை
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
கையில் மையாய் காட்சி தந்தாயோ?- மோடி
வாயில் பொய்யாய் உதிர்ந்து விட்டாயோ?
இரண்டாயிரமாய் சாயம் போனாயோ?
கஞ்சிக்கு செத்தவனை வஞ்சிக்கும்
பணத்தை எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1952ஆம் ஆண்டு தயாரித்த ‘பணம்’ திரைப்படத்தில் ‘எங்கே தேடுவேன்’ என்ற பாடலை எழுதி பாடியிருப்பார். அதில் உள்ள ஒவ்வொரு வரியும் இன்றைக்கும் பொருந்தும். எனினும் இன்றைய சூழலுக்கேற்பவரிகள் மாற்றப்பட்டுள்ளன.
நன்றி தீக்கதிர் நாளிதழ்
Comments
https://plus.google.com/u/0/communities/110989462720435185590