ஆண்களே இல்லாத படம் தீபாவளி ரீலிஸ்...

தீபாவளிக்கு என்ன படம் ரீலிஸ் ?தீபாவளி கொண்டாட்டத்தில் மிகி முக்கிய எதிர்பார்பாக உள்ளது. இன்னும் சில தினங்களே  இருக்கும் நிலையில் புதுஉடை,இனிப்புகள் , புது செல்போன்கள் என வாங்கி குவித்து வரும்  நிலையில் என்ன படம் ரீலிஸ்  சினிமா ரசிகர்களின் கேள்வி.
                  வரும் அக்டோபர்-29, தீபாவளி தினத்தன்று  4 படங்கள் ரீலிஸ் என துவக்கத்தில் திரையுலகில் கசிந்த தகவல் . சூர்யாவின் படம் ,விஷால் படம் ,கார்த்திபடம், தனுஷ் படம்.
   சூர்யா தனது படத்தை தனது தம்பி காத்தியின்  ‘காஷ்மோரா’  படத்திற்காக தனது தள்ளி வைத்திருக்கிறார். அதேபோல விஷால் தனது நண்பரின் படம் என்பதால் அவரும் தனது படத்தை தள்ளி வைத்திருக்கிறார். இப்போது  3 படங்கள் தான் என்கிறார்கள். அதிலும் 2 படங்கள் மட்டுமே முக்கிய படங்கள். மற்றொரு படம் ஆண்களே நடிக்காத படம் என்ற  பில்டப்போடு நடிகை நதியா நடித்த  ‘திரைக்கு வராத கதை’ என்ற படம் தீபாவளி களத்தில் குதித்திருக்கிறது.

    கார்த்தி நடித்திருக்கும் ‘காஷ்மோரா’ படமும், தனுஷ் நடித்திருக்கும் ‘கொடி’ படமும் ரிலீஸாகவுள்ளன. ‘காஷ்மோரா’ படம் மிகப் பெரிய பொருட்செலவில் ‘பாகுபலி’ டைப்பில் பில்லி சூனியம் கதையில் படமாக்கப்பட்டுள்ளது.
 தனுஷ் நடித்திருக்கும் ‘கொடி’ படம் ‘புதுப்பேட்டை’ ஸ்டைலில் அரசியல் களத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே மிகப் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் என்பதால்தான் விஷாலின் ‘கத்தி சண்டை’ திரைப்படம் தீபாவளிக்கு வராமல் தள்ளிப் போயுள்ளது.
 இந்த நேரத்தில் இந்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டியிடுவதற்காக தைரியமாக களத்தில் குதித்துள்ளது ‘திரைக்கு வராத’ கதை திரைப்படம்.
இந்தப் படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவை
சர ளா, ஆர்த்தி, சபீதா ஆனந்த் மற்றும் பல முக்கிய நடிகைகள் நடித்துள்ளனர்.
இசை – M.G.குமார், பின்னணி இசை – அரோல் கொரோலி, ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர். வசனம் – துரைப்பாண்டியன். பாடல்கள் – தமிழமுதன், பரிதி, சக்தி கிருஷ்ணா. சண்டை பயிற்சி – ‘மாஃபியா’ சசி, எழுத்து, இயக்கம் – துளசிதாஸ்.
இந்தத் ‘திரைக்கு வராத கதை’ படத்தை மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர்களில் ஒருவரான துளசிதாஸ் இயக்கியிருக்கிறார். M.J.D. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.மணிகண்டன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில் இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட ஆண்களே இல்லை என்பதுதான். முழுக்க, முழுக்க பெண்களே நடித்துள்ளனராம்.
ஃபிலிம் இண்ஸ்டிட்யூட் மாணவிகள் சிலர் ஒன்று சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எடுக்கும் கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள், நிஜமாகவே உண்மை சம்பவங்களாக மாறுகின்றன. இது ஏன்.. எப்படி.. என்பதுதான் படத்தின் கதை. படத்தின் திரைக்கதை திரில்லர் கதையோட்டத்தில், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்தவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை, ராகுல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Yarlpavanan said…
இனிய தீபாவளி வாழ்த்துகள்