எல்லோருக்கும் பிடித்த நடிகராக மாறிவரும் சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன்’ படத்தைத் தொடர்ந்து நடித்து முடித்து வெளிவரும் படம் – ரெமோ.
சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.
பாண்டிராஜின் உதவியாளரான புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரஜினி முருகன் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்திலும் கதாநாயகி.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து ள்ளார்.படத்துக்கு தலைப்பு வைக்காமலே இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி பின்னர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘ரெமோ’ என்று அறிவிக்கப்பட்டது.
ரெமோ என்ற தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, இப்படத்தின் பெயர் நர்ஸ் அக்கா என்றே சொல்லப்பட்டு வந்தது.
தலைப்புக்கு ஏற்ப இப்படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதற்காக வெளிநாட்டு மேக்கப்மேனை வரவழைத்துள்ளனர்.
கடந்தகாலங்களில் தமிழ்சினிமாவில் பெண் வேடம் போடாத நடிகர்களே இல்லை.
எத்தனை ஹீரோக்கள் பெண் வேடம் போட்டால் என்ன?
அவ்வை சண்முகி படத்தில் கமல் ஏற்ற மாமி கேரக்டர் மட்டுமே தத்ரூபமாக இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க, ஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது என்ற மூடநம்பிக்கையும் திரையுலகில் நிலவுகிறது.
இதை மெய்ப்பிக்க சில படங்களை பட்டியலும் போடுகின்றனர் திரையுலகப் பண்டிதர்கள்.
பல வருடங்களுக்கு முன் பிரசாந்த் நடித்த ஆணழகன் படமும் அந்தப் பட்டியலில் உள்ளது.
முன்னணி ஹீரோவாக பிசியாக இருந்த பிரசாந்த், ஆணழகன் படத்தில் பெண் வேடத்தில் நடித்த பிறகே மார்க்கெட் இழந்தார்.
சிவகார்த்திகேயன் பெண் வேடம் போட்ட ரெமோ படம் எப்படி இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.அவருக்கு வெற்றியை தேடுதருமா?????
செல்வன்
Comments
அருமையான கண்ணோட்டம்
atrocious
sends a wrong message to youths
soon these youths would try to stop the marriages in the marriage hall
definetely not a picture with the family