அப்பா....சூப்பர்ப்பா!!!!

"அம்மா பத்துமாதம் தான் குழந்தையை வயிற்றில் சுமக்கி றாள்.அப்பா கடைசி வரை மனதில் சுமக்கிறார் " என்பார்கள். உண்மை தானே?.
அம்மாவின் பாசதத்திற்கு சற்றும் குறைந்தல்ல அப்பாவின் பாசம் என்பதை மிக சரியாக சொல்லியிருக்கிறது படம்.மிக நிண்ட நாட்களுக்கு பிறகு நல்லபடம் பார்த்த திருப்தி.
வழக்கமான படம் அல்ல.  கதாநாயகனை முன் வைத்து எடுக்கபட்ட படமல்ல. கவரச்சி ஆட்டம் இல்லை. ஆனால் கதை இருந்தது.
             ஒரு அப்பா தன் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். எப்படி வளர்க்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடவேண்டும் என்பதை அழகாக சொல்லி செல்கிறது படம்
               மேலும் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள கல்வி எந்த அளவுக்கு குழந்தைகளையும் ,பொற்றோர்களையும் பாடாய்படுத்துகிறது. கல்வி நிறவனங்களின் கட்டண கொள்ளை. தங்கள்  கல்வி நிறுவனம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை படுத்தும் பாடு.தன் பிள்ளை 100/100 எடுக்க வேண்டும் என நினைக்கும் பொற்றேருக்கு சசிக்குமார்( படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்) சொல்லும் அறிவுரை..."எல்லாரும் 100/100  வாங்குன 90,80.70 மார்கெல்லாம் யார் வாங்குறது.சாதணமான மாணவர்கள் தான் பிற்காலத்தில் சாதித்திருக்கிறார் என்பதையும் மிக அழகாக சுட்டி காட்டுகிறார்.

கதை சுருக்கமாக.....


3 அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து சாதிக்கிறார்கள் என்பதை சொல்லும் படம்தான் அப்பா.
சமுத்திரக்கனி தனது மகன் விக்னேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார். படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அவன் வாழ்க்கையில் நல்ல, கெட்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கிறார்.
அதேநேரத்தில் தம்பி ராமையா தனது மகனான ராகவனை, மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். தனது கனவுகளை, தனது லட்சியங்களை தனது மகன் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று அழுத்தம் கொடுத்து வளர்த்து வருகிறார்.
மறுமுனையில், நமோ நாராயணன் தனது மகனான நாசாத்தை எந்த வம்புக்கும் செல்லாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் இடம் தெரியாமலேயே வாழவேண்டும் என்று அறிவுரை கூறி வளர்த்து வருகிறார். இந்த மூன்று குடும்பங்களும் ஒரே பகுதியில் வசிக்கின்றன.
இப்படியாக வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து வரும் குழந்தைகளின் வாழ்க்கை எந்த நிலைக்கு சென்றது என்பதை எடுத்துச் சொல்லும் படமே ‘அப்பா’.
          படம் நல்ல கருத்தை சொன்னாலும்,கதை சொன்ன விதம் சற்று செய்தி பூர்வமாக இருப்பதாக படுகிறது. எப்படி யிருந்தாலும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments