புதன் சூரியனை கிராஸ்பண்ணும் போது அது சூரியனோடு முகத்துல மச்சம் இருக்குறமாதரி அழகாக இருக்கும். சில மணி நேரங்களே நீடிக்கும்.ஏற்கனவே சூரியனின் முகத்தில் சிறுசிறு புள்ளிகள் இருக்கின்றன. அவை சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவான பகுதிகளாகும். அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை 5800 கெல்வின். இதில் சில இடங்களின் வெப்பம் குறைவான சூரிய புள்ளிகள் இருக்கும் . இந்த பகுதி பொதுவாக குளிர் பகுதி என்றும் சொல்லப்படுகிறது. இங்கே எவ்வளவு வெப்பம் இருக்கும் . சூரியனின் மேற்பகுதியை விட 1200 கெல்வின் மட்டுமே குறைவு. சூரியப் புள்ளிகளில் , சுமார் 3800 கெல்வின் வெப்பம் காணப்படும்.ஆனால் சூரியனுக்கு வெளியிலிருந்து பார்ப்பதற்கு இந்தப் பகுதி மற்ற இடங்களை விட கருப்பாகவும், தெளிவான கருப்புப்புள்ளியாகத் தெரியும். . சில சூரியப் புள்ளிகளின் விட்டம் 50,000 கி.மீ.அளவு கூட இருக்கும்.
ஆனால் இப்போது சூரிய மண்டலத்தின் முதல் கிரகமான புதன் ஒரு புதிய மச்சத்தை உருவாக்கப்போகிறது. அழகாக வட்ட வடிவிலான மச்சத்தை போல ஒரு புள்ளியை உருவாக்கப்போகிறது.
சூரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை புதன்...
சூரிய குடும்பத்துல 3 வது கிரகம் நம்ம பூமி.முதல் கிரகம் புதன். சூட்டெரிக்கிற தாய் சூரியனோட ரெம்ப நெருக்கமா இருக்குற முதல் குழந்தை புதன். சூரியனுக்கு பக்கத்துல இருக்குறதுனால ரெம்ப வேகமாக சுற்றுகிறது.வெறும் 88 நாள்(87.969) தான் சூரியனை சுற்றி முடித்து விடுகிறது.
ஆனால் தன்னை தானே சுற்றி முடிக்க 116 நாள் எடுத்துக்கொள்கிறது. அதாவது புதன் கிரகத்தோட ஒருநாள் பூமியோட 116 நாளுக்கு சமம்.
ரோமனியர்கள் கடவுளின் தூதர்,வேகமாக ஒடும் தேவதை என்ற பெயரில் புதனை மெர்குரி என அழைத்தனர். ஆனால் சுமேரியர்கள் தான் 5000 ஆண்டுகளுக்கு முன்பு புதனை கண்டுபிடித்தனர்.நபு எனப்படும் எழுத்துக்கடவுளோடு தொடர்புபடுத்தினர்.காலை மற்றும் மாலை நேரங்களில் புதனை வேறு வேறு பெயரால் அடையாளப்படுத்தினர். ஆனால் இரண்டும் ஒரே கிரகம் தான் என கண்டுபிடித்தவர்கள் கிரோக்கர்கள்.புதன் கிரகத்துக்கு வளிமண்டலம் இல்லை,நிலாவும் இல்லை.புதன் இரவு நேர குளிர் -173 டிகிரி செல்சியஸ்,பகலில் இரும்பு கூட உருகுற வெப்பம் 427 டிகிரி செல்சியஸ்.சூரியனில் யிருந்து புதன் சுமார் 46,000,000 யிருந்து 70,000,000 கிமீ தூரத்தும்.பூமியிலிருந்து 84 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது.
புதன் உருவாக்கப்போகும் மச்சம்...
சூரியகிரகம் ஏப்படி உருவாகுது அப்படின்னு நமக்கு தெரியும். சூரியன்,பூமிக்கு இடையே சந்திரன் வரும் போது சூரியகிரகம் ஏற்படுகிறது. பூமிக்கு பக்கத்தில் சந்திரன் இப்பதால் வருடத்திற்கு அதிகப்பட்சமாக 2 அல்லது 3 சூரியகிரகம் ஏற்படும்.சூரியகிரகம் ஏற்படும் போது சந்திரன் நிழல் முழுமையாவோ அல்லது ஓராளவாவது சூரியனை மறைக்கிறது.
சூரிய கிரகம் மாதரியே தான் இப்போ பூமி,சூரியனுக்கு இடையில் புதன் கிரகம் வரப்போகுது. புதன் கிரகத்தோட நிழல் சூரியன் மேல ஒரு மச்ச அளவுள விழப்போகுது. புதன் சின்ன கிரகம்,பூமியிலிருந்து தூரம் அதிகம் அதனால புதன் கிரகத்தோட நிழல் சின்னதா சூரியனோட மேல்பரப்புல சில மணிநேரம் நகர்ந்து போகப்போகுது.
இதை புதன் கிரகணம் என்று சொல்லலாம். ஆனால் முழுமையாக சூரியனை மறைக்க முடியாத காரணத்தால் இதை புதன் இடை மறிப்பு அப்படின்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.புதன் சூரியனுக்கு பக்கத்துல இருக்குது ,வேகமா சுத்துறது நாள இந்த இடை மறிப்பு 100 வருஷத்துல 13 -14 தடவையாவது ஏற்படுது.2016 -மே.9 தேதிதான் புதன் கிரகம் சூரியனை இடைமறைப்பு செய்யபோகுது.1999,2003,2006 ல இதுக்கு முன்னால புதன் இடை மறைப்பு நடந்திரு க்கு.இந்த இடைமறைப்பு மே,நவம்பர் மாதங்க ளில் மட்டுமே நடக்கும்னு கண்டுபிடிச்சிருகக்காங்க. புதன் இடைமறைப்பு 1585 க்கு முன்னாடி ஏப்ரல்,அக்டோபர் மாதங்களில் நடந்ததாகவும் ,கடந்த 500 ஆண்டுகளில் மே,நவம்பருக்கு மாறிவிட்டாதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
மே 9ம் தேதி நடக்கவுள்ள புதன் இடை மறிப்பின் போது புதன் கிரகத்தின் நிழல் சூரியனின் மேல் மெல்ல நழுவிச்செல்வது அழகான காட்சியாகும். இதனை நல்ல சூரிய கண்ணாடி மூலமாக பார்க்கலாம்.அல்லது சூரிய பிம்பத்தை தொலைநோக்கி மூலமாக வெள்ளை பேப்பரில் பிடித்து பார்க்கலாம்.சூரியன் மீது புதன் நிழல் விழத்தொடங்கி ,கடைசியாக விலகும் நேரம் வரையிலான 5 கட்டங்களை கொண்டது இடை மறைப்பு நிகழ்ச்சி.மே 9 நடக்கும் புதன் இடைமறைப்பு இந்திய நேப்படி மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது.அமெரிக்கா,அட்லாண்டிக்,பசிபிக் பெருங்கடல் ,ஐரோப்பா,ஆப்பிரிக்கா, ஆசியா, வின் பெரும்பகுதிகளில் தெரியும். ஆனால் கிழக்கு ஆசியா ஐப்பான்,இந்தோனேஷியா,ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதிகளில் தெரியாது.
ஏற்கனவே சொன்னது போல பாதுகாப்பான முறையில் புதன் இடைமறைப்பை பார்க்க முயற்சிக்காலம்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றன. அடுத்த புதன் இடைமறைப்பு பார்க்க 2019 வரை காத்திருக்க வேண்டும்.
செல்வன்
தமிழ்வாசல் இதழில் வந்துள்ளஎனது கட்டுரை
Comments