சொந்த பந்தங்கள் கூடியிருக்க உருமி மேளத்துடன் மணமகன், மணமகள் கழுத்தில் தாலிகட்டினார் பின்பு முறைபடி கல்யானி குதிரையில் வலம் வந்து சமுதாய சடங்ககளுடன் மணப்பெண்ணை கரம்பிடித்தார்.
இருவீட்டார் குலப்பெருமைகளை வயதான பெண்கள் ராகத்துடன் பாடிய வண்ணம்மிருந்தனர் சமுதாய பெரியவர்கள், இளைஞர்கள் என மணமக்களை வாழ்த்தி அவர்களை மகிழ்விக்க பாரம்பரிய நடமான தேவராட்டத்தை ஆடினர் தெரு முழுவதும் தேவராட்டம் ஆடியவாரே ஊர்வலமாக இருவரையும் அழைத்து சென்றனர்.
திருமண செய்யும் முறைகுறித்த வீடியோ பதிவு...
சமுதாயத்தில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற ஏற்ற, தாழ்வு இல்லாமல் அனைவரும் சரிசமம் என்பதை உணர்த்துவதற்காக முன்னோர்கள் காட்டிய வழிகாட்டுதலின் படி திருமணங்களை நடத்துவதாகவும் வரும் சந்ததியரும் இப்ழக்கத்தையே நடைமுறைபடுத்துவோம் என்கின்றனர் இந்த ஊர்மக்கள். கோடிகணக்கில் பணம் செலவலித்து ஆடம்பர திருமணம் நடத்தும் இவ்வேளையில் தங்கள் கலாச்சாரத்தை மட்டுமே இந்த சமூக மக்கள் பெரிதாக எண்ணிவாழ்கின்றனர்.
தகவல்- புகைப்படங்கள்
தெய்வேந்திரன்
தொகுப்பு
செல்வன்
Comments