சென்னை - கோவையை கலக்கும் புதிய மொபைல் செயலி...

சென்னை ,கோவை நகரங்களுக்கு புதிதாக செல்பவர்களுக்கு   ஒரு குறிபிட்ட இடத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவிப்பார்கள் . எந்த பஸ்ஸில் போகலாம்? நாம் போக வேண்டிய இடம் எவ்வளவு தூரம் இருக்கும்? இப்படி பல பிரச்சனைகள் இருக்கும்  . இந்த பிரச்சனையை எளிதாக ஒரு செயலி மூலமாக தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள் சில இளைஞர்கள். அந்த இளைஞர்களில் ஒருவரான .
  ஹரிகிருஷ்ணன் என்பவர் கூறியதாவது : 2011 ம் ஆண்டு சென்னை ஐஐடியில் சித்தார்த், அகிலேஷ் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூவரும் படித்து வந்தனர். படித்து முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் மூவரும் இணைந்து தாங்களே ஏதாவது புதிய மொபைல் செயலியை உருவாக்கி மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த முடியுமா என யோசித்தனர்.
அதற்கான முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவுதான் இன்று, ராஃப்ட் என்ற மொபைல் செயலி. இதனை ஒருவர் தங்களின் மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று டவுன்லோடு செய்து கொண்டால் போதும். அவர் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் எந்த முனையில் இருந்தும் எளிதாக உரிய இடங்களுக்கு பேருந்து, மற்றும் ரயில்களில் சென்று வரமுடியும். அதாவது இந்த மொபைல் செயலியில் ஒருவர் தான் நின்று இருக்கும் இடத்தில் இருந்து எங்கு செல்ல வேண்டும் என டைப் செய்து தேடினால் போதும், உடனே அந்த வழியில் எந்த நம்பர் பேருந்து வரும், அது எந்த வழியாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும். அங்கிருந்து வேறோரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், அந்த இடத்தில் இருந்து எந்த பேருந்து, மற்றும் ரயில் செல்லும் என்ற விபரங்கள் அனைத்தும் வந்து விடும்.

  ராஃப்ட் டவுன்லோடு செய்ய...

   ராஃப்ட் 


இந்த மொபைல் செயலி முதன்முதலில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் 2300 பேருந்து நிறுத்தங்கள், 500 பேருந்து வழித்தடங்கள், அந்த பகுதியில் எந்த பேருந்து வரும்,
அதன் எண் எத்தனை, எந்த வழியாக செல்லும், எத்தனை மணிக்கு வரும், எத்தனை மணிக்கு சென்றடையும் என்ற விபரங்கள் உள்ளடங்கியிருக்கிறது. இதனை கொண்டு ஒருவர் மிகவும் எளிதாக சென்னையின் எந்த மூலையில் இருந்தும், போக வேண்டிய இடத்திற்கு குழப்பம் இல்லாமல் சென்று திரும்பலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர்டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதே மொபைல் செயலி தற்போது, கோவையை மையமாக கொண்டு பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கும் செயலியில் பல்வேறு விபரங்கள் கிடைக்கின்றன.
இதனை இன்னும் மேம்படுத்தும் பணியில் எங்கள் ( ராஃப்ட்) நிறுவனத்தின் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த செயலியை 2ஜி நெட்ஒர்க் உள்ளிட்டவற்றிலும் மிக எளிதாக பயன்படுத்த முடியும். காரணம் இதன் அளவு 3 எம்பிதான். பொதுவாக கூகுள் மேப்பில் பல்வேறு விபரங்கள் கிடைக்கும். ஆனால் எந்த வழித்தடத்திற்கு எந்த எண் கொண்டபேருந்து, எந்த வழியாக செல்லும் என்பது போன்ற மேம்படுத்தப்பட்ட தகவல்களு டன் இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் எங்களால் இந்த அளவிற்கு விரைவாக மக்களை சென்றடைய முடிந்திருக்கிறது என்கிறார் ஹரி கிருஷ்ணன்.
தகவல் தீக்கதீர்
தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments