2011ல் வெளிவந்த பிரெஞ்சு திரைப்படமான ‘ஸ்லீப்லெஸ் நைட்’ (பிரெஞ்சில் ‘nuit blanche’) தமிழில் அதிகாரபூர்வமாக தூங்காவனம் .
2011 டொரொண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, விமர்சகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தமிழில் மட்டுமின்றி, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் வேடத்தில் ஆங்கிலத்தில் ‘Django Unchained’ புகழ் ஜேமீ ஃபாக்ஸ் நடிக்கிறார்.
தூஙகாவனம் படத்தின் கதை என்ன?
கமல்ஹாசன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு போதைக் கடத்தல் கும்பலோடு மோதுகிறார்.அந்த கும்பலின் தலைவன், கமலை அடக்குவதற்காக இவரது மகனை கடத்துகிறான்.
போலீஸ் மடக்கிய போதைப்பொருளை, போதை வியாபாரிகளிடம் கமல்ஹாசனே விற்றுக் கொடுத்தால்தான் மகனை உயிரோடு பார்க்க முடியும் என்பது நிபந்தனை.
தூங்காவனம் உருவான விதம் வீடியோ..
ஒரே இரவில் ஒரு நைட் கிளப்பில் கதை நடக்கிறது. தன்னுடைய பணி நேர்மையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், மகனையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலையில் போதைக்கும்பல் தலைவனோடு கமல்ஹாசன் ஆடும் கேட் & மவுஸ் விளையாட்டுதான் ‘தூங்காவனம்’.
கமலின் புதிய கெட்டப்
ஒரிஜினல் பிரெஞ்சுப் படத்தின் சண்டைக்காட்சிகள் வெகுவாக பாராட்டப்பட்டவை என்பதால், அப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்களையே இந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
திரிஷா,பிராகாஷ்ராஜ்,கிஷோர், உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.கமல்ஹாசனிடம் நீண்டகாலமாக அசோசியேட்டாக பணிபுரிந்த ராஜேஷ் செல்வா, இந்த படம் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார்.
தெலுங்கிலும் ‘சீகட்டி ராஜ்யம்’ என்று இப்படம் வெளியாகிறது. தீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாக வெளியாகிறது என தகவல்
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
2011 டொரொண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, விமர்சகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தமிழில் மட்டுமின்றி, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் வேடத்தில் ஆங்கிலத்தில் ‘Django Unchained’ புகழ் ஜேமீ ஃபாக்ஸ் நடிக்கிறார்.
தூஙகாவனம் படத்தின் கதை என்ன?
கமல்ஹாசன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு போதைக் கடத்தல் கும்பலோடு மோதுகிறார்.அந்த கும்பலின் தலைவன், கமலை அடக்குவதற்காக இவரது மகனை கடத்துகிறான்.
போலீஸ் மடக்கிய போதைப்பொருளை, போதை வியாபாரிகளிடம் கமல்ஹாசனே விற்றுக் கொடுத்தால்தான் மகனை உயிரோடு பார்க்க முடியும் என்பது நிபந்தனை.
தூங்காவனம் உருவான விதம் வீடியோ..
ஒரே இரவில் ஒரு நைட் கிளப்பில் கதை நடக்கிறது. தன்னுடைய பணி நேர்மையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், மகனையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலையில் போதைக்கும்பல் தலைவனோடு கமல்ஹாசன் ஆடும் கேட் & மவுஸ் விளையாட்டுதான் ‘தூங்காவனம்’.
கமலின் புதிய கெட்டப்
ஒரிஜினல் பிரெஞ்சுப் படத்தின் சண்டைக்காட்சிகள் வெகுவாக பாராட்டப்பட்டவை என்பதால், அப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்களையே இந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
திரிஷா,பிராகாஷ்ராஜ்,கிஷோர், உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.கமல்ஹாசனிடம் நீண்டகாலமாக அசோசியேட்டாக பணிபுரிந்த ராஜேஷ் செல்வா, இந்த படம் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார்.
தெலுங்கிலும் ‘சீகட்டி ராஜ்யம்’ என்று இப்படம் வெளியாகிறது. தீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாக வெளியாகிறது என தகவல்
தொகுப்பு
செல்வன்
Comments