பூமிக்கு செப்டம்பர் 28 ல் - ஆபத்து


இந்த  மாதம் 15 மற்றும் 28 தேதிகளுக்குள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவிருப்பதாகவும், இதனால் ஏற்படும் பெரும் சேதத்தால் பூமி தனது அழிவை சந்திக்கும் என்றும் பரபரப்பான தகவல் வெளிநாட்டு ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.
பல இணையதளங்கள் விண்கற்களை தாங்கள் பின்தொடர்வதாகவும் அவை பூமியை நோக்கி விழ இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பீதி கிளப்பப்படுகிறது.

ஆனால் இது போன்ற வதந்திகளும் ,பரபரப்பான தகவலும் பல முறை உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2012 ம் ஆண்டு உலக அழியும் என பரபரப்பு கிளம்பியது. தென் அமெரிக்க பகுதியில் வாழந்த மாயன் இன மக்கள் உருவாக்கிய காலண்டர் 2012 முடியவாதகவும் அதனால் உலகம் அழிவது உறுதி என அடித்துச்சொன்னார்கள். 1,400 கோடி செலவில் 2012 உலக அழிவை படமெடுத்து அதை விட பல மடங்கு லாபம் பார்த்தது ஹாலிவுட் சினிமா .

      35 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்கைலேப் என்படும் அமெரிக்க செயற்கைகோள் கட்டுப்பாட்டை  இழந்து பூமியை நோக்கி வருவதாகவும்,அந்த செயற்கை கோள் பூமியில் மோதினால் உலக அழிய வாய்ப்பிருப்பாதாக பரபரப்பாக பேசப்பட்டது.  இப்போது  இருப்பது போல அறிவியல் விழிப்புணர்வு இல்லாத காலம் அது.கிராமங்களில் தங்கள் வளர்ப்பு பிராணிககளான ஆடு,கோழி அடித்து சாப்பிட்டுவிட்டு புத்தாடை அணிந்தது உலக அழிவுக்காக காந்திருந்த காமடி  கதைகள் பல உண்டு.

செப்டம்பர் 18- 28 உலகம் அழியுமா? இல்லையா?

 "பூமியை நோக்கி விண்கல் விழும் என்பதான கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த தேதிகளைத் தாண்டியும் எந்த விண்கல்லும் பூமியை தாக்காது என்கிறார் நாசா மேலாளர் பால் சடோஸ் .
மேலும்... நாங்கள் தொடர்ந்து அதனை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இதுபோல எந்த பாதிப்பும் பூமிக்கு இருக்காது என்பது உறுதி. அத்தகைய தூரத்தில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் எதுவும் பூமியை நோக்கி வரவில்லை. அவ்வாறு ஏதேனும் விழுந்தாலும் பாதிப்பு வெறும் 0.01 சதவீதமே வாய்ப்பு இருக்கும்"
            விழுகாது அல்லது விழுகும் என்று சரியாக சொல்லாமல் விழுகாது ... விழுந்தாலும் பாதிப்பு இருகக்காது என்கிறார்.

விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன...?

பூமியில் விண்கற்கள் விழுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். மேகங்கள் இல்லாத இரவு நேர வானத்தை தொடந்தது கவனித்தால் திடீரென தீப்பிடித்து சற்று தொலைவில் காணமல் போகும் நிகழ்ச்சியை பார்க்கலாம். சிறிய கற்களாக இருந்தால் அவை பூமியின் வளிமண்டலத்திலேயே   எரிந்தது போகின்றன. சில கிலோமீட்டர்கள் அகலம் உள்ள எரிகற்கள் பாதி எரிந்த நிலையில் பூமியை அவ்வப்போது தாக்துவது உண்டு. அதிலும் குறிப்பாக செப்டம்,நவம்பர் மாதங்களி அதிகமாக எரிகற்கள் விழுவதை பாக்கலாம்.ஏன் என்றால் எரிகற்கள் அதிகமாக உள்ள பாதையில் பூமி பயணம் செய்கிறது.
              இந்த எரிகற்கள் சூரியமண்டலத்தில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கு இடைப்பட்ட பகுதியில்  பல லட்சக்கணக்கில் சுற்றி வருகின்றன.இவை எப்போதுதாவது பாதை மாறும் போது  பூமியின் ஈர்ப்பு விடையால்   எரிகற்களாக விழுகின்றன.
இந்த எரிகற்கள் எப்படி உருவாகின என்பது குறித்து 2 கருத்துக்கள் உள்ளன. ஒன்று முழுமை பெறாத ஒரு கிரகத்தின் எச்சம் என்கிறார்கள். இராண்டாவவதாக செவ்வாக்கும் ,வியாழனுக்கும் இடையிலிருந்த ஒரு கிரகம் எதோ ஒரு காரணத்தால்  வெடித்து சிதறியதல் உருவானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதற்கு முன்னால் பூமி மீது விண்கற்கள் மோதி இருக்கிறதா?

மோதி இருக்கிறது. ஒரு முறையல்ல பல முறை.ரஸ்யாவின் லெனின் கிராண்ட் நகரதிற்கு அருகே விண்கற்கள் மோதியிருக்கின்றன. மோதி இடத்திலிருந்து பல மைல் துரத்திற்கு மரங்கள் ,அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்த ரெயின்டீர் மான்கள் உள்ளிட்ட் பல விலங்குகள் கருகிப்போயின.


டைனோசர்களின் அழிய காரணம் வால்வீண்மீன்கள் மோதலே...

வீண்கற்களை போலவே வால்வீண்மீன்கள் என அழைக்கப்படுகிற வால் நட்சத்திரங்களினாலும் பூமிக்கு பாதிப்பு உண்டு.
வால்விண்மீன் என்று அழைக்கப்படுகிற வால்நட்சத்திரங்கள் தாக்குதல்
குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறுகிறது.நிறைய வால்நட்சத்திரங்கள் சூரியமணிடலத்தின் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து கொண்டிருக்கின்றன.அவற்றில் எதாவது ஓன்று எப்போதாவது பூமியை தாக்கும்...ஆனால் அதிஷ்டவசமாக இதுவரை மனித குலத்தை தாக்கியதாக  தெரியவில்லை.
சில மைல் குறுக்களவுள்ள வால்விண்மீன்கள் பூமியில் மோதினாலே 100 கிமீ துரத்திற்கு பாதிப்புக்குள்ளாகும்.காற்றில் தூசி  பரவி பூமியில் பலமாதங்கள் வெயிலே பாடாமல் செய்துவிடும். தாவரங்களும் அவற்றை உண்டு வாழும் உயிரனங்களும் நாம் உட்பட செத்துப்போவோம்.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படியான வால்நட்சத்திரம் மோதியதால் தான் பூமியில் நமக்கு முன் வாழ்ந்த மிக பெரிய உயிரனமான டைனோசார்கள்  வேறு பல விலங்குகளும்,தாவரங்களும் அழிந்து போயின.
 இதை விட மோசமான விபத்துகளும் நடத்திருக்கின்றன. 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஓரு வால் நட்சத்திரம் பூமியை  தாக்கி அப்போது இருந்த 90 சதவீதமான உயரினங்கள் அழிந்து போனதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அப்போது அழியாமல் இருந்த உயரினங்களின்  தான் படிபடியாக வளர்ச்சியடைந்து வந்தன.ஆனால் அவற்றின் உருவம் ,வாழ்க்கை முறையும் முற்றிலுமாக மாறிவிட்டன.

மீண்டும் இது போல ஏற்படுமா?

26 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை வால்வீண்மீன் தாக்குதல் திரும்ப திரும்ப நடைபெறுவதாக சொல்கிறார்கள் விஞ்ஞானிகள் .கடைசியாக 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படியான பேரழிவு  ஏற்பட்டிருக்கிறது. அடுத்த பேரழிவு ஏற்பட இன்னும் 13 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம்

பூமிக்கு மேலும் சில ஆபத்துக்கள்..

பூமியில் ஏற்பட கூடிய பல அழிவுகளுக்கு மனிதர்களாகிய நாம் தான் காரணம்.நாம் வாழும் பூமியை பல முறை அழிக்க கூடிய அணுஆயுதங்கள் உலகநாடுகளின் கையில் உள்ளன. இது போக சுற்றுச்சூழலை  கெடுத்து புதிய நோய்களை உருவாக்கி  நம்மை நாமே அழித்துவருகிறோம்.பூகம்ப அழிவினால் இறந்து போகிறவர்களை விட போர் போன்ற காரணங்களால் அழிந்து போகிறவர்கள் அதிகம்.
இயற்கைக்கை எப்போது வேண்டுமானலும் நம்மை அழிக்கும் உரிமை இருக்கிறது.
 சுமார் 150 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 2020 ம் ஆண்டு சூரிய பூயலால் பூமிக்கு ஆபத்து  ஏற்படலாம் என்கிறார்கள்.
அடுத்த 17 ஆண்டுகளில் மற்றொரு ராட்சத விண்கல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளது. 1300 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.
அது 2032–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ம் தேதி பூமியை தாக்கும் ஆபத்து உள்ளது. இதை உக்ரைன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு வேளை இக்கல் பூமியை தாக்கினால் ஒரு மிகப் பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்பை விட இது 50 மடங்கு கூடுதலாகும்.
அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என பெயரிடப்பட்டுள்ளது.
இதே போன்று மற்றொரு ராட்சத விண்கல் விண்வெளியில் சுற்றி வருவதாகவும், பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலுக்கு 2007 வி.கே 184 என பெயரிடப்பட்டுள்ளது.
சூரியன்  500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு செம்பூத நட்சத்திரமாக வடிவெடுக்கும். அப்போது அது அருகில் உள்ள கிரகங்களை விழுங்க ஆரம்பிக்கும்.புதன், வெள்ளி பிறகு பூமியையும் சூரியன் விழுங்கும்.
நம் காட்டுப்பாட்டை மீறி சக்திகளால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். செப்.15 - 28 உலக அழிவு வெறும் புரளியாகத்தான் இருக்கும் என நம்புவோம்?????

செல்வன்
தமிழ்வாசல்  செப்டம்பர்மாத இதழில் 
வெளிவந்துள்ள எனது கட்டுரை



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Unknown said…
அருமையான பதிவு

மேலும் அதன் விடியோ ஆதாரங்கள் இங்கே

http://vriddhachalamonline.blogspot.in/2015/08/23-2015.html