நாம் வாழும் சூரியமண்டலத்தின் கடைசி கிரகத்திற்கு hello சொல்லிவிட்டோம். 480 கோடி கிலோமீட்டர் தூரம், 9 ஆண்டுகள் பயணம் செய்து வெற்றிகரமாக பூளூட்டோ கிரகத்தை அடைந்திருக்கிறது அமெரிக்காவின் நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் .பூமியிலிருந்து பார்க்கும் போது அமெரிக்காவின் வெற்றியாக தெரியும் ஆனால் இந்த வெற்றி ஒட்டுமொத்தமாக மனிதகுலத்தின் வெற்றி.
‘நாசா’வை சேர்ந்த விஞ்ஞானி ஜான் கிரன்ஸ்பெல்டு, ‘‘புளூட்டோ கிரகத்தை நியூ ஹாரிஸன்ஸ் விண்கலம் சென்றடைந்திருப்பது மனித குல வரலாற்றில் உன்னதமான தருணம்’’ என குறிப்பிட்டார்.
11 வயது சிறுமியின் யோசனை....
சூரியமண்டலத்தில் சனி கிரகம் வரை பலநூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு நாள்காட்டியில்(காலண்டர்) பயன்படுத்திவருகிறோம்.சனிகிரகம் வரை வெறும் கண்காளால் பார்க்கலாம்.நம் முன்னோர்கள் அவற்றை தொடர்ந்து கண்காணித்து ஜோதிடம் ,பஞ்சாங்கம் வரை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு, யுரேனஸ் கிரகம் 1781-ம் ஆண்டிலும் நெப்டியூன் 1846-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், 84 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க விஞ்ஞானியான கிளைட் டாம்போ 1930-ல் புளூட்டோவைக் கண்டுபிடித்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கூறிய யோசனையின் பேரில் புளூட்டோவுக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.
பூளூட்டோ வின் பயோடேட்டா..
1.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 6 நாள் 9 மணி 6 நிமிடம்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 248 வருடம் 197 நாள் 5.5 மணி
3.சூரியனில் இருந்து சராசரித் தூரம் - 5 906 376 200 கிமீ அல்லது 39.48 AU
4.மையத்தின் ஊடாக விட்டம் - 2320 கிமீ
5.தனது அச்சில் சாய்வு - 119.61 பாகை
6.சுற்றுப் பாதையில் வேகம் - 4.7490 Km/s
7.மேற்பரப்பளவு - 17 மில்லியன் Km2
8.நிறை - 1.290 * (10 இன் வலு 22) Kg
9.சராசரி அடர்த்தி - 2.05 g/cm3
10.மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 0.6 m/s2
11.தப்பு வேகம் - 1.2 Km/s
12.எதிரொளி திறன் - 0.3
13. புளூட்டோவின் வெப்ப நிலை -235 டிகிரி
14.துணைக் கோள்கள் - 5
15.மேற்பரப்பு அழுத்தம் - 0.01 Kpa
வளி மண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதம் -
1.நைட்ரசன் - 90%
2.மீதேன் - 10%
மேற்கண்ட தகவல்கள் நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் பூளூட்டோவை ஆய்வு செய்வதற்கா முன்னாள் கிடைத்த தகவல்கள் . இப்போது இன்னும் புதிய தகவல்கள் கிடைக்கும்.
அந்தஸ்த்தை இழந்து போன பூளூட்டோ...
என்னோட பரம்பர ,அந்தஸ்து,கெளரவம் எல்லாம் போச்சு என்று சிலர்,குறிப்பாக ஊர் பெரிசுகள் அடிக்கடி அந்தஸ்து குறித்து அலட்டி கொள்வார்கள்.2006 ம் ஆண்டில் பூளூட்டோ கிரகமும் - கிரக அந்தஸ்தை இழந்தது.
பராகுவேயில், நடந்த சர்வேதச வானியல் நிபுணர்கள் மாநாட்டில் இந்த நூற்றாண்டின்மிக பரபரப்பான, மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகெங்கும் இருந்தும் 75 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வானியல் ஆராய்ச்சிகள் சுமார் 2,500 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். புளூட்டோ கிராகத்தின் பாதை நெப்ட்யூன் கிரகத்தின் வளையத்திற்குள் வருவதால்,புளூட்டோவை தனி கிரகமாக கருத முடியாது . மேலும்,நவக் கிரகம் என்ற நிலை மாறி இனிமேல் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன் ,சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய 8 கிரகங்கள் மட்டுமே சூரிய குடும்பம் எனஅழைக்கப்படும் என 2006 ல் ஆறிவித்தார்கள்.
ஒரு விண்வெளி பொருளை கிரகமாக ஏற்றுக்கொள்ள
1.சூரியனை ஒரு சுற்றுப் பாதையில் சுற்றி வர வேண்டும்.
2.கிட்டத்தட்ட கோள வடிவம் எனக் கருதத் தக்க நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
3.தனது ஈர்ப்பு விசை காரணமாக தனது சுற்றுப் பாதையின் அண்மையில் அமைந்துள்ள பொருட்களை இல்லாமல் செய்திருக்க வேண்டும்
மேற்கண்ட 3 நிபந்தைகளும் பூளூட்டோ வுக்கு பொருந்தாததால் அந்தஸ்தை இழந்து போனது ...
நம்ம நிலாவை விட சிறியது.....
ஏரிஸ் என்ற குட்டி கிரகம் 2005-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குட்டிகிரகத்தை விட சிறியதாக இருக்கிறது புளூட்டோ கிரகம்.சுருக்கமாக சொன்னால் நம்ம நிலாவை விட மிகமிக சிறியது பூளூட்டோ .
வியாழனிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு சந்திரனே புளூட்டோவானதாகவும் அல்லது சூரிய மண்டலத்தில் சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் சென்ற விண்கல் ஒன்று இறுதியில் புளூட்டோவாகி சூரியனைச் சுற்றி ஒழுக்கில் வர ஆரம்பித்ததாகவும் இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. புளூட்டோ கரும் பாறைகளால் ஆன தரையையும் பனிக்கட்டிகளையும் உடைய கிரகமாகும்.
சூரியனிலிருந்து புளூட்டோ சுமார் 591 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் ...
பூளூட்டோ கிரக அந்தஸ்தை இழந்த அதே 2006 ம் ஆண்டு தான் நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் அனுப்பப்பட்டது.அமெரிக்காவில் இன்னமும் பலர் புளூட்டோவை ஒரு கிரகம் என்றே கருதுகின்றனர். புளூட்டோவைக் கண்டுபிடித்தவர் ஒரு அமெரிக்கர் என்பதும் அதற்கு ஒரு காரணமாகும். .
புதன்,வெள்ளி, வியாழன், சனி ,செவ்வாய் யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கி ஆராய்வதற்கு ஏற்கனவே பயனீர், வாயேஜர் உட்பட பல ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்பட்டன. அந்த விண்கலங்கள் கிரகங்களையும் நெருங்கிச் சென்று அவை பற்றிய தகவலகளையும் ப்டங்களையும் அனுப்பின. அதிலும் வாயேஜர் விண்கலம் நமது சூரிய மண்டலத்தை கடந்து எல்லையற்ற பிரபஞ்சத்தில் புகுந்து விட்டது. புளூட்டோ ஒன்று தான் மீதி இருந்தது.
2006-ம் ஆண்டு, ஜனவரி 19-ந் தேதி ‘அட்லஸ் வி- 551’ ராக்கெட் மூலம் ‘நியூஹாரிஸன்ஸ்’ என்ற விண்கலத்தை புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ...
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்டது. அதாவது மேற்கண்ட வரியை படிப்பதற்கு முடிக்கும் போது 1000 கிமீ தூரம் கடந்திருக்கும். ஒரு நாளில் பத்து லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. இவ்வளவு வேகத்தில் செல்லும் நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தின் மீது நெல் மணியளவு தூசி மோதினால் கூட விண்கலம் சிதறிப்போகும் வாய்ப்பு இருக்கிறது.
இதுவரையில் நாஸாவின் எந்த விண்கலமும் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது கிடையாது. ஒரு விண்கலம் சூரிய மண்டலத்தின் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல வேண்டுமானால், அந்த அளவுக்கு வேகம் தேவை. நியூ ஹொரை சன்ஸ் விண்கலம் புளூட்டோவை ஆராய்ந்துவிட்டு, அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டதால் விண்கலம் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது.
நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில், புளூட்டோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் சாம்பல் சிறிதளவு வைக்கப்பட்டுள்ளது. நாஸா வின் வேண்டுகோளின்படி பலரும் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டதால், சுமார் நாலரை லட்சம் பேரின் பெயர்கள் அடங்கிய ஒரு சி.டி. ஒன்றும் விண்கலத்தில் இடம்பெற்றுள்ளது
16 மாதங்கள் கழித்தே முழுதகவலும் கிடைக்கும்...
தொலை நோக்கிமூலமாகவும், வானில் வளம் வரும் மிகப்பெரிய ஹப்பிள் டெலஸ்கோப் மூலமாகவும் ஆய்வு செய்யப்பட்ட புளூட்டோ கிரகம் ஒரு விண்கலத்தால் ஆராயப்படுவது இதுவே முதல் தடவை. இது ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.சுமார் 500 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளூட்டோ கிரகத்தை வெற்றிகரமாக அணுகி நியூஹாரிஸன்ஸ்அனுப்பிய படங்கள் தெளிவாகவே உள்ளன.
புளூட்டோவில் சுமார் 3,350 மீட்டர் உயரமுள்ள பனிமலைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் அங்கு நிலத்தில் குழிகள் இல்லாதது விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறது. .
புளூட்டோவின் சந்திரன் என்றழைக்கப்படும் சாரொனில் ஆழமான பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.புளூட்டோவின் வயது சுமார் நாலரை பில்லியன் ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
கடந்த ஜூலை 14 ம் தேதி நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் பூளூட்டோ கிரகத்தை கடந்து சென்றது. ஏற்கனவே சொன்னது போல மணிக்கு 58 ஆயிரம் கிமீ வேகத்தில். அப்போது விண்கலத்துக்கும் புளூட்டோவுக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர்.புளூட்டோவுக்கு அருகில் விண்கலம் இருந்த நேரம் சுமார் எட்டு நிமிடங்களே. எனினும், அந்த எட்டு நிமிட நேரத்தில் எண்ணற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்கு அனுப்பும். அத்தனை தகவல்களும் கிடைக்க 16 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் தூரம் தான். படத்தை அனுப்பு என பூமியிலிருந்து தகவல் வந்தால் அது நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்திற்கு போய் சேர நாலரை மணிநேரம் ஆகும். அது அங்கிருந்து படம் அனுப்பி நமக்கு கிடைக்க நாலரை மணி நேரம் ஆகும்.ரெம்ப பொருமையாத்தான் இருக்க வேண்டி இருக்கும்.
நியூ ஹொரைசன்ஸ்விண்கலத்தின் பயணம் வெற்றி கண்டிருப்பது பற்றி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கருத்து தெரிவிக்கையில், ‘‘இப்போது சூரிய மண்டலம் நமக்கு மேலும் திறந்து விடப்படும். தொலைவில் உள்ள புளூட்டோ பற்றிய ரகசியங்கள் நமக்கு தெரிய வரும்’’ என்றார்.
நாம் வாழும் பூமி , பிரபஞ்சம்,சூரியமண்டலம் எப்படி தோன்றியது என்பதை கண்டுபிடிக்க பூளூட்டோ பயணம் ஒரு மைல்கல் தான்
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

அ,தமிழ்ச்செல்வன்
தமிழ்வாசல் மாத இதழிலில்
(ஆகஸ்ட) வந்துள்ள எனது கட்டுரை
Comments
சுமார் 3,350 மீட்டர் உயரமுள்ள பனிமலைகள் இருப்பதாகத்
தெரியவந்துள்ளது. ஆனால் அங்கு நிலத்தில் குழிகள் இல்லாதது விஞ்ஞானிகளை