உத்தமவில்லன் -கமலின் வாழ்க்கை...

மே.1 எதிர்பார்த்து ஏமாந்து, மே.2 காலை காட்சியும் ரத்து ... பெருத்த ஏமாற்றம்.. கமல் படன்னாலே இப்படிதான் நடக்கும் போல என்ற வெறுப்பே வந்து விட்டது...
   மே,2 மாலை காட்சிக்கு  தியோட்டர்க்குள் நுழைந்த போது இன்றைய இளம் ஹூரோக்களுக்கு சாவால் விடும் நடனம் ஆடிக்கொண்டிருந்தார் கமல்.
           படத்தின் போக்கு கிட்டதட்ட கமலின் வாழ்க்கையின் ஓருபகுதி என்றே சொல்லலாம்.கவுதமியோடு கமலுக்கு மூன்று மனைவிகள் (திருமணம் செய்யாமல் கவுதமியோடு வாழக்கை) படத்திலும் அப்படியே இரண்டு மனைவிகள்... ஓரு ரகசிய காதலி...கமலின் குரு பாலசந்தர், தெலுங்கில் அவருக்கு வழிகாட்டியாக இருந்த கே.விஸ்வநாதன், இப்படி கமலின் நிஜவாழக்கையை ஓட்டியே படம் செல்கிறது.வழக்க மான சினிமா அல்ல புது முயற்சி.. தெய்யம் நடனகலைஞனாக கமலின் நடனம் மிக அருமையாக செய்திருக்கிறார்..

சுருக்கமாக கதை...

கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனார் விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலுக்கும் அவரது குடும்ப டாக்டரான ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்நிலையில், கமல் நடித்து முடித்த ஒரு படத்துக்கு படக்குழுவினர் ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி நடத்துகின்றனர். இதில் கமலின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.
அப்போது, அந்த பார்ட்டிக்கு வரும் ஜெயராம், கமலை தனியாக சந்தித்து அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும், இதுபற்றி விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தன்னை தொடர்புகொள்ளுமாறும் கூறிவிட்டு அவரிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு செல்கிறார்.
அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கும் கமலஹாசன், தனது மேனேஜரிடம் கூறி இதுகுறித்து விசாரிக்க சொல்கிறார். ஆனால், இதற்குள் கமலுக்கு அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகமாகவே, ஜெயராமை தேடிச் சென்று சந்திக்கிறார். அப்போது, கமல் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழகியதையும், அந்த பெண் கர்ப்பமுற்று, அந்த பெண்ணின் கருவை கலைக்க இவரது மாமாவான விஸ்வநாத் பணம் கொடுத்ததையும், அந்த பெண் அதை வாங்க மறுத்து, அந்த கருவுடனேயே கமலை விட்டு பிரிந்து சென்றதையும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார்.
அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைதான் பார்வதி மேனன். அவள் தற்போது கல்லூரியில் படித்து வருவதாக கமலிடம் கூறும் ஜெயராம், ‘அவள் உங்களை ஒரு வில்லனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்கிறார். தன் தவறை உணர்ந்த கமல், அவளை பார்க்கத் துடிக்கிறார்.


இந்நிலையில், கமலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தலைவலி தற்போது அதிகமாகிறது. ஸ்கேன் செய்து பார்க்கும்போது, கமலின் தலையில் ஒரு கட்டி இருப்பதாகவும், நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டார் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனவேதனையடையும் கமல், தான் ஒரு நடிகர் என்பதால், தான் இறப்பதற்குள் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு நல்ல, நகைச்சுவை கலந்த படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

 உத்தமவில்லன் பதிவுகள் படிக்க..

1.உத்தமவில்லன் புகைப்படங்கள் + புதிய டிரைய்லர்


     



இதற்காக தனது குருநாதர் கே.பாலச்சந்தரிடம் சென்று ‘உங்களையும் என்னையும் இந்த மக்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும்’ என்று கேட்கிறார். ஏற்கெனவே, கமல் மீதும், அவரது மாமனார் விஸ்வநாத் மீதும் மனஸ்தாபத்தில் இருக்கும் கே.பாலச்சந்தர் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். தன்னுடைய கதையை கேட்டுவிட்டு பின்னர் உங்கள் முடிவை தெரிவிக்குமாறு கமல் கூற, அவரும் வேண்டா விருப்பாக கதையை கேட்கத் தொடங்குகிறார். இறுதியில், அந்த கதை கமலுடைய நிஜவாழ்வில் நடந்த கதை என்பது தெரிந்ததும் கமலை வைத்து ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார்.
கமல்-கே.பாலச்சந்தர் மீண்டும் இணைந்தது கமலுடைய குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. கமலுக்கும் அவரது மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கமல் தன் மாமனாரை கோபத்தில் திட்ட, இதனால் கமலுடைய மனைவி தனது மகன் மற்றும் அப்பாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார். இருப்பினும், தன்னுடைய லட்சியத்தில் விடாப்பிடியாக இருக்கும் கமல், இதையெல்லாம் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில், கமல் அந்த படத்தை திட்டமிட்டபடி முடித்தாரா? பிரிந்துபோன இவர் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

கமலையும் ,அவரது நடிப்பையும் பிடித்தால் 
கமல் உத்தமன்,பிடிக்காவிட்டால் வில்லன் தான்...

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

இனிமேல் தான் முடிவு செய்ய (பார்க்க) வேண்டும்...