தூங்குமூஞ்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை...

தூங்குமூஞ்சி நண்பர்களுக்கு  ஒரு எச்சரிக்கை.அதிக நேரம் தூங்கினால் அது மரணம் விரைவில் கிடைக்கும்  என இங்கிலாந்து அறிவில் வல்லுநர்கள் நடத்தியிருக்கும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக அறிவியல் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு முடிவில் தெரிவித்திருப்பதாவது :-
தூங்குவது குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஒரு கோடி மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் அதிக நேரம் தூங்கினால் ஆபத்தில் முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக இளம் வயதினர் இரவு நேரங்களில் 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் அது மரணத்திக்கு வித்திடும் வாய்ப்புகள் அதிகமிருப்பது தெரியவந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி குறைவாக தூங்குபவர்களை விட, அளவுக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு அதிக அளவில் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதும் தெரிய வந்திருக்கிறது. இரவு நேரத்தில் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நமது உடல்நலத்திற்கு சிறந்தது . மேலும் அது நமது வாழ்நாளை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் இரவு நேரத்தில் மிகவும் குறுகிய நேரம் தூங்குபவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது என்பதும் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 12 சதவிகிதம் உள்ளது என்று தெரிய வந்திருக்கிறது. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு, மனஅழுத்தம், இதய பிரச்சனைகள், நீரிழிவு நோய்கள், ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது.

9 மணிநேரத்திற்கும் மேல் தூங்குபவர்களில் 30 சதவிகிதம் பேர் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது வார்விக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.

தகவல் தீக்கதீர்
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

தூங்காதே தம்பி தூங்காதே...