இயக்குனர் ஆர்.சி. சக்தி மரணம்... கமல் அஞ்சலி

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி, திங்களன்று சென்னை யில் கால மானார். அவருக்கு வயது 76. ரஜினி காந்த்தை வைத்து “தர்மயுத்தம்“, கமல்ஹாசனை வைத்து “உணர்ச்சிகள்”, லட்சுமி நடித்த “தவம்“, “வரம்“, ரகுவரன் நடித்த “கூட்டுப் புழுக்கள்”, விஜயகாந்த் நடித்த “மனக்கணக்கு” உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் திரைத் துறையில் நாட்டம் கொண்டிருந்தார்.
சுப்பு ஆறுமுகம் நடத்திய வில்லுப்பாட்டு குழுவில் சேர்ந்தார். பின்னர் அன்னை வேளாங்கண்ணி படத்துக்கு திரைக்கதை எழுதினார்.
1972-ம் ஆண்டு கமல்ஹாசனை வைத்துஉணர்ச்சிகள் படத்தை எழுதி இயக்கினார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய விஷயத்தை எடுத்து படமாக்கி, விமர்சகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். 1978-ல்ஆர்.சி.சக்தி இயக்கிய “மனிதரில் இத்தனை நிறங்களா” படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
     
இதில் கமல் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டில் ரஜினியை வைத்து “தர்மயுத்தம்“ படத்தை இயக்கி வெற்றிகண்டார். லட்சுமியை வைத்து அவர் இயக்கிய “சிறை” பெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசின் விருதையும் பெற்றது. ஆர்.சி.சக்தி கடைசியாக இயக்கிய படம் “பத்தினிப் பெண்”. 1993-ல் வெளியான இந்தப்படத்துக்கு, தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதும், இவருக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதும் கிடைத்தன.
ஆர்.சி.சக்திகடந்த ஆண்டு, தனது பவள விழாவைக் கொண் டாடினார். சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடற்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ஆர்.சி.சக்தி திங்கட்கிழமையன்று பிற்பகல் மரணமடைந்தார்.

  

நன்றி... தி.இந்து தமிழ்

சக்தியின் மறைவு பெரும் இழப்பு .... கமல்ஹசன்

ஆர்.சி.சக்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், ‘‘கலைஞனாக, நண்பனாக, உறவாக ஆர்.சி.சக்தியின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. நட்பில் துவங்கி உறவாக மாறியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நல்ல நண்பன். ரசிகன். கடைசி வரை நல்ல நண்பராக இருந்தது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவர் அப்படித்தான். முக்கியமாக, முதல் தர ரசிகராக இருந்த சக்தி அண்ணனின் இழப்பை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஆழ்ந்த இரங்கல்கள்...