அனேகன்...காலம் கடந்து நிற்கும் காதலின் கதை

1960 களில் பர்மாவில் துவங்கும் காதல் காட்சிகளும், பாடல்காட்சிகளும், பர்மாவில் ஏற்படும் ராணுவ புரட்சி காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார்.   படத்தின் துவக்கமே படம் நல்லாயிருக்கே, புதுகதையாக இருக்கே என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.  மூன்று விதமாத காலகட்டதில் காதலர்களாகவரும் தனுஷ் ,அமைரா அசத்திகிறார்கள்.அமைரா உதடை குவித்து விடும் முத்தம் சூப்பர். 14 வயது பள்ளி மாணவி, 25 வயது ஐடி மாடர்ன் பெண் இரண்டிலும்  அமைரா அசத்தலாக நடித்திருக்கிறார். கதை முழுவதும் இவரைச் சுற்றியே நகர்வதால், அழகு பதுமையாக இல்லாமல் நடிப்பிலும் தனது திறமையை காட்டியிருக்கிறார்.

கே.வி.ஆனந்த் படம் என்றாலும்கூட தனுஷின் நடிப்பு  அருமை. கேமரா கோணங்கள், ஒளிப்பதிவு.பாடல்காட்சிகள்  புதுமையாக செய்திருக்கிறார்கள்.  நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் கார்த்திக் வில்லாக அசத்துகிறார்.மூன்று விதமாத காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் மூன்று விதமாக  வண்ணங்களை காலமாற்றத்தை உணர்த்தியிருப்பது அருமை. 1960 பர்மா காதல் ஈஸ்ட்மென் கலர் தண்மை. 1980 காலகாதலுக்கு  கொஞ்சம் அடந்த நிற தண்மை. தற்போதை கால காதலுக்கு டிஜிட்டல் தண்மையிலும் மாக படம் புதுமையாக செய்திருக்கிறார்கள்.டங்காமாரி பாடல்அனைவரையும் துள்ளி எழ வைக்கிறது.
       தனுஸ்படங்களில் ஓருமாறுபட்ட புதுமையான கதை...
கதை சுருக்கம்.
கார்த்திக் நடத்தும் ஐடி கம்பெனியில் அமைரா சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். வித்தியாசமான வீடியோ கேம்களை உருவாக்குவதற்காக ஒரு குழு ஒன்றை அமைத்து அதில், பணிபுரியும் அனைவருக்கும் கற்பனைத் திறன் நன்றாக வரவேண்டும் என்பதற்காக ஒருவித மாத்திரை கொடுக்கப்படுகிறது.
அந்த மாத்திரையை சாப்பிடுபவர்கள் தங்கள் மனதுக்குள் எழும் கற்பனைக் கதையை வெளிப்படுத்துகின்றனர். அந்த கற்பனைக் கதையை தனது வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி லாபம் பார்க்கிறார் கார்த்திக். இந்த மாத்திரை நாயகி அமைராவுக்கும் கொடுக்கப்படுகிறது.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவளது முன்ஜென்ம வாழ்க்கை அவளது கண்முன் விரிகிறது. அதன்படி, முன்ஜென்மத்தில் பர்மாவில் தனுஷும், அம்ரியாவும் காதலர்களாக வலம் வந்ததும், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைராவின் அப்பா தனுஷை கொன்றதும், அந்த வேதனையில் அமைரா தற்கொலை செய்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது.

அடுத்த ஜென்மத்திலும் தனுஷும், அமைராவும் காதலர்களாக வலம் வந்ததும், இவர்களது காதல் திருமணம் வரை சென்றபோது, செல்வந்தர் ஒருவரால் இருவரும் கொலை செய்யப்பட்டதும் இவளது நினைவில் வருகிறது. இந்த நினைவுகளில் வருபவர்கள் எல்லாம் நிகழ்காலத்திலும் தன்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர்வு நாயகிக்கு ஏற்படுகிறது. அனைவரையும் தேடி கண்டுபிடிக்கும் நாயகி, கடைசியில் தனுஷையும் கண்டுபிடித்து, அவளுக்கு தன்னுடைய நினைவில் வந்த முன்ஜென்ம கதைகளை கூறுகிறாள். ஆனால், தனுஷ் அதை ஏற்க மறுக்கிறார்.

ஒருகட்டத்தில் அமைரா கூறுவது கற்பனை கதைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தனுஷ், அவை எல்லாம் நிஜத்திலும் நடப்பதை உணர்கிறார். இதையடுத்து, அவள் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்று நம்பி, அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் அந்த ஐடி கம்பெனியில் மர்மமான முறையில் ஒரு பெண் இறந்துபோகிறாள். இதற்கு அந்த கம்பெனியில் கொடுக்கும் மாத்திரைதான் காரணம் என்பதை கண்டறிகிறார் தனுஷ். இதனால், தனுஷை தீர்த்துக்கட்ட கார்த்திக் முடிவு செய்கிறார்.
இறுதியில், இவர்களின் சதி திட்டத்தை தனுஷ் முறியடித்து, நிகழ்காலத்திலாவது தனது காதலியை கைப்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
            கடந்தகாலத்தையும்,நிகழ்காலத்தையும் இணைத்து காலந்தோறும் தொடரும் காதலை அருமையாக சொல்லியிருக்கிறது அனேகன்....

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
Nalla vimarsanam
நவீன நெஞ்சம் மறப்பதில்லை...?
Anonymous said…
neenghal sonna kathai thavaru