உத்தம வில்லன் டிரையிலர்


சமீபத்தில் மறைந்தத இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நடித்த கடைசி படம். கமலை சினிமா நடிகனாக மாற்றும் இயக்குனராகவே நடிதத்துள்ளார்.  உத்தம வில்லன்''. படத்தை துவங்குவதற்கு முன்பே உத்தம வில்லன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல். அதில் கமல், கூத்து கலைஞராக நடிக்கிறார் என்று பார்க்கும் போதே அனைவருக்கும் தெரிந்தது. அதேசமயம் அதனைத்தொடர்ந்து வெளியான பிற போஸ்டர்களில் கமல் சினிமா இயக்குநர் போன்றும், நடிகர் போன்றும் இருப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகின. இதனால் இப்படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்ற குழப்பம் .

கமல்ஹாசன் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஒன்று, 8ம் நூற்றாண்டை சேர்ந்த 'உத்தமன்' என்ற கூத்துகலைஞர் வேடம், மற்றொன்று 21ம் நூற்றாண்டின் சினிமா நட்சத்திரமான 'மனோரஞ்சன்'. இந்த இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை தான் உத்தம வில்லன். இவர்களுடன் மனோரஞ்சனை கண்டெடுத்து, நட்சத்திர அளவுக்கு உயர்த்திய குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் விஸ்வநாத்தும், மனோரஞ்சனின் ரகசிய காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.
8-ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், முத்தரசன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

 உத்தமவில்லன் டிரையிலர்


     


கமலின் கதை-திரைக்கதையில் உருவாகியுள்ள  இப்படத்தை கமலின் நண்பரும், பிரபல நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்ய, விஜய் சங்கர் எடிட்டிங்  லிங்குசாமியின் திருப்தி பிரதர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படம் வெகுவிரைவில் வெளியிடப்படவுள்ளது.

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

ஆவலுடன் உள்ளேன்... எப்போது ரீலிஸ்...?

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
Yarlpavanan said…
தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
  • TMS 91
    26.03.2013 - 2 Comments
    TMS ? ... இன்றைய இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்பில்லை, 50 வயதை தாண்டியவர்களின் இசைநாயகன்.…
  • பஸ் நிறுத்தம் சரியானதே...
    29.12.2014 - 3 Comments
    24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிற ஊர் மதுரை.தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு…
  • ரஜினி முருகன் .. எங்க ஊர் படம்
    18.01.2016 - 1 Comments
    மதுரையை சுற்றி எத்தனையோ படம் எடுத்திருந்தாலும் ரஜினி முருகனில்  மதுரை மிக அழகாக…
  • ஆண்களின் பாலியல் குறைபாட்டுக்கு புதிய சிகிச்சை
    28.09.2011 - 2 Comments
     பல தம்பதிகளின் இல் வாழ்க்கையில் மனக்கசப் பையும் உளைச்சலையும் ஏற்படுத்துகிற ஒரு முக்கிய மான பாலியல்…
  • செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்
    23.09.2014 - 0 Comments
    நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை…