ரஜினி .... வாழும் பென்னிகுக்கா?

வாழும் பென்னி குக்கே,இராண்டாம் பென்னி குக்கே, தலைவா,வசூல் மன் னனே,சக்கரவர்த்தியே, உன் விழியசைவில் தமிழகம் விழிக்கும்,உன் தலை கோதினால் தமிழகம் உய்க்கும், காமராசரே, வாழும் பெரியாரே ..... இப்படியெல்லாம் போஸ்டர்கள், பிளக்ஸ்போர்ட்கள் வைத்திருக்கிறார்கள் ( போஸ்டர் காலச்சாரத்திற்கு பெயர் போன) மதுரையில். இதில் தலைவா,வசூல்மன்னனே, சக்கரவரத்தியே என்பதெல்லாம் சரி. ஆனால் வாழும் பென்னிக்குக்கே என்பது. பென்னிக்குக்கின் தியாகத்தை,உழைப்பை,மரியாதையை கெடுக்கும் செயல். அதுவும் முல்லை பெரியாறால் பயன் பெறும் மதுரையில் என்பது கேவலம்.
        இதில் மற்றொரு கொடுமை மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில்  ரஜினியை , பெரியாராக மாற்றி வாழும் பெரியாரே என்ற வாசகங்களுடன் அடிக்கப்பட்டுள்ள போஸ்டர்கள். இது அப்பகுதி பெரியாரிஸ்டுகளை மன காயப்படுத்த,புகார் கொடுத்திருக்கிறார்கள். போலிஸார் இப்போது லிங்கா கட்டவுட்டுகளை அப்புறப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். யாரை யாரோடு சம்படுத்துவது. இவங்ங்கள என்ன செய்றதுன்னுதான் தெரியல.


கதை சுருக்கத்திற்கு முன்....

      எனது டூவிலரை சர்வீஸ் கொடுத்துவிட்டு லிங்கா போய்ட்டு வரேன் சரிபண்ணி வைங்க என்றேன்.கடை பயைன் .. சார் படம் சரியில்ல . வேறபடம் போங்க என்றான். பராவாயில்லா படம் எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாமே?
   டிக்கெட் வழக்கத்தைவிட ஒரு மடங்கு அதிகம்.தியோட்டருக்குள் நுழைந்ததும் அதைவிட அதிர்ச்சி. ரஜினி படத்துக்குதான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம். படம் துவங்கும் போது  2 பெண்கள், 5 இளைஞர்கள் உட்பட 15 பேர் இருந்தோம்.

மனதில் நின்ற காட்சிகள்...
படத்தில் பேரன் ரஜினி லலித்தா ஜூவலரியின் நகை கண்காட்சியில் டெக்னிக்கலாக திருடும் காட்சி.மித அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். திருடர்களுக்கு பலே டிப்ஸ். ஏற்கனவே தமிழகத்தில் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 படத்தில் தாத்தா ரஜினி(1939) மதுரை கலெக்டராக வருகிறார்.ஊர்மெச்சிகுளம் போன்ற  எங்கள் பகுதி கிராம பெயர்களை காண்பிக்கிறார்கள்.எங்கள் ஊர் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த காட்சிகள்  ஊர் சென்டிமென்ட் காரணமாக பிடித்து போனது.

 இந்த படத்தில் ரஜினி,இயக்குனர் ரவிக்குமாரும் ஒரு விஷயத்தை குழப்புகிறார்கள். முல்லை பெரியாறை கட்டியது இந்தியன் தான் என்பதாக காட்சிகள். இது பென்னிகுக்கை வம்பிழுக்கும் முயற்சி? படம் துவங்கும் போது படத்தின் கதை,காதாபாத்திரங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல என்றும் போடுகிறார்கள்.

சூப்பர் கிளைமேக்ஸ்
எந்த படத்திலும் இல்லாத வகையில் மிகமிகமிகமிக.... அற்புதமான கிளைமேக்ஸ் காட்சி. இயக்குனருக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

 படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்...மனைவி "படம் சரியில்லையாம்ல்ல: என்றார். எனக்கு என்ன கவலை என்றால் மதுரை சென்டிமென்டில் எடுக்கப்பட்ட படம் ஒடும் என்பது சினிமாகாரர்களின் நம்பிக்கை. அதை லிங்கா காப்பாற்றுமா? படம் முழுவதும் எடுக்கப்பட்டது கர்னாடகாவில் என்பதுதான் உண்மை.லிங்கா வெற்றி பெறுமா?

கதை சுருக்கம்..

சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.

அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார்.

சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்துக்கு வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார்.

அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார்.

அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள அணைகட்டிற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலைகாரர்களிடம் இருந்து இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள அணைகட்டை இடித்து புதிய அணைகட்டை கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா? அணைகட்டை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

யாரையும் எதுவும் செய்யவும் முடியாதே... அவர்களாகவே மாறினால் தான் உண்டு...
Anonymous said…
நடு நிலையான விமர்சனம்.மக்களை இன்னமும் ஏமளிகளாகவே ரவிக்குமார் அண்ட் கோ நினைத்து வியாபாரம் செய்கிறார்கள்.