ஆண்டுகள் 50 ஆனாலும் தீராத சோகம்...

1000 பேர் பலி.... 50 பேர் காணாமல் போனார்கள். சுற்றுலா வந்த குழந்தைகள் 100 பேருக்கு மேல் ரயிலோ டு காணாமல் போனார்கள் .நடிகர் ஜெமினி கணேசனும் ,சாவித்திரியும் இறந்து போனதாக வதந்தி.ஓரே இரவில் ஓரு ஊரே சிதைந்து  போனது. இந்த சோகம் நிகழ்ந்து டிசம்பர் 23 ம் தேதியோடு 50 ஆண்டுகள் முடிய போகிறது. ஆனாலும் தமிழகத்தை பொறுத்த வரையில் தீராத சோகமாக இருந்து வருகிறது.
           கடந்த 6 மாதங்களுக்கு முன்னால் தனுஸ்கோடி சென்றிருந்தேன். ரயில் பயணத்தில் ராமேஷ்வரம் பாலத்தை கடந்த போது இருந்த சந்தோஷம் தனுஸ்கோடி சென்று பார்த்த போது காணாமல் போனது.தனுஸ்கோடியில் பரவிக்கிடக்கும் மணல் வெளியில் நடந்து சென்ற போது கடல் அலைகளின் ஓசையையும் மீறி 50 ஆண்டுகளுக்கு முன்னால் அழிப்பேரலையில் சிக்கி உயிர் போராட்டம் நடத்தியவர்களின் கதறல்  உங்களுக்கு கேட்கும்.


இந்த பதிவில் மூன்று இணைப்புகள் இணைத்துள்ளேன்.

      1. கடந்த ஆண்டு (49ம் ஆண்டு) வெளியிடப்பட்ட தனுஷ்கோடி பற்றிய பதிவு.

      2. ராமேஷ்வரம் பாலம் வீடியோ

     3. தனுஸ்கோடியில் எடுக்கப்பட்ட 
         எனது புகைப்பட சிலைடு சோ

        10 புகைப்படங்கள் இணைத்துள்ளேன்





இதுவரை போகாதவர்கள் ஒரு முறையேனும் தனுஷ்கோடி போய்வாருங்களேன்.
செல்வன்




உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

சிறுவயதில் ஒரு முறை சென்று வந்தேன்...