உலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை

உலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கென்று அனை த்து வகையான பிரச்சனைகள், நோய்களுக்கும் சிகிச்சைஅளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனையாக டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை சென்னையில் வடபழனியில் துவங்கப்படுகிறது. ஆண்கள் மருத்துவத்தில் வல்லமை பெற்றவரும், உலக பாலியல் மருத்துவர் சங்க பொதுச்செயலாளருமான பேராசிரியர் டாக்டர் பி.கணேசன்அடைக்கண் இம்மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.இதுகுறித்து மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி.காமராஜ் கூறியதாவது:குழந்தைகள் மருத்துவம், பெண்கள் மருத்துவம் ஆகியவற்றுக்கென்று சிறப்பு மருத்துவமனைகள் பல இடங்களில் உள்ளது. ஆனால், ஆண்களின் உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்தும்விதமாக ஆண்களுக்கென்று பிரத்யேகமாக சிறப்பு மருத்துவமனை உலகில்எங்குமே கிடையாது.
எனவே தான் அ முதல் ஃ வரை (ஏ டூ இசட்)அனைத்து விதமாக நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஒரேஇடத்தில் தீர்வு காணும் பொருட்டுஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனையை அமைத்திருக்கிறோம். உடலில் நோய் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல ஆரோக்கியம். உடல், மனம், ஆத்மா இவை மூன்றும் நலமாக இருப்பதே ஆரோக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு வரையறை செய்துள்ளது.

அழகாக உடையணிந்து கம்பீரமாக வீரநடை போடும் ஆண்களதுபோராட்டகரமான வாழ்க்கையானது அவர்களை அமைதியை இழக்க வைத்து எந்த நேரமும் ஓட்டமும், நடையுமாக துரத்துகிறது. மனைவியை, பிள்ளைகளை, முதியவர்களை கவனிக்கத் தெரிந்தவர்களுக்கு தங்களைத் தாங்களே கவனிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். பெண்கள் ஏதாவதொரு வகையில் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுகிறார்கள். ஆண்கள் விலகியே இருக்கிறார்கள். ஆண்களது வாழ்க்கை பல்வேறு எதிர்நீச்சல்களை கடந்து, பிரச்சனைகளை சந்தித்து மீண்டு வருவது என்பது மாபெரும் போராட்டம். இந்த தொடர் போராட்டத்தால் நல்ல ஓய்வு கிடைப்பதில்லை. உடற்பயிற்சி செய்வதில்லை. மனமகிழ்ச்சி இருப்பதில்லை. அவ்வப்போது மருத்துவ ஆலோசனையும் பெறுவதில்லை. இதனால் ஒருநாள் திடீரென்று படுக்கையில் விழும்போதுஅந்த குடும்பமே பரிதவித்துப் போகிறது. இது பல ஆண்களின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் நிஜம்.ஆண்களின் நிலை பற்றி மிகவும் வெளிப்படையாக தெரிந்து கொள்ள கிராமங்களை கூர்ந்து கவனியுங்கள்.

அங்கே விதவைகள் அதிகம் வாழ்கிறார்கள். பெண்களை விட ஆண்கள் சீக்கிரமே இறந்துபோக நிறைய காரணங்கள் உண்டு.சாலை விபத்துகளில் அதிக அளவில் பலியாவது ஆண்களே; தொழிற்சாலை விபத்துகளில் பெருமளவில் பலியாவதும் ஆண்களே; குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உடலும், மனமும் கெட்டு விரைவில் இறப்பதும் ஆண்களே; மாரடைப்பால் மரணமடைவதில் 4 மடங்கு ஆண்களே முந்திக் கொள்கிறார்கள்.தற்கொலை செய்து கொள்வதில் பெண்களைவிட ஆண்களே 5 மடங்கு அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக மருத்துவ புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன; சிறுநீரகம் செயல்இழந்து அதிக அளவில் அவதிப்படுவதும் ஆண்களே. புற்று நோய் பாதிப்பில் குறிப்பாக புராஸ்டேட், வாய் மற்றும் குடல் புற்றுநோயில் 2 மடங்கு அதிகம் பலியாவதும் ஆண்களே. ஆண்மைக்குறைவு, செக்ஸ் பிரச்சனைகளால் அல்லல்படுகிறார்கள்.
பெண்கள் சம்பந்தமான பிரச்சைனைகள் தெரிந்த அளவுக்கு ஆண்களின் அவஸ்தைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லவே இல்லை.உடற்பயிற்சி இல்லாததால் உடல் பருமன், சர்க்கரை வியாதி ஆண்களை அதிகம் பாதிக்கிறது; குடும்பம், தொழில், வியாபார பிரச்சனைகளால் மனஅழுத்தம் அதிகமாகி, மனச்சோர்வடைந்து அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகம்; ஆபத்தான வேலைகளில் சேர்ந்து உயிரிழக்கும் ஊழியர்கள் எத்தனையோ ஆயிரம் பேர்.இவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதோடு, தேவையான மருத்துவ உதவி கிடைக்கச் செய்வதற்காகவே இந்த ஆண்கள் மருத்துவமனை ஆரம்பிக்கப்படுகிறது. நாம்திட்டமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் 50 சதவீத இறப்புகளை தடுக்க முடியும்.இறப்பை தடுப்பது மட்டுமன்றி வயது கூடினாலும், இளமையுடன் தோற்றமளிக்கும் பொருட்டு ஒரு மருத்துவ திட்டத்தை (ஏஜ் ரிவர்ச்ஸ்) அறிமுகம் செய்ய இருக்கிறோம். அழிந்துபோகும் மனித செல்களை உயிரூட்டி, தேவையான மருந்து, மாத்திரை மற்றும் உடற்பயிற்சி, உணவு மூலம் வயதால் ஏற்படும் தோற்றத்தை மாற்றமுடியும். இதன் மூலம் 50 வயதுடையவரை 45 வயது நபர்போல் வரவழைக்க முடியும். இதற்கான சிறப்பு கிளினிக் இந்த மருத்துவமனையில் துவக்கப்பட உள்ளது.
இது தவிர, செக்ஸ் தொடர்பானபிரச்சனைகளுக்கு ஹெல்த் செக் அப், திருமணத்திற்கு முன்பு பரிசோதனை மற்றும் கவுன்சிலிங், செக்ஸ் தெரபி, ஷாக் வேவ் தெரபி உட்பட அனைத்து வகையான நவீன சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.இதய நோய், சர்க்கரை நோய்,ஆஸ்துமா, மூட்டு வலி, எலும்பு சிகிச்சை, தோல், அழகு சிகிச்சை, இரத்த அழுத்தம், மனநல ஆலோசனை, குடும்ப ஆலோசனை, உடற்பயிற்சி, உணவு ஆலோசனை, குழந்தையின்மை சிகிச்சை உட்பட ஆண்களுக்கான அனைத்து வகையான (ஏ டூ இசட் வரை) சிகிச்சைகளும் இங்கு வழங்கப்பட இருக்கிறது.
ஆண்களது பிரச்சனைகளை மட்டுமே மையப்படுத்தி ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வுக்காக எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள இருக்கிறோம்.ஆண்களுக்கான பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கண்காட்சி வருகிற 19ம் தேதி முதல் 23ம்தேதி வரை மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. இதற்கான அனுமதி இலவசம். புதிதாக துவங்கப்படும் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனையின் துவக்க விழா, உலக ஆண்கள் தினமான நவம்பர் 19ம் தேதியன்று காலை 10 மணியளவில் நடைபெறும். இதில் உலகபாலியல் மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர்பி.கணேசன் அடைக்கண் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து, எச்.வசந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

உலகிலேயே முதன்முறையா??? :-))))))))

எங்க நாட்டுலே அதுவும் எங்கூரிலேயே... மென்ஸ் க்ளினிக் என்று ரொம்பகாலமா இயங்குதே!
அடிச்சு விட வேண்டியது தான்! யார் வந்து check செய்யறது?

[[உலக பாலியல் மருத்துவர் சங்க பொதுச்செயலாளருமான பேராசிரியர் டாக்டர் பி.கணேசன்அடைக்கண் இம்மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.]]
தரவு மற்றும் லிங்க் கொடுங்கள்..மேலே சொன்னவைகளை சரி பார்க்க.