முதல் முறையாக வால்நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஆய்வுக் கலம் -வீடியோ

விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் முதல்முறையாக, வால்நட்சத்திரம் ஒன்றில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கும் முயற்சியின் இறுதிக் கட்டத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ரொசெட்டோ விண்கலத்திலிருந்து, 67பி/சுரியுமொவ்-கெராசிமென்கோ என்ற வால் நட்சத்திரத்தில் தரையிறக்குவதற்காக ஃபைலி ஆய்வுக்கலம் தனியே பிரிக்கப்பட்டுவிட்டது.

ரொசெட்டோ

ரொசெட்டா என்பது ஐரோப்பிய விண்வெளி மையத்தால், வால் நட்சத்திரம் ஒன்றை ஆய்வதற்காக தொடங்கப்பட்ட 12 ஆண்டுகாலத் திட்டமாகும். ரொசெட்டா விண்கலம் 2004- ஆண்டு மார்ச் 2-ம் தேதி ஆரியாயன் ஏவுகணை மூலம் ஏவப்பட்டது. ரொசெட்டா விண்கலத்தில், ஃபைலி என்ற தரையுலவி இணைக்கப்பட்டுள்ளது.


ரொசெட்டா ஆய்வுக் கலம் விண்வெளியில் நீண்ட காலம் சுற்றி வந்து, 67பி/ சி-ஜி (67பி/சுரியுமொவ்-கெராசிமென்கோ) என்ற வால்நட்சத்திரத்தை ஆய்வு செய்யும். இவ்விண்கலம் 10 ஆண்டு பயணத்துக்குப் பின், 67பி/ சி-ஜி வால் நட்சத்திர சுற்றுப்பாதையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந் தது. தற்போது, வால்நட்சத்திரத் தின் மேற்பரப்பில் தரையிறங்கு வதற்காக ஃபைலி ஆய்வுக் கலம், தாய் ஆய்வுக்கலமான ரொசாட்டோ கலத்திலிருந்து தனியே பிரிந்துள்ளது.

இது 7 மணி நேரத்தில் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கலம் வால் நட்சத்திர மேற்பரப்பில் தரை யிறங்கினால் அது விண்வெளி ஆய்வில், மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும். விண்வெளியின் வரலாற்றில் வால் நட்சத்திரம் ஒன்றின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த மனிதனால் செய்யப்பட்ட முதல் பொருள் இதுவாகும்.

      நீண்ட பயணம்

10 ஆண்டுகள், ஐந்து மாத பயணத்தில், சூரியனை ஐந்து தடவைகள் சுற்றிய பிறகு, 640 கோடி கிமீ தூரம் பயணித்த பின்னர், 67பி/ சி-ஜி வால் நட்சத்திர சுற்றுப்பாதையில் ரொசெட்டா இணைந்தது.

தனது இந்த நீண்ட பயணத்தின்போது, ரொசெட்டா விண்கலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு நெருக்கமாகச் சென்றது. விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் போதாமையாக இருந்ததால் இந்த விண்கலம் 2011 ஜூன் மாதம் முதல் 31 மாதங்கள் வரை செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 2014 ஜனவரி 20-ம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

ரொசெட்டோ விண்கலம் 2008 செப்டம்பரில் 2867 ஸ்டெயின்ஸ் என்ற சிறுகோளையும், 2010 ஜூலையில் லுட்டேசியா என்ற சிறு கோளுக்கு அருகிலும் பயணித்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி 67 பி வால் நட்சத்திர சுற்றுப்பாதையில் நுழைந்தது.

தகவல் திஹிந்து தமிழ்

தொகுப்பு... செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments