ஒபாமாவுடன் லிஃப்டில் ஒருநாள்...

ஒபாமாவை சந்திக்க    உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? இந்த வாய்ப்பு ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அதுவம் லிஃப்டில் அருகருகே நின்றபடியே பேசும் வாய்ப்பு.....
     கட்டுமான தொழிலாளியாகவும், குற்றவாளிகளை திருத்தும் அதிகாரியாகவும் அமெரிக்காவில் பல்லாண்டுகள் பணிபுரிந்த கென்னத் டே(47) ஆண்டுக்கு 42,000 டாலர் ஊதியத்தில் அட்டலாண்டா நகரில் உள்ள நோய் தடுப்பு,கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை கிடைத்த போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.அவருடைய வாழ்க்கையிலேயே முக்கியமான நாள் 7 வாரங்களுக்கு முன்னாள் வந்தது. "எபோலா குறித்து நேரில் அறிய மையத்து வருகை தரும் அதிபர் ஒபாமாவை நீங்கள் தான் அருகிலிருந்து அழைத்து வரவேண்டும்".என்று நிர்வாகம் டேட்டிடம் கூறியது.


   சிகாகோ நகரில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான டேட், அதை தன்னுடைய வாழ்நாள் பயன் என்று கருதி பெரிமிதம் கொண்டார்.தான் மிகவும் மதிக்கும் தலைவரான ஒபாமாவை அருகிலிருந்து பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பே அவருக்கு இனித்தது.
 நிர்வாகம் கூறியபடியே ஒபாமாவை வரவேற்று அழைத்துச்சென்று,பிறகு  காருக்கு பத்திரமாக அழைத்துச் சென்று வழியனுப்பிய பிறகு அவருக்கு மிகப்பெரிய மன உழைச்சல் காத்திருந்தது. அத்துடன் வேலையும் போய்விட்டது.

 அன்று என்ன நடந்தது என்று டேட்வாயிலாகவே  கேட்போம்...

 "ஒபாமா வந்த அன்று வழக்கம் போல வேலைகளை தொடங்கினோன், பாதுகாப்பு பணிக்கான கைத்துப்பாக்கியையும் அதில் போடுவதற்கான குண்டுகளையும் நிர்வாகத்தினர் அளித்தனர். பிற்பகல்  2.25 மணிக்கு அதிபர் ஒபாமாவின் காரும் மெய்காவலர்களின் வாகனங்களும் மையத்தின் பின்வாசலுக்கு வந்தன.மாடிக்கு செல்ல மின்தூக்கியில்(லிஃப்ட்) ஒபாமா நுழைந்தார்.அருகில் இருந்த எப்படி இருக்கிறீர்கள்,உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார்.பெயரை சொல்லிவிட்டு உங்களை சந்திப்பதில்  மகிழ்ச்சி என்றேன்.அவர் போகவேண்டி இடம் வரை கொண்டு போய் விட்டேன்.

     பிறகு அங்கிருந்த அவருடைய மெய்காவல் அதிகாரி ஒருவரிடம் அதிபரிடம் என்னிடம் பெயர் கேட்டதைக் கூறினேன்.நீ அதிருஷ்டக்காரன்தான்பா,என்னிடம் அவர் பேசுவதற்கே 2 ஆண்டுகள் ஆயின என்றார் அவர். செயிதி சேனல்களில் அடிக்கடி வரும் ஒரு இளம் பெண்ணும் உடன் வந்தார்.( அதிபரின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் சூசன்இரைஸைத்தான் குறிப்பிடுகிறார்).

      ஒபாமா உள்ளிருந்து வெளியே வந்ததும் மீண்டும் மாடியிலிருந்து  மின்தூக்கி வழியாக  கீழே அழைத்து வந்து அவருடைய கார் இருந்த இடம் வரை கொண்டு போய் விட்டேன்.கார் புறப்படும் சமயம் காரை என்னுடைய செல்போன் காமிராவில் படம் பிடிக்க முற்பட்டேன்.அப்போது ஒரு மெய்க்காவலர் கையை வேகமாக ஆட்டி விலகிப்போ என்று சைகை செய்தார். அதற்கு முன்னாள் நியூயார்க் நகர மேயராக மைக்கேல்ஆர்புளூம்பேர்க் இருந்த போதும் இதே போல அவரை படம் எடுத்திருந்தால் முயன்றேன். பிறகு எங்கள் அலுவலக கட்டிடத்திற்குள் சென்றேன்." இன்றைக்கு யாரோ ஒருவருக்கு வேலை போகப்போகிறது" என்று சொல்லிக்கொண்டே ஒரு மெய்க்காவலர் என்னை தாண்டிச்சென்றார்.அதிகாரிகளுடைய கட்டளைக்கு மாறாக நாம் எதுவும் செய்யவில்லையே,ஏன் இப்படிச் சொல்கிறார் என்று கவலையடைந்தேன்.

     சில நிமிஷங்களுக்கு பிறகு என்னுடை மேல் அதிகாரிகள் என்னை கோபமாக  திட்டியபடியே அழைத்தனர்.அதிபரின் மெய்க்காவல் படையைச் செர்ந்த சில அதிகாரிகள் உடனே என்னை அருகிலிருந்த கூட்ட அறைக்கு அழைத்துச்சென்றனர். ஏன் இப்படி  மிரட்டுகிறீர்கள், நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டேன்.காரை ஏன் படமெடுத்தாய் என்று கேட்டபடியே  என்னுடைய செல்போனை என்னிடமிருந்து வாங்கினார்கள்.அதிலிருக்கும் கார்படங்களை அழித்துவிடுமாறு கூறினார்கள். உடனே செய்தேன்.அப்போது அப்போது நிர்வாகம் என்னிடம் அளித்த துப்பாக்கியும் குண்டுகளும் என்னிடம் இருப்பதை பார்த்ததும் மெய்க்காவல் அதிகாரிகளின் முகம் கோபத்தால் சிவந்தது. இதை போன்ற பாதுக்காப்புக் குறைபாடுகளைச் சகித்துக்கொள்ளவே முடியாது என்றார்கள்.

      சில நாட்களுக்கு பிறகு வெள்ளை மாளிகையில்,அதிபரின் தலைமை பாதுகாப்பு  அதிகாரி ஜூலியாபியர்சனிடம் விசாரணை நடந்தது.கடமையை  ஒழுங்காக செய்யாததற்காக பதிவியை ராஜினாமா செய்யும்படி அவரிடம் கூறினார்கள்.என்னுடை அலுவலகத்திலும் என்னுடைய பேட்ஜை வாங்கி கொண்டு என்னை வேலையை விட்டு நீக்கினார்கள். என்னை ஏன் நீக்கினார்கள் என்று எனக்கு விளக்கம் தரவில்லை. ஆள்குறைப்பு செய்கிறோம் என்ற பெயரில் அதே நிறுவனத்தில் வேலைசெய்த என்னுடைய மகனையும்(27) வேலையை விட்டு நீக்கி விட்டார்கள்.

         ஒபாமாவை பாத்ததை என்னுடை தாயிடம் கூற வேண்டும் என்று ஆசையுடன் இருந்தேன்.இப்போது நானும் என்னுடை மகனும் வேலையில்லாமல் இருக்கிறோம்.ஒபாமாவைச் சந்தித்தால் எனக்கு வேலைபோய்விடும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார் டேட்
                    
ஆங்கிலத்தில்...   நியூயார்க டைம்ஸ்

தமிழில்.... தி இந்து தமிழ்

தொகுப்பு செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments