வலைப்பதிவர் திருவிழா... நிர்வாகிகளின் சிறப்பு பேட்டி..

தினகரன் நாளிதழ்
(அக்.24) மதுரையில் வ லைபதிவர் சந் திப்பு திரு விழா செய்தி வெளியி ட்டு  ள்ளது.

சந்தி ப்பு திருவிழா தொடங்கவுள்ள நிலையில் மதுரை நிகழ்ச்சி யின்  நிர்வாகி கள் சீனா அய்யா, திண்டு க்கல் தனபா லன்,
தமிழ்வாசி பிரகாஷ் மின்னஞ்சல் மூலமாக கிடைத்த நேர்காணல் .....



1.வலைபதிவு, வலைப்பதிவர் சுருக்கமான விளக்கம் தரமுடியுமா?

வலைப்பதிவு என்பது கூகிள் வழங்கும் இலவச பகுதியான  BLOGSPOT (BloggerBlogger) ) மற்றும் WORDPRESS தளங்கள் மூலம் இலவசமாக நமக்கு என ஒரு இணையதள முகவரியை ஏற்படுத்தி, அதன் மூலம் நமது கருத்துகளை இடுகையாக (பதிவு) பகிரும் தளமே வலைப்பூ அல்லது வலைப்பதிவு எனலாம். பெரும்பாலான வலைப்பதிவர்கள் Blogger தரும் சேவையையே பயன்படுத்தி வருகிறார்கள்.

வலைப்பதிவுகளில் கதை, கவிதை, காமெடி, சினிமா சம்பந்தமான செய்திகள், கட்டுரைகள், நாட்டு நடப்புகள் போன்றவற்றை எழுதி இடுகையாக (பதிவு - post) பகிருபவர்களை வலைப்பதிவர் எனலாம். வலைப்பதிவுகளில் விருந்தினராக வந்து பதிவுகளை எழுதுபவர்களும் உண்டு.



2. உலக அளவில் தமிழ் வலைபதிவுகள் குறித்து...

உலகில் உள்ள தமிழர்களை இணைக்கும் பாலமாக வலைப்பதிவுகள் உள்ளது. வலைபதிவுகளில் கருத்துரைகள் பகிர்வதன் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாற்றிக் கொள்ளவும், நட்பு வட்டத்தை உலக அளவில் பெருக்கவும், பயன்படுகிறது. அதோடு வெளிநாடுகளில் உள்ளவர்களின் பதிவுகள் மூலம் அவர்களது வாழ்க்கைமுறை, கலாச்சாரம் பற்றி அறிய வாய்ப்பு கிட்டுகிறது.

3. வலைபதிவர் சந்திப்பின் நோக்கம் என்ன?

உலகில் எங்கெங்கோ இருக்கும் முகம் பார்க்கா நட்புகளை முகம் பார்க்க வைப்பது பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளே,,, அதோடு வலைப்பதிவில் தங்களுக்கு பிடித்த பதிவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடவும், தெரியாத பதிவர்களை அறிந்து கொள்ளவும் பதிவர் சந்திப்பு உதவியாய் உள்ளது. பதிவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் மேடையாகவும் உள்ளது. உதாரணமாக புத்தகங்கள் வெளியிடுதல், குறும்படங்கள் வெளியிடுதல், கவிதை வாசித்தல், போன்றவை.

4.இதற்கு முன் நடந்த சந்திப்புகள்  எங்கே நடந்தன? அதை பற்றிய தகவல்கள் சொல்லுங்களேன்..

கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை போன்ற ஊர்களில் சிறிய அளவில் பதிவர் சந்திப்புகள் நடந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் பெரிய நிகழ்வாக ஈரோட்டில் ஈரோடு சங்கமம் என்ற பெயரில் சில ஆண்டுகளும், நெல்லையில் ஒரு முறையும், தமிழ் வலைப்பதிவர் திருவிழா என்ற பெயரில் இருமுறை சென்னையிலும், அதன் தொடர்ச்சியாக மதுரையில் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா இவ்வருடம் நடத்துகிறோம்.

 தினகரன் நாளிதழில் செய்தி வந்துள்ள பக்கம்.... 
    
இங்கே கிளிக்

பக்கம் 5 ல் பார்க்கவும்

5. மதுரை சந்திப்பில் என்ன  ஸ்பெஷல்?

மதுரை சந்திப்பில் பிரபல எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும், பட்டிமன்ற புகழ் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
வலைப்பதிவர் இயக்கி வலைப்பதிவர்களே நடித்த குறும்படம் வெளியிட உள்ளோம். வலைப்பதிவர்கள் எழுதிய மூன்று புத்தகங்கள் வெளியிட உள்ளோம். வருகை தரும் ஒவ்வொரு பதிவர்களும் மேடையில் சுய அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் வலைப்பூ அமைத்து தரும் தொழில்நுட்ப பதிவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

6. வலைபதிவர் சந்திப்பின் எதிர்கால திட்டம் என்னவாக இருக்கும்?

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பதிவுலகம் நிறைய வலைப்பதிவர்களையும், வலைப்பதிவு எண்ணிக்கையும் மிகுதியாய் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முகநூலுக்கு வலைப்பதிவர்கள் இடம் பெயர்ந்து விட்டார்கள். இதனால் பல நல்ல வலைப்பதிவர்களையும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பதிவுலகம் நிறைய வலைப்பதிவர்களையும், வலைப்பதிவு எண்ணிக்கையும் மிகுதியாய் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முகநூலுக்கு வலைப்பதிவர்கள் இடம் பெயர்ந்து விட்டார்கள். இதனால் பல நல்ல வலைப்பதிவர்களையும், வலைப்பதிவுகளையும் பதிவுலகம் இழந்துள்ளது.
பதிவர் சந்திப்பை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்துவதன் மூலம் பதிவுலகம். வலைப்பதிவர்கள் அழிந்து விடாமல் நிலைத்திருக்க செய்யலாம்.
அதோடு பதிவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் மேடையாக பதிவர் சந்திப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வெளிநாட்டு பதிவர்கள்,கேரளா,கர்நாடகா,ஆந்திரா, உள்ளிட்ட வெளிமாநில தமிழ் பதிவர்கள் மதுரை பதிவர் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். புத்தக வெளியீடு,குறும்படம் வெளியீடு என தங்கள் சந்திப்பை வலைப்பதிவர்கள் திட்டமிட்டுருப்பது பாராட்டுகுறியது.மதுரையில் நடக்கின்ற பல்வேறு விழாக்களில் இதுவும் ஓனறாக இல்லாமல் ஒரு முக்கிய நிகழ்வாக இது அமையும்.

தொகுப்பு
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

அன்பின் சீனா அய்யா அவர்களையும், மற்றும் திண்டுக்கல் தனபாலன் , தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோரையும் தினகரன் (மதுரைப் பதிப்பு) செய்தித்தாளில், வலைப்பதிவர் சந்திப்பு சம்பந்தமாக, பேட்டியும் படங்களுமாக பார்க்கும்போது மிக்க மகிழ்வாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!
அருமையான பதிவின் மூலம் அவர்களது புகைப்படத்துடன்
சுருக்கமான ஆயினும் தெளிவான பேட்டியின் மூலம்
நிர்வாகிகளை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்