கம்பத்தில் உலகத் திரைப்பட விழா:

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத் தில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை உலகத் திரைப் பட விழா நடைபெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவுக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் திரை இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுசெயலாளர் எஸ்.கருணா இதுபற்றி கூறிய தாவது:
உலக திரைப்பட விழாக்களை பெரும்பாலும் பெருநகர மக்களால் மட்டுமே காண முடிகிறது. கிராமங் களில் இருக்கும் சினிமா ரசிகனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. இதனாலே நமது சினிமா ரசனை மிகவும் பரிதாபத்திற்குரிய ஒன்றாக மாறிவிட்டது. எனவே நமது சினிமா ரசனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கம்பத்தில் இந்த ஆண்டு உலகத் திரைப்பட விழா நடத்தப்படுகிறது.

இதில் 5 நாட்களில் 5 பிரிவு களில் 11 நாடுகளை சேர்ந்த 25 திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன.இதில் ச.தமிழ்ச் செல்வன், சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் போன்ற ஏராளமான எழுத்தாளர்களும், திரைப்படத்துறை சார்ந்த எடிட்டர் லெனின், இயக்குநர் சசி, சமுத்திரக் கனி, பொன்வண்ணன், அனிஸ், ரோஹினி, இளவரசு, ‘பேனாக் காரன்' ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பார்வை யாளர்களுடன் கருத்து பரிமாற்றத் தில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.
போலந்து நாட்டின் மாபெரும் திரைப்பட‌ இயக்குநரான கிறிவ் ஸ்லோஸ்கி-யை கொண்டாடும் விதமாக அவருடைய 10 படங்கள் இந்தப் படவிழாவில் திரையிடப்பட உள்ளன. இதேபோன்று பாலு மகேந்திராவின் நினைவாக அவரது தலைசிறந்த படைப்பாக கருதப்படும் ‘வீடு’ திரைப்படமும் காண்பிக்கப்படுகிறது.
ஜப்பானிய இயக்குநர் யாஸூஜிரொ ஓஷூ ‘மேக் வே ஃபார் டுமாரோ’ என்ற அமெரிக்க திரைப் படத்தைத் தழுவி 1953-ல் எடுத்த ‘டோக்கியோ ஸ்டோரி’ என்ற படமும் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது. பாட்டி, மகள், பேத்தி என வாழ்வின் பல நிலைகளில் பதி வாகும் பெண்களின் மன ஓட்டத்தை இப்படம் மிக துல்லியமாக பிரதிபலிக்கிறது.
இதே போல திருநங்கை யர்களின் வலிமிக்க வாழ்வை பதிவு செய்துள்ள பிரான்ஸ் இயக்குநர் அல்லையன் பெர்லினின் ‘ம வி என் ரோஸ்’ என்ற திரைப்படமும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது. ‘தலைசிறந்த ஆளுமைகள்’ பிரிவின் கீழ் மாசே துங்கின் வரலாறை பேசும் ‘தி பவுண்டிங் ஆஃப் ரிபப்ளிக்’, நெல்சன் மண்டே லாவின் போராட்டத்தை விவரிக்கும், ‘ மண்டேலா- லாங் வே டூ ஃப்ரீடம்’, ஃபிடல் காஸ்ட்ரோவின் வீரப்போராட்டத்தை எடுத்துச் சொல்லும், ‘ஃபிடல் காஸ்ட்ரோ-காம்ரேட்’ ஆகிய படங்களும் திரை யிடப்பட உள்ளன.


தகவல்
இந்து தமிழ் நாளிதழ்
தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments