தனுஷ் என்னும் தண்டச்சோறு

தனுஷ்க்கு 25 வது படம். படத்தின் இடைவேளை வரை தனுஷின் அப்பாவாக நடிக்கும் சமுத்திரக்கனியும்,அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனும்,நண்பர்களாக வருபவர்களும் 100 முறையாவது தண்டச்சோறு என்று தனுஷ் கூப்பிடுகிறார்கள்.
படத்தின் பெயரை வேலையில்லா பட்டதாரி என்பதை தண்டச்சோறு என்று வைத்திருந்தால் பொறுத்தமாக இருக்கும்.படம் பார்க்க துவங்கியதும் காதல் கொண்டேன்’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘புதுப்பேட்டை’ என்று அவர் நடித்த பல படங்கள் ஞாபகத்திற்கு வரும்.
 தனுஷ் தன்னை சிறந்த நடிகர்  என்று நிருபித்திருக்கிறார்.ஆனால் புதிய கதைகளை தேர்வு செய்வதிலும்,மாறுபட்ட நடிப்பை கொடுப்பதிலும்  தோற்றுப் போயிருக்கிறார்.அதே தாடி வைத்த முகம், இடைவேளைக்கு பிறகு திருந்திவிட்டதற்கு அடையாமாக சேவ் செய்யப்பட்ட முகம்,கண்ணாடி இதை பல படங்களில் பார்த்தாயிற்று.தனது 25 வது படத்தை நல்ல கதை,மாறுபட்ட நடிப்பையும் கொடுத்திருக்கலாம். கதை சுருக்கமாக....

தனுஷ் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றி வருகிறார். படிப்புக்கேற்ற வேலையில் சேரும் விருப்பத்துடன் இருக்கும் அவர், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத பல வேலைவாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார். தனுஷ் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதால் அவரது தந்தை சமுத்திரகனி இவரை அடிக்கடி திட்டித்தீர்க்கிறார். தாய் சரண்யாவோ, தனுஷ் மீது பாசம் காட்டி வருகிறார். தனுஷின் தம்பி அதிக சம்பளத்துக்கு வேலை செய்து வருகிறார். அதையும் காரணம் காட்டி தனுஷை மேலும் திட்டித் தீர்க்கிறார் சமுத்திரகனி.

இந்நிலையில் தனுஷ் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் நாயகி அமலாபால் குடியேறுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருநாள் சரண்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. சமுத்திரகனியும், தனுஷின் தம்பியும் ஊருக்கு செல்ல நேரிடுகிறது. ஆதலால் அம்மாவை பார்த்துக்கொள்ளும்படி தனுஷிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் தனுஷ், அமலாபாலுடன் வெளியில் சென்றுவிடுகிறார். சரண்யாவின் உடல்நிலை மோசமடைந்து இறந்து விடுகிறார்.


இறந்த சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. ஒரு செல்வந்தரின் பெண் சுரபிக்கு சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. இதற்கு நன்றிக்கடன் செலுத்திய அந்த பெண், தனுஷிற்கு இன்ஜினியரிங் வேலை வாங்கி கொடுக்கிறார். முதலில் மறுக்கும் அவர், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்ததால் ஏற்றுக்கொள்கிறார். சுரபியின் மூலம் தன் அம்மாவை பார்க்கும் தனுஷ், தனக்கு கிடைத்த வேலையையும் மனப்பூர்வமாக செய்ய புறப்படுகிறார். அந்த வேலையில்தான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.

தனுஷ் தனக்கு கொடுத்த அரசு ஒப்பந்தப்பணியை செய்வதற்காக ஒரு பகுதிக்கு செல்லும் போது மற்றொரு ஒப்பந்ததாரரான வில்லன் அமிதேஷ் பிரச்சினை செய்கிறார். இதனால் இருவருக்கும் பகை ஏற்படுகிறது. தனுசை அந்த இடத்தில் வீடு கட்டவிடாமல் தடுக்கிறார் அமிதேஷ்.

இறுதியில் தனுஷ் வில்லனின் எதிர்ப்பை மீறி பில்டிங் கட்டினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை..
வீட்டில் தண்டச்சோறாக  இருப்பவர்கள் பார்க்கலாம். தனுஷ் இனியாவது தனது கதை தேர்வு,நடிப்பையும் மாற்றிக்கொள்வது நல்லது.

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

ADMIN said…
நிரடல் இல்லாமல் சரியான முறையில் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். பகிர்வினிற்கு நன்றி.


நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்: Happy Friendship Day 2014 Images
VIP is targetted to Dhanush fans only...