பார்த்திபனின் ...."கதை, திரைக்கதை வசனம் இயக்கம்" +ஸ்டீல்கள்

எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பவர் பார்த்திபன்.... நண்பர்களுக்கு அனுப்புகிற பிறந்தநாள் பரிசுகளை கூட வித்தியாச மாக யோசித்து தானே தயாரித்து அனுப்புவாராம். நீண்ட இடைவெளிக்கு பின்  ஒரு புதிய படத்தை இயக் கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் "கதை, திரைக்கதை வசனம் இயக்கம்".இந்த படத்தில் கதையே இல்லை என்று பார்த்திபன் கூறியுள்ளார். கதை இல்லாத இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் யாவுமே பார்த்திபன் தான்.
இந்த படத்தின் சப்டைட்டில் "A film without a story" என்று கூறப்பட்டுள்ளது. எதையுமே வித்தியாசமாக செய்யும் பார்த்திபன் படத்தின் பெயரையே வித்தியாசமாக வைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லைதானே.
 இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜரத்தினம் செயல்படுகிறார். சுதர்சனம் எடிட்டிங்கை கவனிக்கிறார்.வேல்முருகன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்
.

இந்த படத்தின் ஹீரோயினாக மும்பை அழகி ஒருவர் நடிக்கிறார். அதுமட்டுமின்றி பார்த்திபனி மகள் கீர்த்தனா இந்த படத்தில் ஒரு முக்கிய பணி ஆற்றுகிறாராம். படத்தில் நடிக்கின்றாரா அல்லது தொழில்நுட்ப ரீதியில் பணிபுரிகிறாரா என்பதை பார்த்திபன் ரகசியமாக வைத்திருக்கிறார்.

தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments