கார்த்தி நடிக்கும் கொம்பன் சூட்டிங் ஸ்பாட்..

கார்த்தி ... நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் சமீபத்தில் வந்த  ஆல் இன் ஆல் அழகு ராஜா படுதோல்வியை சந்தித்தது. ஓரே மாதிரியான நடிப்பு சந்தானம் கூட்டணி என சலிப்பு தட்டிப் போக படங்கள் சரியாக போகவில்லை..  டிரண்டை மாற்றி வட சென்னை பகுதி வாழ்க்கையை மையமாக  கொண்ட மெட்ராஸ் என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி தற்போது  பருத்திவீரன் ஸ்டைலில் கொம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
முற்றிலும் கிராமத்து கதையம்சம் கொண்ட து கொம்பன் . ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் -மற்றும் கீழத்தூவல் கிராமங்களில்  படபிடிப்பு நடந்து வருகிறது.இப்படத்தை குட்டிப்புலி பட டைரக்டர் முத்தையா கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார் - கிராம மக்களின்  வாழ்க்கை முறைகளை படமாக எடுத்து வருகின்றனர்.
    இத்திரைப்படத்தில் கார்த்தி-லெட்சுமேனன்-கருணாஸ்-ராஜ்கிரண்- தம்பி ராமையா- கோவை சரளாஉள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர் கடலாடி-மற்றும் முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிரமங்களில் கடந்த ஒரு வாரமாக கொம்பன் திரைப்பட படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

பிரத்யோக புகைப்படங்கள் 






தொகுப்பு
செல்வன்
படங்கள்  மற்றும் 
தகவல்
நிருபர் பூபதி - கடலாடி


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

மறு வாழ்வு தொடங்கட்டும்...