கமல் -ரஜினி...அஜித் - விஜய் இணைந்து கலக்க போகிறார்கள்...

ரொம்ப காலமாகவே கமல்-ரஜினியை மீண்டும் இணைக்க வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதற்கான சூழல் இன்னமும் கைகூடவில்லை. இதுகுறித்து கமல் ஒருமுறை கூறுகையில், நானும், ரஜினியும் இணைந்தால் அது ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.
அந்த அளவுக்கு படம் தயாரிக்க இப்போது கோலிவுட்டில் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றவர், ஒருவேளை, அப்படி யாராவது முன்வந்து, சரியான கதைகள் கிடைத்தால் நாங்கள் மீண்டும் இணைவது சாத்தியமாகும் என்றார்.

அதையடுத்து, அதைப்பற்றி யாரும் பேசக்கூடவில்லை. ஆனால், ரஜினி-கமலை மீண்டும் இணைக்கப்போவதும் கே.பாலசந்தரால் மட்டுமே இப்போது சாத்தியமாகியிருக்கிறது.
தற்போது உத்தமவில்லனில் டைரக்டராகவே நடித்து வரும் கே.பாலசந்தர், 21-ம் நூற்றாண்டு நடிகர் மனோரஞ்சனாக நடிக்கும் கமலை வைத்து வீர விளையாட்டு என்றொரு படத்தை இயக்குகிறாராம். அப்போது ஒரு காட்சியில் ரஜினியும் என்ட்ரி கொடுக்கிறாராம்.
ஆக, மீண்டும் ரஜினி-கமலை கே.பாலசந்தரே நடிக்க வைத்த பெருமையையும் பெறப்போகிறார்.
இந்த நிலையில, ஏற்கனவே ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்த விஜய்-அஜீத் ஆகிய இருவரையும் இணைத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக கோடம்பாக்கத்தில் செய்தி பரவிக் கிடக்கிறது.ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகு அந்த பட வேலைகளில் இறங்கும் ஷங்கர் தீபாவளிக்கு அவர்கள் இணைகிற படத்தின் பூஜை போடுகிறாராம். வழக்கம்போல் இதுவும் வதந்தியோ என்னவோ,.
ஆனால், இப்படியொரு நிகழ்வு நடந்தால் மொரம்ப சந்தோசமே. காரணம், தல, தளபதி படங்கள் ரிலீசாகும் நேரங்களில் அடித்துக்கொள்ளும் அவர்களின் ரசிகர்களும் அதன்பிறகு நண்பேன்டாவாகி விடுவார்களே

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments