5 நாட்கள் முடிந்து போனது... வானில் பறந்து கொண்டிருந்த விமானம் என்ன ஆனாது என்ற கேள்விக்கு விடையில்லை.... ஆயிரம் கடல்மைல் பரப்பில் 10 நாடுகளைச் சேர்ந்த 36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல் கள், நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.
விபத்து நடந்திருந்தால் அதற்கான தடமும் இல்லை. விமானம் பற்றிய சின்ன தகவலும் இல்லை... உண்மையில் என்னதான் நடந்திருக்கும் உலகமே அதிர்ச்சியோடும்,கவலையோடும் காத்திருக்கிறது.
விமாத்தில் பயணித்த சென்னையை சேர்ந்த சந்திரிகாஷர்மா(50) கணவர் நரேந்திரன்.... "கடந்த 5 நாட்களாக நாங்கள் குழப்பத்திலேயே இருக்கிறோம். மன நிம்மதி, தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறோம். காணாமல் போன விமானத்தை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என மனமுடைந்து பேசியுள்ளார். தன் மனைவி என்ன ஆனார் என தெரியாமல் இருப்பது சோகத்திலும் சோகம்...
விமானம் காணாமல் போன கடல்பகுதிக்கு அருகே டிராகன் முக்கோணம் என்ற பகுதியுள்ளது அந்த இடத்தை கடக்க முயலும் கப்பல்கள், விமானம் காற்றில் கரைந்து போவதாக மர்ம தகவல்கள் உண்டு. இது குறித்து 2012ல் ''கப்பல்,விமானங்களை வ¤ழுங்கும் லீலங்டிராகன் என்ற தலைப்பில்'' இன்றையவானம் பதிவில் வெளியிட்டுள்ளோம் மீண்டும் உங்கள் பார்வைக்கு...
கீழே கிளிக் செய்துபடிக்கவும்........
கப்பல்,விமானங்களை விழுங்கும்
விமானம் என்ன ஆனாது.அதிலுள்ள பயணிகளுக்கு என்ன ஆனார்கள் என்பதை தெரிந்துகொள்ள அவர்களது உறவினர்கள் மட்டுமல்ல உலகமே காத்திருக்கிறது.
-செல்வன்
Comments