வருகிற பிப். 24 தேதி 100 வது பிறந்த தினத்தை கொண்டாட இருக்கிறது பாம்பன் பாலம். 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் பாம்பன் நிலப்பகுதியிலிருந்து ராமேஷ்வரம் தீவுக்கு செல்ல இந்தியாவின் இராணாடவது நீளமான பாலமாகும்.நீளம் 6.776 ஆடி .
இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்க...
கடந்த சனிக்கிழமை பாம்பன் ரயில் பாலத்தின் வழியாக ராமேஷ்வரம் சென்றுவந்தேன். பாலத்தின் மீது ரயில் பயணிக்கிற 10... 15 ... நிமிடங்கள் ஒரு அற்புத அனுபவம். ராமேஷ்வரம் செல்லும் போதும் வருகின்ற போதும் எடுக்கப்பட வீடியோ காட்சிளை (5 நிமிடம் ஓடும்) இணைத்து உங்களுக்காக....
ராமேஷ்வரம் தரைப்பகுதியிலிருந்து கடல்பகுதிக்கு செல்லும் ரயிலும்... பின்பு ரயில் பாலத்திலிருந்து எதிர்புறம் உள்ள சாலை பாலம் (பஸ் போக்குவரத்துக்கு) , தொட்டுவிடும் தூரத்தில் தெரியும் கடல் பகுதி, சற்று தூரத்தில் தெரியும் படகுகள், சூரியன் மறைகிற மாலை நேரத்தில் பாலத்தின் அற்புதமான காட்சி ( பி.சி.ஸ்ரீராம் எபக்டில்!!!!!!!!) பாலத்தில் பஸ் போன்ற வாகனங்கள் பயணிப்பது,சாலை பாலத்திலிந்து பயணிகள் கைசைப்பது, கணிணியுடன் ஒலி பெருக்கி ( சிலருக்காக ஆங்கிலத்தில் ஸ்பீக்கர்) இருந்தால் பாலத்தில் ரயில் செல்லும் ஓசை டடடன்...டடடன்...டடடன் கேட்கலாம். உற்சாக மிகுதியில் ரயில் பயணிகள் வீசில் அடிப்பதையும் கேட்கலாம்.
மதுரையிலிருந்து அதிகாலை 6.25க்கும், ரமேஷ்வரத்திலிருந்து மாலை 6.00 மணிக்கும் ரயில்(கட்டணம் ரூ.30 ) உள்ளது. சென்னையிலிருந்தும் நேரடி ரயில் உள்ளது. ஒரு முறை பாலத்தில் பயணித்து பாருங்கள் நீங்கள் எந்தவயதகாரராக இருந்தாலும் குழந்தையாக மாற்றிவிடும்...
ராமேஷ்வரத்திலருந்து தனுஸ்கோடிக்கும் சென்றுவந்தேன். அதை தனுஷ்கோடியில் புயல்ராணியை சந்தித்தேன் என்ற தலைப்பில் விரைவில் ....
-செல்வன்
Comments
அந்த மகிழ்ச்சியே தனி தான்...