ஒரு டீ போடுப்பா... டீ ஆர்டர் கொடுத்துவிட்டு பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தேன்.. சார் காலண்டர் வாங்கிட் டிங்களா... இரண்டு கால ண்டர்களை கையில் வைத் தபடி டீ கடை ஓனர் கே ட்டார்.., ஏற்கனவே மளி கைகடையில் கொடுத்தது .. புது செல்போன் வாங்கிய போது டேபிள் காலண்டர் என 3... 4 காலண்டர்கள் இருந்தாலும், டீக்கடைககும் காலண்டர் போடுறீங்களா என்றபடி வாங்கிக்கொண்டேன். அலுவலகம் சென்ற போது பல வண்ணங்களில் மாதக்காலண்டர் கிடைத்தது... நண்பர் ஒருவர் அன்புடன் என அவரின் பெயரிட்டு பாக்கெட் காலண்டர் கொடுத்தார்.
இப்படி காலண்டர் விலை கொடுத்து வாங்கத்தேவையில்லாத படி குவிந்து விடுகின்றன. விலை கொடுத்து வாங்குகிற காலண்டர் என்றால் அது விவேகானந்தா காலண்டர் மட்டுமே... விவேகானந்தர் கைகளை கட்டியபடி நிற்கும் படத்துடன் தமிழ் எண்களுடன் வருகிற பிரத்யோகமான காலண்டர் சிலருக்கு ரெம்ப ஸ்பெஷல். சில வீடுகளில் விவேகானந்தா காலண்டர் குறிப்பிட்ட இடத்தில் நிரந்தரமாக தொங்குகின்றன.கணிணி,அச்சு இயந்திரங்களின் வளர்ச்சியும் காலண்டர்களை பல வண்ணங்களில் , பல டிசைன்களில் கொண்டுவர உதவியிருக்கின்றன.
நம்மால் தினசரி கிழித்து கசக்கி எரியப்படுகிற காலண்டரின் ஒவ்வொரு தேதிகளிலும் ஒரு வரலாறு மறைந்திருக்கிறது. உலக அளவில்,இந்திய அளவில், நமது மாநில அளவில், ஏன் உங்கள் குடும்ப அளவில் முக்கிய நிகழ்வுகள் காலண்டரில் வரலாறாக பதிந்துவிடுகிறது. நெல்சண் மணடேலா மறைந்த தினமான டிசம்பர் 5 இனி உலக அளவில¢ முக்கிய தினம். அதே போல ஒவ்வொரு தேதியிலும் ஏதாவது முக்கிய நிகழ்வு வரலாறாக பதிந்துவிடுகிறது. ஒவ்வொரு வருட காலண்டரிலும் பல வரலாறுகள் அடங்கியிருக்கிறது. இப்படி பல வரலாறுகளை தனக்குள் கொண்ட காலண்டருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது....
ஜனவரியும் , பிப்பரவரியும் கடைசி
மாத மாக இருக்கும் காலண்டர்...
வருடத்தின் கடைசிமாதமாக தற்போது டிசம்பர் மாதம் இருக்கிறது. ஆரம்பகால காலண்டரில் ஜனவரியும்,பிப்ரவரியும் கடைசிமாதமாக இருந்தது என்றால் நம்புவீர்களா?....
பூமி சூரியனை சுற்றிவரும் காலத்தை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக ஒழுங்குபடுத்துவதே காலண்டர்.காலண்டர் என்பது ஒரு இடத்தில் துவங்கி,மற்றொரு இடத்தில் முடியும். தமிழ் வருடம்,தொலுங்கு வருடம் என பல்வேறு மாறுபட்ட வருடப்பிறப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் பல்வேறு வருட கணக்கீடுகள் உள்ளன. முன்பெல்லாம் 300 நாட்கள், 310 நாட்கள், 280 நாட்கள் என 10 மாதங்களை கொண்ட காலண்டர்கள் தான் இருந்தன. மார்ச்சில் தொடங்கி டிசம்பரில் முடியும். பூமி , சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 1\4 நாட்கள் ஆகும் என கணக்கீடபட்டபோது, உலகமுழுவதும் ஒரே மாதரியான காலண்டரின் தேவை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் காலண்டரை உருவாக்கியவர் ரேமானிய சக்கரவரத்தி ஜூலியஸ்சீசர்.கி.மு. 45ல் இந்த மாற்றும் உருவாக்கப்பட்டது. அவர் செய்த ஏற்பாட்டின் படி ஏற்கனவே இருந்த 10 மாதங்களோடு ஜனவரி,பிப்ரவரி மாதங்களை கடைசியாக சேர்த்து ஒரு மாதத்திற்கு 31 நாட்கள்,அடுத்த மாதத்திற்கு 30 நாட்கள் என மாற்றப்பட்டது கடைசி மாதமான பிப்ரவரிக்கு 28 நாட்கள் கொடுக்கப்பட்டன. மேற்கண்ட முறைப்படி 365 நாட்கள் சரியாக போனாலும் கால் நாள்(1\4) சரிக்கட்ட லீப் வருடங்கள் உருவாக்கப்பட்டன.நாம் பயன்படுத்தும் காலண்டரில் ஒரு விஷேசம் இருக்கிறது, ஜூலைக்கும்,ஆகஸ்ட் மாதத்திற்கும் 31 நாட்கள் ஏன் தெரியுமா?ஜூலை என்பது ஜூலியஸ்சீசர் என்பதன் சுருக்கம், அகஸ்ட் என்பது சீசருக்கு பின் ரோமை ஆண்ட அகஸ்டஸ் மன்ன்ன் பெயர் சுருக்கம் . இருவருக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் விதமாகவே அப்படி அமைக்கப்பட்டது.
தற்போது பயன்பாட்டில் உள்ள
கிரக்கோரியன் காலண்டர்....
ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட காலண்டர் ஜூலியன் காலண்டர் எனப்படுகிறது. இந்த காலண்டரிலும் ஒரு சிறு குறைபாடு... வருடத்திற்கு சரியாக 365 1\4 நாட்கள் இல்லை.சரியாக கணக்கீட்டு சொல்ல முடியாதபடி ஒரு சிக்கலான கணக்கு. லீப் வருட கண்க்கு படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருநாளை கூட்டுவதால் வருடக்கணக்கு கொஞ்சம் அதிகமாகி விடுகிறது. இதனை சரிசெய்ய 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று லீப் வருடங்களை விலக்கி சாதரண வருடங்களாக கணக்கிடும் திருத்தத்தை கி.பி. 1582 ல் போப் கிரிகோரி கொண்டுவந்தார். இப்படி பல மாற்றங்களை அடைந்து திருத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டரைத்தான் நாம் தற்போது பயன்படுத்துகிறோம். இன்னொரு தகவல் 6ம் நூற்றாண்டிலிருந்து தான் வருடங்கள் கி.மு., கி.பி. என பிரிக்கப்பட்டன.
டீ க்கடைக்காரர் கொடுத்த புதுவருட காலண்டரை திருப்பி, திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்... அச்சிடப்பட்ட தேதிகளில் என்ன மர்மங்கள் நாமக்காக காத்திருக்கிறதோ. ம்ம்ம்..... நாளை காலண்டர் தாளை கிழிக்கும் போது பார்த்து கிழிக்கவும் அதில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் நாளாக இருக்கலாம்.
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

- செல்வன்
Comments