ஜனவரி 5 தமிழ் புத்தாண்டா ????.......


இது என்னடா புதுக்குழப்பம்?....ஏற்கனவே இரண்டு தேதிகளில் அல்லாடிக்கொண்டிருக்கும் தமிழ்புத்தாண்டுக்கு மீண்டும் குழப்பமா?... நேற்றைய  தி இந்து தமிழ் நாளிதழில் படித்தேன் .. சிலர் படித்திருக்கலாம்..


கி.பி. 6 - 7-ம் நூற்றாண்டின் மானசாரம் கட்டிடக் கலை மற்றும் சூரியனின் நகர்வு அடிப்படையிலான நாட்காட்டியைக் கொண்டு பழந்தமிழர் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு  (ஜனவரி 5-ம் தேதி) பிறப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு எது?.. சித்திரை முதல் தேதியா, தை முதல் தேதியா என்ற சர்ச்சை ‘ஆட்சிக்கு ஆட்சி’ மாறிமாறி எழுந்துவரும் நிலையில், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் புதுத் தகவல் ஒன்று கூறுகின்றனர். இதுகுறித்து தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன் கூறியதாவது:
சோழர் காலத்தில் பழந்தமிழர்கள் சூரியனை வழிபட்டு, அதன் அடிப்படையிலான நாட்காட்டியைப் பின்பற்றினர். அதன் அடிப்படையில் இன்று (5.1.2014) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் நகருவதால் ஏற்படும் நிழலை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டே சோழர்கள் நாட்காட்டியை நிர்ணயித்தார்கள். சூரியன் வடக்கில் ஆறு மாத காலமும் தெற்கில் ஆறு மாத காலமும் வலசை செல்லும் தன்மை கொண்டது. தமிழ் இலக்கியங்கள் இதை வட செலவு, தென் செலவு என்று குறிப்பிடுகின்றன.
அதன்படி மார்கழி மாதத்தின் அமாவாசை (ஜனவரி 1-ம் தேதி) முடிந்த மூன்றாம் நாள் (ஜனவரி 4-ம் தேதி) மாலை பிறை தெரியும். அதற்கு மறுநாள்தான் (ஜனவரி 5-ம் தேதி) தை முதல் நாள். ராஜராஜ சோழன் சதயம் தொடங்கி பூசம் வரை 12 நாட்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினான்.
12-ம் நாள் முழு நிலவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுறும். அதன் பெயர் ‘ஆட்டைத் திருவிழா’. இதற்கான ஆதாரங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் திருவாசல் கல்வெட்டிலேயே இருக்கின்றன.அதன் அடிப்படையில் இன்று மாலை பிறை தெரிந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.இவ்வாறு தென்னன் மெய்ம்மன் கூறியுள்ளார்.

இந்த புதிய தமிழ்புத்தாண்டு சரிதான?...

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
வணக்கம்

இந்த செய்தியை பார்த்த பின் எனக்கும் தடுமாற்றமாக உள்ளது..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கிறது...!
magickousi said…
http://www.thamizhagam.net/media/Managan%20Inamani.html
இவ்விணைப்பைச் சொடுக்குங்கள் தென்னன் மெய்ம்மன் கூறியது பற்றி......