ஸ்பெஷல் காபி-10பைசா, இட்லி--7பைசா, ஸ்பெஷல் தோசை--15பைசா......

பொங்கல் விடுமுறைக்கு வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள்... இரவு உணவு மட்டும் நடுத்தர ஓட்டல் சாப்பிட்டேன்.. 1 ஆணியன் ஊத்தாப்பம், 1 பூரோட்டா,1 கப் காப்பி சாப்பிட்டேன் - ரூ100 பில் வந்தது. இதுவே சற்று உயர்தர ஓட்டல் என்றால் கூடுதலாக இன்னொரு மடங்கு பில் வரும். விலை உயர்வை பற்றி நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் கொடுத்த  நயாபைசா ஓட்டல் பற்றி தகவல்.....
50ஆண்டுகளுக்கு முன்பு நாடு சுதந்திரம் அடைந்து 15ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிpல் கேரளா டீ ஹோட்டல் என்ற பெயாpல் அந்தக்காலத்து உணவகம் செயல்பட்டு வந்துள்ளது.இந்த உணவகம் ஏழைஎளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவுகளை வழங்கி வந்ததால் நயாபைசா ஹோட்டல் என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

மதுரை-திருநெல்வேலி சாலையில் செயல்பட்டு வந்த இந்த உணவகத்தை கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாயர் மற்றும் அவரது சகாக்கள் உள்ளுர்;காரர்கள் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளனர்.
இங்கு ஆட்டுக்கால் சூப் 1கப்--10பைசா, சாயா--7பைசா, ஸ்பெஷல் சாயா--10பைசா, காபி--7பைசா, ஸ்பெஷல் காபி--10பைசா, சாப்பாடு 1கப்--25பைசா, பிரியாணி 1பிளேட்--1ரூ.20பைசா, அரைபிளேட்--65பைசா, கால்பிளேட்--35பைசா, புரோட்டா 1 சாலனாவுடன்--16பைசா, புரோட்டா 2 சாலனாவுடன்-32பைசா, முட்டை புரோட்டா--38பைசா, முட்டை அவியல்--19பைசா, ஆம்ளேட்--25பைசா, தோசை1 --7பைசா, ஸ்பெஷல் தோசை--15பைசா, வருவல்--15பைசா, தனிசாலனா--10பைசா, இட்லி--7பைசா, கமால்பூhp--10பைசா, சாதாபூhp--7பைசா, கேக்--7பைசா, பால்பண்--7பைசா, முட்டைகோஸ்--7பைசா என்று அன்றைய காலத்து உணவு விலைநிலவரங்களை கொண்ட விலைப்பட்டியல் தற்போது திருமங்கலம் உத்தண்டன் தெருவில் கதவாக காட்சியளித்தக் கொண்டிருக்கிறது.
எந்தா சாரே இவிடே வரு என்ற நாயரின் கனிவான குரலில் மயங்கிய திருமங்கலம் பகுதி மக்கள் ஊணு கழிக்க கேரளா டீ ஹோட்டலையே நாடி வந்துள்ளனா;.இங்கு தற்போதைய சோலாபூரி அன்றைய தினத்தில் கமால்பூரிp என்ற புதுமையான பெயாpல் தினம்தோறும் அதிகளவு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.அதே போல் மாலை நேரங்களில் மணமணக்கும் ஆட்டுக்கால் சூப்பை குடிப்பதற்கென்று தனியாக ரசிகர் கூட்டமே திருமங்கலம் நகரிpல் இருந்துள்ளது.இந்த ஹோட்டல் பற்றி அந்தப்பகுதியில் உள்ள சையது(85)என்ற முதியவாpடம் கேட்டபோது அதெல்லாம் அந்தக்காலம்,கேரளா டீ ஹோட்டலில் காலையில் சாயா குடிக்கவும்,சாயந்திரம் ஆட்டுக்கால்சூப் குடிக்கவும் நீண்ட நேரம் காத்துக்கிடந்தது இன்றும் என் மனசில அப்படியே இருக்குது என்று அங்கலாய்ப்புடன் கூறினார்;.
இதனிடையே 70ம் ஆண்டு துவக்கத்தில் நாயர்; மறைந்தபோது நயாபைசா ஹோட்டலின் மறைவும் துவங்கியுள்ளது.இருப்பினும் உள்ளுரைச் சோ;ந்த சிலர் கேரளா டீ ஹோட்டல் என்ற பெயாpல் தொடர்ந்து நடத்தி வந்தாலும் விற்பனையில் சரிpவு ஏற்பட்டு இந்த ஹோட்டல் மண்ணைவிட்டும் மக்களை விட்டும் மறைந்தே போய்விட்டது.இருப்பினும் அன்றைய காலத்து கேரளா ஹோட்டலின் விலைப்பட்டியல் மற்றும் கதவாக மாறி காட்சியளிப்பதுடன் அன்றை உணவுவிலைகளை வெளிச்சம் போட்டு காட்டி இன்றைய மக்களை அதிர்;ச்சியில் ஆழ்த்தி வருகிறது........ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் சரிp......அன்று அன்றுதான்.......இன்று இன்றுதான்.........

ஆக்கம்: 
ஜெ.எஸ்.செல்வராஜ். 


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

சேவையில் திருப்தி அடைந்த நாயர் மக்கள் மனதில் என்றும் இருப்பார்...