உங்கள் செல்போனுக்கு காய்ச்சலா அரிசி வைத்தியம் செய்து பாருங்க...
தண்ணீரில் விழுந்த செல்பொன்கள் பெரும்பாலும் பயனற்றுப்போய் விடுவது வாடிக்கை.
ஆனால் தண்ணீரில் விழுந்த செல்போன்களுக்கு மீண்டும் உயிரூட்டும் புதுமையான வைத்தியம் தற்போது கிராமப்பகுதிகளில் பிரபலமாகி வருகிறது. தண்ணீரில் விழுந்த செல்போனை உடனடியாக வெளியே எடுத்திட வேண்டும்.பின்னா; செல்லை ஆப் செய்து உள்ளே இருக்கும் பேட்டாரியை விரைவாக கழற்றிட வேண்டும்.பிறகு செல்போனை முடிந்த அளவு உதிரிபாகம் போல் கழற்றி குவித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசி மீது வைக்கவேண்டும்.இதையடுத்து செல்போன் மேல் சிறிது அரிசியை கொட்டிவைத்து 1மணி நேரம் வெயிலில் வைக்கவேண்டும்.அதன்பின் செல்போனை நேரடியாக 1மணி நேரம் வெயில் காயவைக்க வேண்டும்.இந்த தொடர் சிகிச்சை முறைகளுக்கு பிறகு உதிரியாக கிடக்கும் செல்போன் பாகங்களை ஒருங்கிணைத்து ஆன் செய்தால் செல்போன் பயன்பாட்டுக்கு ரெடியாகிவிடும்.செல்போனில் நுழைந்துள்ள தண்ணீரை அரிசிக்கு இடையே வைத்து ஆவியாக்கி செல்போனுக்கு உயிரூட்டிடும் இந்த புதுமையான அரிசி வைத்தியம் தற்போது மதுரை மாவட்டம் பேரையூரின் பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் உள்ளது உங்கள் செல்போனுக்கு காய்ச்சலா அரிசி வைத்தியம் இருக்க கவலை எதுக்கு.....
தகவல்
செல்வராஜ்
செல்வராஜ்
Comments
நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!