மாதங்களில் அவள் மார்கழி ... காதலியை மார்கழி மாதமாக உருவகபடுத்திபாடும் அளவுக்கு மார்கழிமாதம் அழகு. அழகோடு அழகாக வீட்டுவாசலில் கோலமிடுவது இன்னும் அழகு.
மாதங்களில் சிறந்த மார்;கழி மாதத்தில் அரிpசி மாவினைக் கொண்டு வாசலில் கோலமிட்டால் குலம் செழித்து குடும்பம் தழைத்து தலைமுறை வளம் பெற்றிடும் என்பது ஐதீகம்.இது குறித்த பல்வேறு சுவராஸ்யமான தகவல்கள்
பனியும் குருளிரும் ஒருமித்து வாசம் பண்ணும் மார்;கழி மாதம் புனிதமான மாதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.இந்த மாதத்தில் தான் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசல்களில் கோலமிட்டு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்;.இருப்பினும் மார்;கழி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது வீட்;டுவாசல்களில் விதவிதமாக போடப்பட்டிருக்கும் கோலங்கள் தான்.இந்த கோலங்களில் பல்வேறு வகைகள் இருப்பினும் அரிpசிமாவினைக் கொண்டு போடப்படும் கோலம் தான் சாலச்சிறந்தது என முன்னோh;கள் தொpவித்துள்ளனா;.
அரிசிமாவினைக் கொண்டு இடப்படும் கோலமே தமிழர்;களின் மரபுவழிக் கோலமாகும்.ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் சுண்ணாம்பு கற்பொடி மற்றும் பல்வேறு வண்ண துகள்களைக் கொண்டு உருவாக்கப்படும் கோலங்களே வீட்டுவாசல்களை அலங்கரித்து வருகிறது.காலம் காலமாக தமிழா;கள் கடைபிடித்து வந்த அரிசிமாவுக்கோலம் தற்போது முற்றிலும் மறைந்து போய்விட்டது என்றே கூறலாம்.ஆனால் அரிpசி மாவினைக் கொண்டு வீட்டுமுன் மாக்கோலம் போட்டால் அதை கணக்கற்ற எறும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரிpனங்கள் உணவாகக் கொண்டு பசியாறுகின்றன என்பதுதான் உண்மை.காலையில் எழுந்தவுடன் மாக்கோலம் போடுவது முதல்வேலையாக ஜீவராசிகளுக்கு உணவு தந்து ஆதரிக்கும் செயலாக உள்ளது.அதே போல் பண்டிகை காலங்களில் அரிசிமாவை நீரி;கலந்து துணியில் கட்டி பிழிந்து வீடுகளுக்குள் போடப்படும் கோலம் இழைக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதம் தொடங்கியதும் வீட்டுமுன் அரிpசிமாவைக் கொண்டு மாக்கோலம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் வாசம் செய்வது நிச்சயம்.அதே போல் மாக்கோலத்தை எறும்புகள் உண்பதால் அது அன்னதானம் போட்டதற்கு சமமானதாகவும் ஏழு தலைமுறைக்கு வீட்டிலுள்ள தானியங்கள் வற்றாது நிலைத்திடும் என்று கூறப்படுகிறது.இந்தகைய பயன்மிகு மாக்கோலம் இருக்கையில் நவீனம் நாகரீPகம் என்ற பெயராpல் தற்போது போடப்படும் சுண்ணாம்புப்பொடி மற்றும் வண்ணத்துகள் கோலங்கள் ஜீவராசிகளுக்கு உணவளிப்பதை தடுத்து பாவங்களை சோ;ப்பதாகவே உள்ளது.இது போன்ற நவீனகால கோலங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பினும் அதனால் எந்தவித பலாபலன்களும் இல்லை.
காக்கைகளுக்கு உணவு வைப்பது குறைந்துபோனதால் காக்கை ,சீட்டுக்குருவிகள் குறைந்து போனது. டெங்கு காய்ச்சல் பரவ தவளைகள் குறைந்தது தான் காரணம் என்பது ஆய்வு முடிவு. எறும்புகள் போன்ற ஜீவராசிகளுக்கு மாக்கோலம் மூலம் உணவிடுவதால் மாகாலட்சுமி அருள் கிடைக்குமா என்பதை விட சகஜீவராசிகள் உயிர்வாழும்...
ஜெ.எஸ்.செல்வராஜ்.
Comments