1964 - தனுஷ்கோடி- ஜெமினிகணேசன்- சாவித்திரி -1000 பேர் பலி

1964- தனுஷ்கோடி- நீங்கிடாத சோகம்! - ஜெமினிகணேசன்-சாவித்திரி-1000 பலி தனிதனி வார்த்தைகளுக்கெல்லாம் 49 ம் ஆண்டுகளுக்கு  முன் முக்கிய தொடர்பு இருக்கிறது. அது ஓரு மிகப்பெரிய சோகம். ஓரு சில நிமிடங்களில் 1000 க்கும் மேற்பட்டோர் ஜலசாமாதியான சோகம் அது.
தனுஷ் கோடி...... இந்தியாவின்  தென்பகுதியில் துறைமுகத்துடன் கூடிய வர்த்தக நகராக புகழ்பெற்று விளங்கியது.
இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள்,ரயில்நிலையம்,தபால்,தந்திநிலையம்,சுங்கச்சாவடி,கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகம்,மீன்பிடி நிலையங்கள் மற்றும் கிறிஸ்தவ கோவில்கள் என சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரமாக தனுஷ்கோடி திகழ்ந்துள்ளது.இங்கு மீனவர் கள்,அரசு பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்துள்ளனர்.சென்னை எக்மோர் லிருந்து இலங்கையின் தலைநகரான கொழும்புவிற்கு பொருட்களையும் பயணிகளையும் ஏற்றிச் செல்லும் இந்தோ-சிலோன் போட்மெயில் ரயில்சேவை அன்றைய காலகட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது.தனுஷ்கோடி வரை இயக்கப்படும் இந்த ரயிலின் சரக்குகள் தனுஷ்கோடியிலிருந்து கொழும்புவிற்கு கப்பல் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வருபவர்கள் தனுஷ்கோடியை பார்க்காமல் திரும்புவதில்லை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அப்போது அதிகமாக இருந்துள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தனுஷ்கோடிக்கு முடிவுகட்டும் வகையில் அந்த கறுப்பு நாள் 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வந்துள்ளது.அப்போது தென்தமிழகம் முழுவதிலும் டிசம்பர் மாதம் 21ம் தேதி முதல் இடைவிடாத மழை பெய்துள்ளது.மின்சாரம் அப்போது தடைபட்டிருந்ததாலும் எரிபொருள் கிடைக்காததாலும் எங்கு காணிணும் இருள் சூழ்ந்திருந்தது.அந்நேரம் தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்த பக்தவச்சலம் மழைக்கால போரிழப்புகளை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபடி இருந்துள்ளார்.சரியாக 1964ம் ஆண்டு டிசம்பர்  மாதம் 23ம் தேதி அதிகாலை நேரத்தில் மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறி வெறிகொண்டு வீசியதில் 20அடி உரத்திற்கு ஆழிப்பேரலைகள் உருவாகி தனுஷ்கோடி நகரை ஆக்ரோஷமுடன் தாக்கியது.

                         
                                        சிதைந்து போன தேவாலயம்

இதனை அறியாது உறங்கிக்கொண்டிருந்த மக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆழிப்பேரலையின் கோரதாண்டவத்தில் சிக்கி பலியானார்கள்.அந்நேரம் பாம்பன் ரயில்நிலையத்திலிருந்து தனுஷ்கோடிக்கு எண்:653 பாசஞ்சர் என்றழைக்கப்படும் ரயில் 7பெட்டிகளுடன் கிளம்பிச் சென்றுள்ளது.அதில் வடமாநிலத்திலிருந்து சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 110பேரும் ரயில்பணியாளர்கள் 5பேரும் என 115பேர் பயணம் செய்துள்ளனர்.புயல் நிலவரம் குறித்து அறிந்திடாமல் கிளம்பிச்சென்ற இந்த பாசஞ்சர் ரயில் தனுஷ்கோடியை நெருங்கிடும் போது ஆழிப்பேரலையின் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகி அதில் பயணித்த 115பேரையும் ஒருநொடியில் ஜலசமாதியாக்கி விட்டது.எங்கு பார்த்தாலும் மரணஓலம்,எங்கு காணிணும் பிணங்கள்,மண்ணில் புதைந்து போன வீடுகள் என 1964ம் ஆண்டு தனுஷ்கோடி என்ற சிறப்பு வாய்ந்த நகருக்கு கறுப்பு நாளாக மாறிவிட்டது.
டிசம்பர் மாதம் 23ம் தேதி அதிகாலை ஏற்பட்ட இந்த பேரழிவு 25ம் தேதி வரை அலைகளின் ஆதிக்கமாகவே காணப்பட்டது.ஆழிப்பேரலைகள் தாக்கிய சிலமணி நேரங்களுக்குள்ளாகவே மன்னார் வளைகுடாவிலிருந்த சாரதா என்ற கப்பல் மீட்புப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 135க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி மருத்துவ சிகிச்சை பெற்றிட கரைக்கு கொண்டு வந்து சேர்த்தது.அதே போல் தனுஷ்கோடியைச் சேர்ந்தனர். மீனவரான நீச்சல்காளி என்பவர் தனது உயிரை துச்சமென நினைத்து பலரை காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.எனினும் ரயில்நிலையத்தில் இந்தோ-சிலோன் போட் மெயிலில் சென்னை எக்மோர் செல்வதற்காக 500க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்ததாகவும்,அவர்கள் அனைவரும் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிந்தனர் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தியது.
மொத்தத்தில் தனுஷ்கோடி என்ற நகரம் முற்றிலும் மண்ணோடு மண்ணாகி தண்ணீரில் மூழ்கி அழிந்ததுடன் அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஜலசமாதியாகிவிட்டார்கள் என்பதனை அறிந்த அப்போதைய முதல்வா; பக்தவச்சலம் இந்த நிகழ்வை ஒரு தேசிய பேரழிவு என்று அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து தனுஷ்கோடி முழுவதிலும் ஆழிப்பேரலை வடிந்தவுடன் அந்த பகுதி முழுவதிலும் மீட்பு பணிகள் நடத்தப்பட்டன.தப்பிப் பிழைத்த மக்களுக்கு ஹெலிகாப்டர் உதவியுடன் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன.காயங்களுடன் மீட்கப்பட்ட மக்களுக்கு ராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது.

ஜெமினிகணேசன் அவரது மனைவி சாவித்திரி .....

இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மற்றொரு சம்பவம் கிளம்பி தமிழகம் முழுவதிலும் பெரும் புயலைக்கிளப்பியது.அதுதான் ஜெமினிகணேசன் அவரது மனைவி சாவித்திரி தனுஷ்கோடி ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்து விட்டார்கள் என்பது தான்.
1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி ராமேஸ்வரம் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த நடிகர் ஜெமினிகணேசனும் அவரது மனைவி சாவித்திரியும் தனுஷ்கோடி சென்றுள்ளனர்.அந்நேரம் அடித்த ஆழிப்பேரலை சம்பவத்தில் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக முதலில் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் உண்மையில் 22ம் தேதி மாலை நேரத்தில் காற்று பலமாக வீசியதை கண்ட ஜெமினிகணேசன் ராமேஸ்வரம் கிளம்பியிருக்கிறார்.அப்பொழுது சாவித்திரி அவரை தடுத்து இரவில் தனுஷ்கோடியில் தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என்று கூறியிருக்கிறார்.இதனை ஏற்றுக்கொள்ளாத ஜெமினிகணேசன, சாவித்திரியை கட்டாயப்படுத்தி 22ம் தேதி மாலையே ரயில்மூலம் ராமேஸ்வரம் அழைத்து வந்துள்ளார்.இதனால் தான் அன்றையதினம் இருவரும் தனுஷ்கோடியை அழித்த ஆழிப்பேரலையில் சிக்காமல் உயிர்தப்பினார்கள்.


                      உருக்குலைந்துபோன ரயில்நிலைம்..               

1964ம் ஆண்டு டிசம்பா; 23ம் தேதி ஆழிப்பேரலையில் சிக்கி தனுஷ்கோடி தண்ணீhpல் மூழ்கடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கி மண்ணோடு மண்ணாகி 49ஆண்டுகள் ஆனநிலையில் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் இன்றளவும் மக்களின் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளது.தற்போது தனுஷ்கோடி பகுதி எந்தவித மீட்சியும் பெற்றிடாமல் மயானஅமைதியாகவே காட்சியளிக்கிறது.முகுந்தராயர் சத்திரம் வரையிலும் நல்லசாலை அதற்கு மேல் செல்வதற்கு மணல்மேடுகளாக மாறிவிட்ட சாலை என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திடாத பகுதியாகவே தனுஷ்கோடி உள்ளது.1964ம் ஆண்டு ஆழிப்பேரலையில் சிக்கியதில் தப்பி மிச்சமாக உள்ள தேவாலயம்,ரயில் நிலையத்தின் ஒருபகுதி,சிதைந்து கிடக்கும் மீன்பிடி நிலையம்,தடம் புரண்டு கிடக்கும் ரயில் தண்டவாளங்கள்,பூமியில் புதையுண்டு கிடக்கும் வீடுகள்,அவ்வப்போது வெளிவரும் எலும்பக்கூடுகள் என அனைத்தும் அன்றைய தினத்து சான்றுகளாக இன்றும் காட்சியளிக்கிறது.வரும் 2014ம் ஆண்டு வந்தால் இந்த பேரழிவு நடைபெற்று 50ஆண்டுகள் நிறைவடைகிறது.
அண்மையில் தமிழகத்தை சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைகள் தாக்கி கடலோர பகுதிகளை காயப்படுத்திய போதிலும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல் அனைத்து பகுதிகளிலும் மின்னலென நடைபெற்ற மீட்புப்பணிகளால் சகஜநிலை உடனடியாக திரும்பி வந்துவிட்டது.ஆனால் 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி ஆழிப்பேரலைகளால் பேரழிவு எற்பட்டு 50ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையில் இன்றுவரை தனுஷ்கோடி அன்று இருந்தது போல்தான் மண்ணோடு மண்ணாகி கிடக்கிறது...

ஆக்கம்: 
ஜெ.எஸ்.செல்வராஜ்.,

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
வணக்கம்
நினைவுச்சுவடுகளின் தொகுப்பு அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் அப்போது பள்ளி மாணவன். நாலாம் வகுப்பு என்று எண்ணுகிறேன். தினத்தந்தி பேப்பரை எழுத்துக் கூட்டி தலைப்புச் செய்திகளை மட்டும் படித்த காலம். தனுஷ்கோடி அழிந்தது என்று செய்தி வெளியிட்டார்கள். அப்போதெல்லாம் சுனாமி என்று யாருக்கும் தெரியாது. அதனை புயல்காற்று என்றுதான் சொன்னார்கள். தனுஷ்கோடி அழிவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் மண்டபத்தில் இருந்த சித்தப்பா வீட்டிற்குச் சென்றபோது, தனுஷ்கோடிக்கு அப்பா அம்மாவோடு சென்று இருக்கிறேன். உங்கள் பதிவு அந்தநாள் ஞாபகத்திற்கு அழைத்துச் சென்றது . நன்றி! ( இந்த நிகழ்வைப் பற்றி தினத்தந்தி அண்மையில் வெளியிட்ட “வரலாற்றுச் சுவடுகள் “ என்ற நூலிலும் சொல்லி இருக்கிறார்கள் )

இப்புயல் நடந்தபோது எனக்கு 10 வயது. இதன் தாக்கம் வட இலங்கையில் இருந்தது. எனக்கு நல்ல ஞாபகம் உண்டு.பரபரப்பாக வானொலிச் செய்திகள்
கேட்டு நிலவரம் அறிந்தவண்ணமே இருந்தார்கள். பத்திரிகையில் சிறப்பு செய்திகள் வெளியிட்டிருந்தன.
இதனுடன் இந்த ஜெமினி-சாவித்திரி செய்திகள் பரவியது பற்றித் தெரியவில்லை.
ஒரு புகழ் பூத்த நகரத்தையே மீள் கட்டமைப்பு செய்யாது விட்டுவிட்டதே அரசு.