மலரே! குறிஞ்சி மலரே! ...... 12 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் ...


கைகளும் , உதடுகளும் நடுங்குகிற கடும் குளிர்... ஆனால் இந்த் குளிரில் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப் பூ கொடைக்கானலில் பூத்துள்ளது.

தமிழ் சங்க காலத்தில் நிலங்களை ஐந்து வகைகளாக பகுத்துள்ள்ளனர்  நம் முன்னோர்கள்.  ஐந்து வகை நிலங்களிலும் முதன்மையான நிலம் குறிஞ்சி நிலம். மலைகளும் மலை சார்ந்த நிலங்களுமே குறிஞ்சி நிலமாகும். குறிஞ்சி நிலத்தின் பிரதான பூ வகை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப்பூ ஆகும். சங்ககாலம் முதலே குறிஞ்சி பூ பற்றிய தகவல் இருப்பதால் மிக தொன்மையான மலர் வகையாக குறிஞ்சிப்பூ திகழ்கிறது. கொடைக்காலில் மலைகளின் கடவுளான முருகப் பெருமான் குறிஞ்சி ஆண்டவன் என்று போற்றப்படுகிறான்.

குறிஞ்சிப்பூ பற்றி....





 குறிஞ்சிப்பூ சுமார் ஆயிரத்து 600 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பாங்கான இடங்களில் வளரக் கூடியது. இம் மலர் கேரள மாநிலம் இடுக்கி, மூனாறு, ஆகிய மலைப்பகுதிகளிளும் தமிழ்நாட்டில் ஆணைமலை, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் காணப்படுகின்றது. கொடைக்கானல் வனப்பகுதியில் சுமார்  2ஆயிரத்து 578 தாவர வகைகள் உள்ளது. இதில் 248 தாவர வகை உலகில் வேறு எங்கும் காணமுடியாத அரி ய வகைகளை சேர்ந்தது.  இதில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக் கூடிய தாவர வகையை சேர்ந்தது தான  குறிஞ்சி பூ ஆகும்.
குறிஞ்சிப்பூவிலேயே 8 வகையான பூக்கள் உள்ளது. குறிஞ்சிப்பூவின் தாவரவியல் பெயர் ஸ்ட்ரொபிலாந்தஸ் குந்தியானா, ஸ்ட்ரொபிலாந்தஸ் குந்தியானம், ஸ்ட்ரொபிலாந்தஸ் ஏசட்டைவம், ஸ்ட்ரொபிலாந்தஸ் போலியோசா உள்ளிட்ட எட்டு வகைகள் கொடைக்கானலில் வளர்கின்றது. புதர் செடி வகையை சேர்ந்தது. இந்த 8 வகையான குறிஞ்சிப் பூக்கள் இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடியது. நீலக்குறிஞ்சிதான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ ஆகும். கொடைக்கானலில் கடந்த 2005-2006 ல் நீலக்குறிஞசி பூ மலை முழுதும் பூத்து குளுங்கியது. குறிஞ்சிப்பூ பூக்கக்கூடிய காலத்தில் இந்த பூ வில் இருந்து எடுக்கப்படும் தேன் மிக அதிசயமான ஒன்றாக மலை வாழ் மக்கள் கருதுகின்றநனர் குறிஞ்சித்தேன் நிறத்தில் கருப்பாக காணப்படும்.  குறிஞ்சித்தேன் மிக்க மருத்துவ குணமுடையது ஆகும்.
குறிஞ்சிப்பூ புதர் செடியாக வளர்வதால் இந்த செடி மிக எளிதில் அழிந்து விடும்.  இந்த செடியின் விறகு பச்சையாக இருந்தாலும் எளிதில் எhpந்துவிடும் தன்மையுடையது.

             
             
  டாக்டர் சிவா     படத்தில் சிவாஜிக்காக ..   யோசுதாஸ் பாடிய "மலரே குறிஞ்சி மலரே"     பாடல் கேட்டு   பாருங்களேன்.....
               
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப்பூ கொடைக்கானல் டைகர் சோலைப்பகுதியிலும் வெள்ளிநீர் வீழ்ச்சிப்பகுதியிலும் தற்போது பூத்துள்ளது.  இரண்டு கம்பளிகளை சேர்த்து போர்த்திக்ககொண்டு கொடைகானல் வாங்க குறிஞ்சி மலரை பார்க்க ...

- கிட்டுத்துரை


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Unknown said…
நிறைய தகவல்களை இன்று தெரிந்து கொண்டேன்..... அடுத்த முறை செல்லும்போது குறிஞ்சி மலரை பார்க்க வேண்டும் போல உள்ளது !
Amudhavan said…
சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப்பூ பற்றிய தகவல்கள் இருந்தபோதும் இந்தப் பூ பற்றிய பரவலான கவனத்தைத் தமிழ் மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர் பிரபல நாவலாசிரியர் நா.பா என்றழைக்கப்பட்ட நா. பார்த்தசாரதி. இவர் எழுதிய குறிஞ்சிமலர் என்ற நாவல் மூலமாகத்தான் தமிழின் பெரும்பான்மையான மக்கள் குறிஞ்சிமலரைப் பற்றி அறியத் துவங்கினர். அந்த நாவலில் வரும் அரவிந்தன், பூரணி என்ற பெயர்களை அப்போது பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு வைத்து அழகு பார்த்த அளவுக்கு மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது அந்த நாவல். குறிஞ்சிப்பூ பற்றிச் சொல்லும்போது இதுவும் சேர்த்தே நினைவுக்கு வரும் இலக்கிய ஆர்வலர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கில் உண்டு.
இவையெல்லாம் இந்தத் தலைமுறை இளைஞர்களுக்குத் தெரியாத விஷயங்கள் என்பதால் இதனை இங்கே குறிப்பிடுகின்றேன்.