2 மணி நேரத்திற்குஒருமுறை மங்கள்யானை என்ன செய்கிறது என தெரிந்து கொள்ள விருப்பமா?... செவ்வாய் கிரக ஆராய்ச் சிக்காக இந்தியா அனுப்பி யுள்ள மங்கள்யான் செயற் கைக்கோள் குறித்த ஆய்வுத் தகவல்களை தெரிவிப்பதற்காக புதிதாக சமூக வலைதளமான பேஸ் புக்கில் கணக்கு ஒன்றை இஸ்ரோ துவங்கியுள்ளது.
பூமியைத் தவிர மற்ற கிராகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள் ளனவா? என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.இதில், இந்திய நாடும் இணைந்துள்ளது. செவ் வாய் கிரகத்தின் தட்ப வெட்ப நிலை, மீத்தேன் அளவு போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக மங் கள்யான் என்ற செயற் கைக் கோளை பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் இந்தியா செவ்வாயன்று விண்ணில் செலுத்தியது. இந்த ராக் கெட் வெற்றி கரமாக ஏவப் பட்டது புவி வட்டப்பதை யில் நிலைநிறுத்தப்பட்டுள் ளது.
இணையதளம் - பேஸ்புக் சுட்டிகள்....
இஸ் ரோவின் இணையதளம் -www.isro.gov.in
பேஸ்புக் பக்கம் செல்ல - ISRO’s Mars Orbiter Mission
இந்த செயற்கைக் கோள் 27 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 1 ம் தேதி புவி வட்டப்பாதையிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கான தனது பயணத்தைத்துவங்கி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். அங்கிருந்த செவ்வாய் குறித்த ஆராய் ச்சிகளில் மங்கள்யான் ஈடு படும்.மங்கள்யான்செயற்கைக் கோளின் ஆய்வுப் பணிகள் மற்றும் செவ்வாய் கிரகம் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக பேஸ் புக்கில், ISRO’s Mars Orbiter Mission என்ற பெயரில் புதிய கணக்குத் துவங்கப் பட்டுள்ளது.
இதில், மங்கள்யான் தொடர்பான அனைத்து தகவல்களும் இரண்டு மணி நேரத் திற்கு ஒருமுறை பதிவு செய்யப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆய்வுப் பணிகள் மட்டுமன்றி செவ்வாய் கிரகம் தொடர்பான புதிய பல்வேறு பரிமாணங்களி லான படங்களையும் பதிவு செய்யப்படவுள்ளது.
பேஸ்புக் பக்கத்திற்கு நேரடி யாகச் செல்வதற்காக இஸ் ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.isro.gov.in-லும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. இப்பக்கத்தில் மங் கள்யான் திட்டம், அது விண்ணில் ஏவப்பட்ட புகை ப்படங்கள், அதன் பயணம் உள்ளிட்ட தகவல் கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு
செல்வன்
Comments