நான் தான் உங்க நாலணா (25 பைசா) பேசுகிறேன்

இது யாரு நாலணா என்று இப்ப உள்ள சின்ன குழந்தைகள் கேட்கும். நான் 1957ம் வருடம் உருவானவன் என்று எனது வயதை பற்றி கூறுங்கள். நான் உருவான போது 2.5 கிராம் வெயிட்ல 19 மில்லி மீட்டா; சைஸ்ல இருந்தேன். 1961ம் வருடம் முதலில் விட பொpய சைஸ்லில் உருவானேன். பின்னா;, 1964ம் வருடம் காப்பா; என்ற மெட்டலால் உருவாக்கப்பட்டேன். 1980ம் ஆண்டு கிராமப்புற மகளிh; மேம்பாட்டிற்காக எனது உடலில் கிராமப்புற பெண்கள் கதிh; அடிப்பது போல், படம் வரையப்பட்டு உருவானேன்.
1981ம் ஆண்டு உலக உணவு தினத்திற்கு புதிய வடிவம் எடுத்தேன். 1982ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு புதிய அவதாரம் எடுத்தேன். மீண்டும் 1985ம் ஆண்டு வனவியல் அபிவிருத்திக்காக புதிதாக உருவாக்கப்பட்டேன். பின்னா;, எனது அழகு சிதைந்துவிடாமல் துருபிடிக்காமல் இருப்பதற்காக 1988ம் ஆண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்பீலால் 2.83 கிராம் வெயிட்டில் புதிய வடிவில் உருவெடுத்தேன். சரி உன்னுடைய அவதாரத்தை உன் பெருமையை எங்கிட்ட சொல்ற. அதனால என்ன என்று என்னை பார்த்து சிரிக்கிற இளசுகளே என்னப்பத்தி சொல்றேன் கேளுங்க.

செல்லாமல் போன பழைய காசுகள்.............



நான் பிறந்த 1957ம் வருடம் என் மதிப்பு என்ன தொpயுமா? எல்லா சினிமா படங்களிலும் அப்பா மகனைபார்த்து சொல்றது “நாலணா சம்பாதித்தாதாம்பா உலகம் நம்மளை மதிக்கும்” “நாலனா கையில இருந்தா எல்லாமே தேடி வரும்” “நாலணா சம்பாதிக்க துப்புல்ல பேசுறான் பேச்சு” இவ்வளவு ஏன் திருவிளையாடல் படத்துல சிவாஜி கணேசன் “பார்த்தா பசுமரம்” பாடல்ல விறகு நாலணாவுக்கு விற்க வருவாரு. அதவிடுங்க ஊர்ல முக்கிய விசேஷங்களுக்கு நான் இல்லாம நடக்கவே நடக்காது தெரியுமா? கல்யாண வீடா நிச்சயதார்த்த வீட்டுல எவ்வளவு ரூபாய் இருந்தாலும் அதுக்கு மேல நாலணா வைப்பாங்க. குரு தட்சணையா? காதுகுத்தா? கோயில் காணிக்கையா? புது இடம் வாங்கனுமா? விசேஷ வீடுகளில் நான் இல்லாம தொடங்கவே மாட்டாங்க தெரியுமா? இளசுகளே நான் பொய் சொல்லப்பா. உங்க தாத்தா, அப்பாக்களை கேளுங்க.  

 25 பைசைவின் பரிணாம மாற்றம்........



பழைய காலங்கள்ல எனக்கு எவ்வளவு மதிப்பு இருந்துச்சுன்னு உங்களுக்கு தொpயுமா? ½ அணா, 1 அணா, 2 அணா, 1ஃ75 அணா எனக்கு தம்பிகள் எல்லாம் இருந்தாங்க. நாலணா இருந்தா ரெண்டு தோச, ரெண்டு இட்லி சாப்பிட்டு ஒரு எம்.ஜி.ஆர் படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்திடலாம். நாலனாவ சந்தைக்கு கொண்டுபோனா ஒருபடி கேப்ப, குச்சி கருவாடு, தக்காளி, புளி, வெந்தயம், கடுகு, கருவேப்பிலை என சாப்பாட்டுக்கு தேவையான அனைத்தும் வாங்கிவந்து ஐந்துபேர் உள்ள குடும்பத்துல இரவு நேரத்துல அந்த கேப்ப கழிய கிண்டி கருவாட்டு குழம்ப ஊத்தி வீட்டுத் திண்ணைய்ல நிலா சோறு சாப்புடுவாங்க பாருங்க. அவங்களுக்கு தாங்க என் பெருமையப் பத்தி தெரியும். காலம் மாறிப்போச்சுங்க எனக்கு என்னை விட மதிப்பு அதிகமான அண்ணன் மார்கள் 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் என உருவாகிட்டாங்க. இதனால நாளடைவில என்னுடைய மதிப்பும் குறைய தொடங்கிருச்சு 2000 வருடத்திற்கு பிறகு என்னை எடுத்துச் சென்றால் 2 பீடி, 2 அப்பளம், 1 கடலை முட்டாய், 1 தேன் முட்டாய் என்று சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வந்தேன். பெரிய மனிதர்கள் கையில் இருந்த நான், சிறியவர்களின் பைக்கு இடம் மாறினேன். இருந்தாலும், ஒரு சின்ன ஆசை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்துல 9 அவதாரம் எடுத்து நடிச்சாரு. நானும் 8 அவதாரங்கள் எடுத்துவிட்டேன். இன்னொரு அவதாரம் எடுத்து அவரோட 9 அவதாரத்தை சமன்செஞ்சிடலாம்னு நெனச்சேன். நினைப்பு தான பொலப்ப கெடுக்கும். என்ன உருவாக்கி உலகத்திற்கு அறிமுகப்படுத்தின ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்ப வெளியிட்டது. ஜுன் மாதம் 30.06.2011ம் தேதியில் நான் புலக்கத்தில் இல்லைணு அறிவித்தது. இதனால் நான் காட்சி பொருளாளேன். எதற்குமே பயன்படாத செல்லாக்காசா ஆகிட்டேன். இருந்தாலும், நான் கடந்து வந்த காலங்களையும், அப்போது மக்கள் கொடுத்த மதிப்பையும் நினச்சு பெருமிதத்தோடு மலரும் நினைவோடு பழைய உண்டியல்களிலும், கடை கல்லாப்பெட்டியிலும், சாமிக்கு முடிஞ்சு வைத்த காணிக்கைகளிலும் நிம்மதியா வாழ்ந்துகிட்டிருக்கேன்.
ஐயா, பெரியவங்களே படிச்சிட்டு எங்க போறீங்க? நில்லுங்க
“நான் சொன்னதெல்லாம் உண்மைன்னு” இளசுககிட்ட தயவு செய்து சொல்லிட்டு போங்க.

-செந்தில்குமார் 

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

படங்களில் வரும் வசனங்களையும், பாடலையும் குறிப்பிட்டது அருமை... இன்னும் என்னவெல்லாம் உறங்கப்போகிறதோ...?
நாலனா காசு சொன்ன உண்மை வரலாற்று கதை அருமை