உயர் சாதிக்கு மாறவிரும்புகிறீர்களா? மிக மிக எளிய வழி...

இந்து, கிறுஸ்தவமதம் மாறலாம், மூஸ்ஸீமாக மாறலாம், .... மதம் மாறலாம் ... சாதி மாற முடியுமா? மாறலாம் அதுவும் மிக மிக எளிதாக. சாதிய ஒழிக்கத்தான் முடியாது, எல்லோரும் உயர்சாதியா மாறிட்ட எந்த பிரச்சனையும் வரதே. உயர் சாதிக்கு மாறி என்ன செய்யப்போறோம்?... சாதி மாறவேண்டிய அவசியம் என்ன? இப்போ யாரு சார் சாதி பாக்குறா? அதும் மிகப்பெரிய டவுன்ல்ல யாரும் சாதி பாக்குறதில்லயே என்று நீங்கள் நினைக்கலாம்.
அது உண்மையில்லை ... ஒரு புதிய நபரை சந்தித்து கைகுலுக்குகிற நேரத்தில் இவர் என்ன சாதியாக  இருப்பார் என்கிற குரூரபுத்தி நாம் எல்லோருக்கும் இருக்கிறது, அவரது பெயரை கேட்டு, அல்லது அவரது ஊர்,அல்லது எந்த ஏரியா என்று பல்வேறு கேள்விகள் கேட்டு அவரது சாதியை கண்டுபிடிக்கும் முயற்சி ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் மறைத்திருக்கிற சாதி மிருகம் செய்து கொண்டுதானிக்கிறது.

தலைவா பட பிரச்சனை, சிம்பு,ஹன்சிகா காதல் விவகாரம் என அடுத்தடுத்து ஊடகங்களால் பரபரப்பு செய்திகளை பரப்புகிற வேகத்தில் இளவரசன், திவ்யா காதல் விவகாரம் நாம் மறந்திருப்போம். இளவரசன் செய்த ஒரே தவறு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தது தான். அவர் உயர்சாதியில் பிறந்திருந்தால் காதல் ஜெயித்திருக்கும். காதல் விஷயத்தில் ஆண் உயர்சாதிகாரனாக இருக்க வேண்டும் என்பது எழுத்தப்படத விதி. இளவரசன் தன்னை பலிகொடுத்து காதலை வாழவைத்திருக்கிறார். ( இங்கே இன்னொரு விஷயம் காதலுக்கா பலியாவதும் தற்கொலை செய்து கொள்வதும் ஆண்களாகத்தான்  இருக்கிறார்கள், பெண்கள் தற்கொலை செய்து கொள்வதில்லையே ஏன்?)

மதத்தின் பெயரால்,நிறத்தின் பெயரால் மற்ற நாடுகளில் தீண்டாமை

நடக்கிறது என்றால் இந்தியாவோட ஸ்பெஷல் சாதி....

மகாராஷ்ட்ர மாநிலம் - நாசிக் மாவட்டத்தில் ஹனுமான்வாடியைச் சேர்ந்தவர் ஏக்நாத் கிஷ்ண கும்பார்கர் என்பவர். இவரது மகள் பாமா காம்ளே. பாமா பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக வேறு சாதியைச் சேர்ந்த தீபக் காம்ளே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் மகள் மீது தீரா வெறுப்பு கொண்டிருந்த தந்தை, பாமாவிடம் நயவஞ்சகமாகப் பேசி, வீட்டிற்கு அழைத் திருக்கிறார். பின்னர் அவர்கள் ஆட்டோவில் வரும்போது கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். அம்பேத்கர் பிறந்தது மகாராஷ்ட்ரா.

ஹரியான மாநிலத்தை பொறுத்தவரை தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ரேசன் கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது. வீடுவாங்கவோ, இடம் வாங்கவோ முடியாது.ஏன் வீட்டிற்கு நகராட்சி குடிநீர் இணைப்பு கொடுக்கமாட்டார்கள்.வீட்டை வீட்டு வெளியே செல்லும் பெண்கள் மானத்தோடு திரும்ப முடியாது.

இடதுசாரிகளும் ,காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி நடத்துகிற கேரளாவில் ஒருகாலத்தில் உயர்சாதி நம்பூதிரி நடந்து செல்லும் பாதையில் தாழ்த்தப்பட்ட சாதிகாரன் நடந்து சொல்ல முடியாது. மண்ணை குவித்து அதற்குள் தலையை புதைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் மாரப்பு அணிய முடியாது.இப்போது பரவாயில்லை .... இப்படி ஒவ்வொரு ஒவ்வொரு மாநிலத்திலும்....


எல்லாம் சரிப்பா உயர்சாதிக்கு மாறுவது எப்படி...


சாதி மாறுகிற மிக எளிய வழியை கண்டுபிடித்திருப்பது கர்நாடகாவில் தான். இந்துக்களே ஒன்று சேருங்கள்.. என்று கோஷம் போடுகிற ஆர்.எஸ்.எஸ்,பாரதிய ஜனதா கூடாரத்தின் கீழ் எல்லா கோயில்களிலும் சாதிவாரியாக  சாப்பிடும் இடம் வைத்திருக்கிறார்கள்.இதில் மிகவும் கொடுமை யான மற்றும் கேவலமான விஷயம் என்ன வெனில், மேல்சாதிக் காரர்கள் சாப்பிட்டு விட்டுப் போட்ட எச்சில் இலைகளை வரிசை யாகக் கீழே விரித்து பாய் மாதிரி அடுக்கி வைக்கிறார்கள். அவற்றின்மீது தலித் மக்கள் புரண்டுகொண்டே போய் சாமி தரிசனம் செய்தால், அவர்களுக்கு அடுத்த ஜென்மத் தில் சொர்க்கம் கிடைக்கும் என்றும், சிலர் அடுத்த ஜென்மத்தில் மேல்சாதிக்காரர்களாக பிறக்க வாய்ப்பு உண்டு என்றும் அளந்துவிடப் பட்டிருக்கிறது. இதை நம்பி நூற்றுக்கணக் கான பேர் அந்த செயலில் ஈடுபடுவது நெஞ் சில் ரத்தம் வடிக்கும் காட்சியாகும்.
               
                 சாதி மாறுவதற்கு எப்படியொரு மிக மிக எளிய வழி பார்த்தீர்களா?...

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
// அவற்றின்மீது தலித் மக்கள் புரண்டுகொண்டே போய் சாமி தரிசனம் செய்தால், //

என் இப்படி ரீல் சுத்துரிங்க. நல்லா பாருங்க உருளரவன் எல்லாம் பூணூலொட இருக்கான். காப்பி பேஸ்ட் பண்ணாலும் ஒழுங்கா பண்ணனும்.
இந்தியா வல்லரசு ஆக என்ன என்ன வழிகள் என்று சிலர் கேட்டு இருந்தார்கள்: அதற்கு இது ஒரு வழி!
கண்ட நாதாரிங்க சொல்றதையும் கேட்டுட்டு சுரணையே இல்லாம உங்க விடுதலைக்காகப் போராடி செத்துப் போனவங்களத் திரும்ப தோண்டி எடுத்து கொன்னுட்டீங்கடா...
ஆஹா இதுவல்லவா அற்புதமான வழி அடுத்த பிறப்பில் மேல் சாதிக் கார்ராக பிறப்பதற்கு!

பாழாய்ப்போன கடவுள் மதம் சாதி எனும் மூட நம்பிக்கைகளை பயமுறுத்தி எளிய மக்களின் மண்டைகளில் தினித்து இந்த பிறப்பில் சுதந்திரமாக சுய நினைவுகளை ஆசா பாசங்களை அடக்கி ஒதுக்கி நடை பிணமாக அடிமை வாழ்க்கை வாழ வைத்து இவர்களின் முதுகில் ஓசி சவாரி செய்வதுதான் இந்த பித்தலாட்டங்களின் உள் நோக்கம்.

தேவை மிகுந்த விழிப்புணர்வு. சமூக நலன் அக்கரை கொண்ட பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி செல்வன்.
Anonymous said…
நாசம்... ! இப்படி மனிதர்களை கீழ்தரமாக நடத்தும் இத்தகைய வைபவங்களை தடை செய்ய வேண்டும்.. ! பார்ப்பன வெறித்தனம். ச்சீ தூ..