ஜிகர்தண்டா - மதுரை ஸபெஷல்....


பீட்சா பட இயக்குனரின் அடுத்த படம் ஜிகர்தண்டா... சில இயக்கனர்களுக்கு சில சென்டிமென்ட இருக்கிறது. முதல் படம் வெற்றியடைந்தால் அடுத்த படத்தையும் அதைபோல மற்றொரு பெயரில் எடுப்பது.
அடிதடி,பஞ்ச் டயலாக் பார்முல  இயக்குனர் பேரரசு சிவகாசி,திருத்தனி ,மதுர என தொடர்ந்து ஊர் பெயர்களை வைத்து வெற்றி பெற்றார். அதே போல பீட்சா இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ் தனது அடுத்த படத்தையும் ஜிகர்தண்டா என மதுரை ஸ்பெஷல் குளிப்பானத்தின் பெயர் வைத்திருக்கிறார்.
                   
 மதுரை சாப்பாட்டு விஷயங்களுக்கு பெயர் போன ஊர். அம்மா மெஸ் ஆயிரமீன் குழம்பு.கறிதோசை, கோனார்கடை, முருகன் இட்லிக்கடை என ஒவ்வொரு கடையிலும் புதிய உணவு வகைகள் கிடைக்கும். ஜிகர்தண்டா மதுரை கண்டுபிடிப்பு. ஜிகர்தண்டாவை ஐஸ்கிரிம் என சொல்லவும் முடியாது,குளிப்பானம் என சொல்லவும் முடியாது இரண்டுக்கும் இடைப்பட்டது. படத்தை பற்றிய தகவலுக்கு முன் ஜிகர்தண்டா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்....

ஹிந்தியில்   ஜிகிர்   என்றால்   இதயம்    தண்டா   என்றால் குளிர். இதயகுளிர்    பானம்   அருந்துபவர்களை   கவருவதற்கு   என்ன    காரணம்
பால்,   சீனி,   நன்னாரிசிரப்,  ரோஸ்சிரப்,   பால்கோவா,   சைனாகிராஸ்   மற்றும்   ஐஸ்க்ரீம்(ஸ்கூப்)   ஆகியவற்றை   சேர்த்து   செய்ததால்   இவை   இத்தனை   ருசியாக  உள்ளது   இதை   அருந்தும்போது   ஜெல்லி   போன்ற   தன்மை    உள்ளதால்    நாவில்   சுவையை    ஊட்டுகிறது
ஒரு   கப்   அருந்தினால்   வயறு    நிரம்புவதொடு    இதில்   சேர்க்கப்படும்    சைனாகிராஸ்   அயோடின்,   கால்சியம்,   இரும்புச்   சத்து   நிறைந்தது   இத்துடன்   கடல்பாசியும்   கலந்து   செய்வதால்   வயிற்றுக்கு   மிகுந்த   குளிர்ச்சியை   தரக்கூடியதாக   உள்ளது  ஜிகிர்தண்டா   இன்று    உலகமெங்கும்    பார்சல்   பண்ணி    அனுப்பப் படுகிறது

 you tube ல் கிடைத்த  ஜிகிர்தண்டா   வீடியோ ....

      


ஜிகர்தண்டா குடிச்சா அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கும்  அதே போல படமும் இருக்கும் என்கிறார் இயக்குனர். படத்தின் ஸ்கிரிப்ட் மிக வேகமாக இருக்கும், முழுக்க முழுக்க பொழுது போக்குபடம். வழக்கமா மதுரை படம் என்றால் அருவா,மீனாட்சியம்மன் கோயில், முரட்டுதனமான ரவுடிகள்,  மதுரை பேச்சு வழக்கு,பெரிய மீசை வைத்த மனிதர்கள் இதான் இருக்கும், அனா .ஜிகர்தண்டா வேற மாதரி படம் என்கிறார் .. இந்த படத்தில் இசை,காட்சியமைப்பு, வசனங்கள் புதிய பாணியில் இருக்கும் என்கிறார் இயக்குனர் சுப்புராஜ்.

ஜிகிர்தண்டா என்ன மாதிரியான கதை?




ஒரு அசிஸ்டென்ட் டைரக்டருக்கு படம் இயக்குகிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அது ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார் தயாரிப்பாளர். தமிழ்நாட்டிலேயே ஆக்ஷன் மற்றும் வெட்டு¢ குத்துகள் அதிகம் நடக்கிற இடம் மதுரைதானே? அங்கே சில காலம் தங்கியிருந்து அங்கிருக்கிற டெரர் வில்லன்களின் வாழ்க்கை சம்பவங்களையே படத்தில் வைக்கலாம் என்று கிளம்புகிறார் ஹீரோ.
ஆனால் இவர் அட்டாக் பாண்டி என்று நினைக்கிற அத்தனை பேரும், ஹார்ட் அட்டாக் பாண்டிகளாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு டம்மி பீஸ் வில்லன்களை கொண்டதுதான் மதுரை என்று உணர்கிறார் அவர். அதற்கப்புறம் அவர் எடுக்கும் ஆக்ஷன் கதை எப்படி திசை மாறுகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.படம் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம்.... ஆனால் உண்மையில் மதுரையில் அட்டாக் பாண்டிகள் அதிகம் என்பதே உண்மை.

- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

சும்மா ஜில்லென்று இருக்கு...!