இரண்டாம் உலகம் ஸ்டில்கள் + கதை

இரண்டாம் உலகம்  வித்தி யாசமான பெயர். எதிர்பார் புகளை உருவா க்குற பெயர். ஹாலிவுட் இயக்குனர் களை போல ஒரு படத்திற்கு குறைந்தது 2 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் இயக்குனர் செல்வராகவனின் படம். படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்குமா? என்றால்  உறுதியாக சொல்ல முடியாது. வித்தியாசமான படம் என்ற பெயரில் தமிழ் இயக்குனர்கள் சிலர் செய்கிற தவறுகளை செல்வராகவனும் செய்கிறார். இதுவரை அவர் இயக்கிய படங்கள் நிஜ உலகத்தில் வாழுகின்ற மனிதர்களை காட்டியதில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணேட்டத்தில் பெரும்பாலன காட்சிகள் இருக்கும். மன இறுக்கம் உள்ள (செல்வராகவனை போல உம்மான மூச்சி ) மனிதர்களின் கற்பனை உலக வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார்.


இரண்டாம் உலகம் ஸ்டில்கள்.....




மேலும் சில படங்கள் .....




இரண்டாம் உலகம் படம் பற்றி ஆனந்தவிகடன் இதழில் செல்வராகவன்  ....

 இரண்டாம் உலகம் எப்படிபட்ட படம் என்ற கேள்விக்கு....

அதை கண்டுபிடிக்கத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஏழெட்டு மாதங்களுக்கு முன்னாடியே ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. கிராபிக்ஸ் வேலைகள் நடந்துட்டு இருக்கு.எனக்கு இன்டர்வியூவில் கதை மாதரி சொல்லத் தெரியாது. முதல் படத்துலேர்ந்து இப்போ வரைக்கும் என் மனசு என்ன சொல்லுதோ அதைத்தான் படமா எடுக்கிறேன்.நீங்க யோசிக்காத ஒரு விஷயத்தைத் தான் நான் படமா எடுத்திருக்கிறேன். அது எப்படி வரும்,என்ன மாதரி இருக்கும்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா ஆடியன்ஸூம் நானும் மனசளவில்  இணைகிற  நல்ல படமா இருக்கும். எனக்கு தெரிஞ்சு இங்கே 90 பெர்சன்ட்  காதல் உண்மையா இல்லை.சில காதல் நிர்வாணமாப் பாக்கிறதோட நின்னுடும். சிலது பத்து நாள் தாங்குனாப் பெரிய விஷயம்.இது எல்லாத்தையும் தாண்டி உங்க காதல் உண்மையானதா இருந்தா  நீங்க அதில் எவ்வளவு தூரம் போகலாம்னு சொல்லியிருக்கிறேன்.

செல்வராகவனின் பேட்டியில் இரண்டு விஷயங்கள் ... ஒன்று நான் சொன்னது போல படம் மனநிலை பாதிக்கப்பட நிலைபாட்டிலிருந்து காட்சிகள் அமைந்திருக்கும். இராண்டாரது காதலை பத்தி செல்வராகவன் பேசுவது என்ன நியாயம்... காதலித்து திருமணம் செய்த சோனியாஅகர்வாலை அவர் சொல்வதை நிர்வாணமா  பார்த்ததும் முடிந்த காதலாக்கி விட்டாரே. ஒரளவுக்கு நடிக்க தெரிந்த ஆர்யா,அனுஸ்கா நடித்துல்ல படம் என்பதால் பார்க்கலாம். ஆனால்  பட ஸ்டில்களை அதிலும் ஆர்யாவின் தோற்றத்தை பார்க்கும் போது சற்று பயமாகத்தான் இருக்கிறது.

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

பட ஸ்டில்கள் ்அருமை நண்பரே..வாழ்க வளமுடன் வேலன்.