சார் இப்ப தான் வர்ரீங்களா..., ஒய்ப்,குழந்தைகளை கூட்டிடுவரலையா..., இன்விடேசன் கிடைச்சதா....ஹாலோசார் நல்லாயிருக்கிங்களா.... இப்படியான கேள்விகள். சார் டிபன் ரெடியாயிருக்கு சாப்பிடுங்க. ஒரு திருண வீட்டுக்கு போன கலப்பு,பேச்சுகள்....
இந்த பதிவை படித்துவிட்டு செல்லவும்.....
நம்மை பற்றி தெரிந்து கொள்ள மதுரைக்கு வாங்ப்பா...
கொத்தனாரிலிருந்து, இஞ்சினியர்வரை, மருத்துவரிலிருந்து பாமர மக்கள் வரை, பருத்திபால் விற்க்கும் பெண்ணிலிருந்து பட்டபடிப்பு பெண்கள் வரை,ஷாஜகான், கிருஷ்ணகுமார்,டேவிட் என மதம்,சாதி மறந்து, நான் யார் தெரியுமில்ல என்ற ஸ்டேட்டஸ் மறந்து எல்லோரும் எதாவது ஒரு வேலையில் இருந்தார்கள். தன் வீட்டு விஷேம் போல பேனர் கட்டினார்கள், வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்கள்,உணவு பரிமாரினார்கள்.
அன்று ஞாயிற்று கிழமை பெண்கள் தொலைகாட்சிகளை மறந்தார்கள். இளைஞர்கள் தங்கள் தலைவாக்களையும், தலயையும் மறந்தார்கள். இப்படி எல்லோரையும் கட்டிப்போடுகிற ஒரு நிகழ்வு பசுமை நடை விருட்சத்திருவிழா. ஏழுத்தாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நடத்திய மிக பிரமாண்டமான பண்பாட்டு நிகழ்வு இது. கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக பசுமை நடை என்ற பெயரில் மதுரையை சுற்றியுள்ள குன்றுகள்,மலைகளில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சமணவாழ்விடங்கள், நமது தமிழ் மொழியின் பண்டைய எழுத்துவடிவங்களை பாதுகாப்பது மற்றும் அறிந்து கொள்ளும் விதமாக நிகழ்த்தபட்ட பயணம். சாந்தலிங்கம்,சுந்தர்காளி, பேரா. கண்ணன் போன்றவர்கள் விளக்க உரைகள்.... நான் மதுரைக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் உள்ள வன்முறை கலந்த அடையாளம் மறைந்து பழைமையான வரலாற்றுக்கு சொந்தகாரன் என்ற பெருமிதத்தை உருவாக்கிய பயணம் பசுமைநடை பயணம் தான்.
மிக ரம்மியமான இடம்....
கடந்த ஆகஸ்ட.25 ல் தனது 24 பயணங்களை நிறைவு செய்து 25வது பயணத்தை ஒரு விருட்சத்திருவிழாவாக கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரம், பெரிய ஆலமரதடியில் நடத்தியது. ஆலமரம் என்றால் இரண்டு மிகபெரிய ஆலமரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கொண்டிருக்கிற மிக ரம்மியமான இடம். 168 குழந்தைகள் உட்பட 600 பேர் இருக்கலாம். முதலில் செட்டிப்புடவு என்ற அழைக்கப்படுகிற மிக பெரிய மாகவீரர் சிலை அமைந்துள்ள இடம் சென்றோம். 2500 ஆண்டுகளுக்கு முன் சமணர்கள் வாழ்ந்த குகை, மேலும் சில சிற்பங்கள் மலையில் புடைப்பு சிற்பங்களா செதுக்கப்படுள்ளன. அங்குள்ள குகையில் யில் 2500 ஆண்டுகளுக்கு முன் சமணர்கள் நடமாடியதை ,வாழ்ந்ததை நினைத்து பார்தத்தால் ம்ம்ம்....
செட்டிபுடவு முடிந்ததும் குழந்தைகளை எதிர்காலத்தில் இயற்கையை விரும்புபவர்களாக ,நமது பராம்பரியாத்தை பாதுகாப்பவர்களாக மாற்றுவதற்கு கென்று தனி முகாம்.பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் உட்பட வரலாற்று ஆய்வாளர்கள், இயற்கை ,விரும்பிகள் என் பல்வேறு தரப்பட்டவர்கள் பங்கேற்போடு விருட்சத்திருவிழா நிகழ்வு துவங்கியது.
பருத்திபால் விற்கும் பெண்மணி...
விருட்சத் திருவிழாவில் முக்கிய நிகழ்வு மதுர வரலாறு புத்தக வெளியீடு, அதிலும் பேராசிரியர் முத்தையா வெளியிட சமணக்குகைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் பருத்திபால் விற்கும் பெண்மணி (பெயர் ஞாபகபமில்லை)பெற்றுக்கொண்டார்.ஒட்டுமொத்த நிகழ்ச்சியில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் பேசி ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்துள்ள கோணத்திலிருந்து விருட்சத்திருவிழாவை அணுகிய கோணம் யாதார்தமான வெளிப்பாடு. இதோ பேச்சாளர்களின் பேச்சில் எனது மனதில் பதிந்த சில வார்த்தைகள்......
கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம்..., நமது தொன்மையை,பண்பாட்டை தெரிந்து கொள்ள இவ்வளவு பெரிய நிகழ்வை போராசிரியர்களான எங்களால் முடியாத ஒன்று. இது மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு.
பேரா.தொ.பரமசிவம்..... சமணர்கள் இல்லையென்றால் தமிழ்மொழியில் இந்தனை இலக்கியங்கள் இல்லை. அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டுக்கு நன்றி சொல்வோம்.
வி,பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்.... விருட்சத்திருவிழா அழைப்பிதழ் காக்கி நிற பேப்பரில் பச்சை நிற எழுத்துக்கள் பசுமையை பாதுகாக்க வேண்டும் என்பதை தொடர்ப்பு படுத்தி காட்டுகிறது. நாம் பார்க்கின்ற அனைத்தோடும் நம்மை தொடர்பு படுத்தி பார்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
பேரா.கண்ணன்... பசுமை நடை என்பது. ப-= பசுமை, சு= சுவடுகளை, மை= மையப்படுத்திய, பாதுகாக்கிற அமைப்பு, முதல் பசுமை நடை 25 பேரோடு துவங்கிய இன்று 25வது நடைக்கு வந்திருக்கிறது.
குட்டி ரேவதி.... மனிதர்கள் எல்லோருக்கும் ஏகாந்தமான் ஒரு மனநிலை தேவைப்படுகிறது. நமது பண்பாட்டை தொன்¬மையை பாதுகாப்பபதிலிருந்தே இந்த ஏகாந்தமான நிலைக்கு நாம் சொல்ல முடியும்.
அனந்தராஜ் வந்தவாசியில் வாழ்ந்துவரும் சமணர்... சமணம் என்பது ஒரு மதமல்ல ஒரு வாழ்க்கை நெறி. எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க,பாதுகாக்க வந்துள்ள உங்களுக்கு நன்றி.
இப்படி ஒவ்வொரு வரும் தங்கள் நிலைபாட்டிலிருந்து பேசினர்,அது ஒரு புதியஅனுபவம்... இதில் கீழக்குயில்குடி ஊராட்சிமன்ற தலைவர் பேசியது முக்கியமானது செட்டிபுடவு மாகவீரர் சிலையை செட்டியார் சிலை என்று நானும் எனது கிராமத்து மக்களும் நினைத்தோம் பசுமைநடையினர் சொல்லிதான் அது மாகவீரர் சிலை என்பதை தெரிந்து கொண்டோம் என்றார்.
ஓட்டுமொத்தமாக பசுமை நடை விருட்சத்திருவிழாவை தொய்வு இல்லாமல்,மிக நேர்த்தியாய்,விமர்சனங்களை தவிர்த்து நடத்திய பெருமை எழுத்தாளர் முத்துகிஷணன், மற்றும் அவரது நண்பர்களையே சேரும். என்னை பொருத்தவரை செட்டிபுடவு மாகவீரர் சிலையும், காலை உணவாக பரிமாறப்பட்ட சக்கரை பொங்கலும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.
- செல்வன்
Comments