தனுஷ் - சோனம் கபூரிடம் எத்தனை அறை வாங்குகிறார்?

அம்பிகாபதி படம் பார்க்க செல்பவர்களுக்கு தனுஷ்  சோனம் கபூரிடம் எத்தனை அறை வாங்குகிறார் என் போட்டியே வைக்கலாம். படத்தின் இடைவேளே வரை தனுஷ் தன் காதலை சொல்வதும் சோனம் அதற்கு பளார்,பளார் என அறைவதுமாக படம் செல்கிறது. என்னை பொருத்தவரை இந்த படத்தில் இரண்டு மாற்றங்கள் உண்டு.

                        1. கதை களம் காசி,வாரணாசி,டெல்லி, என புதிது. வட இந்திய கிராமங்களில் புதிய இடங்களை பார்க்கலாம். உசிலம்பட்டி,மதுரை,சென்னை,கோயமூத்தூர்  பாடல் காட்சிக்கு வெளிநாடு என ஒரேமாதிரியா பாக்கும் தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் மாற்றும்.
                   
                        2. தமிழ் சினிமாவில் அப்பாவாக  அல்லது வில்லானாக பிரகாஷ் ராஜ் இருப்பார், சந்தானம், அம்மா வேடத்திற்கு சிலர் இப்படி பார்த்த முகங்களே மாறி,மாறி பார்த்த நமக்கு புதிய முகங்களை பார்க்கலாம்.


சுருக்கமாக கதையை சொல்லிவிடுகிறேன்...

தனுஷின் முதல் ஹிந்திப் படமான ‘ரான்ஜ்னா’ தமிழில் ‘அம்பிகாபதி’.படம் தொடங்கியதிலிருந்து இடைவேளை வரை செம ஸ்பீடு. குந்தனின் குழந்தைப் பருவ குரும்பு, பிந்தியாவின் ஒருதலைக் காதல், வரம்புமீறாத குந்தன் - ஸோயா காதல் நெருக்கம் என முதல்பாதி முழுக்க குடும்பத்துடன் ரசிக்க முடியும் .

தன் காதலைச் சொல்லி சோனம் கபூரிடம் தனுஷ் அறை வாங்குவது, காதலில் தோற்கும் ஒவ்வொரு முறையும் கையை அறுத்துவிட்டு ஆஸ்பிடலில் அட்மிட் ஆவது, வண்டியோடு சேர்த்து சோனம் கபூரும் தனுஷும் ஆற்றில் விழும் காட்சி, ஸோயாவின் காதலைச் சேர்த்துவைத்துவிட்டு அவளிடம் தனுஷ் சவால்விடும் காட்சி என படம் நெடுக ஆங்காங்கே சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள்.


முதல்பாதியில் நட்பு, காதல், பிரிவு எனச் சொல்லும் திரைக்கதை இரண்டாம் பாதிமுழுக்க அரசியல்
இடைவேளை வரை தமிழ்ப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வைக் கொடுத்த ‘அம்பிகாபதி’ அதன்பின்பு, தான் ‘ஹிந்தி’ வெர்ஷன் என்பதை நிரூபிக்கிறது.

 நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய தனுஷின் மாடுலேஷன்கள்தான் என்றாலும், இப்படத்தில் அது இன்னும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறது. சோனம் கபூர், முரளியாக நடித்திருக்கும் முகம்மது ஸீஷன், துறுதுறு பிந்தியாவாக வரும் ஸ்வாரா பாஸ்கர், அபய் தியோல் என ஒவ்வொரு கேரக்டரும் தங்களின் பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.இந்து - முஸ்லிம் காதலர்களின் பிரச்சனைக்கு, ‘மத’ விஷயங்களைத் தவிர்த்துவிட்டு ‘மத்த’ விஷயங்களில் கவனம் செலுத்தியதற்காகவே இயக்குனர் ஆனந்த் எல்.ராய்யை நிச்சயம் பாராட்டலாம்.

இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் ராக்ஸ். சில பாடல்கள் மட்டும் தமிழில் கேட்கும்போது காட்சியோடு ஒட்டவில்லை. காசியின் மொத்த அழகையும்,


தன் கேமரா மூலம் அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்ரமணியம். தமிழில் வசனம் எழுதியவருக்கும் ஒரு ‘ஜே’ போடலாம். மொத்தத்தில் ‘டெக்னிக்’கலாக அம்பிகாபதி வெற்றிக்கூட்டணி அமைத்திருக்கிறது.

ப்ளஸ் : படத்தின் முதல் பாதி காதல், காமெடிக் காட்சிகள், தனுஷின் உற்சாகமான நடிப்பு, பாடல்கள், வசனம், ஒளிப்பதிவு

மைனஸ் : இரண்டாம்பாதியில் தொய்வடையும் திரைக்கதை, ‘டப்பிங்’ உணர்வைக் கொடுக்கும் அரசியல் காட்சிகள், சில லாஜிக் இல்லாத காட்சியமைப்புகள்

படம் பாக்கலாம்........ படம் பார்த்து விட்டு வெளியேவரும் போது தனுஷ் எத்தனை அறை வாங்கினார் என்பதை கணக்கு பார்க்கவில்லை. நீங்களாவது கண்க்கு பண்ணி சொல்லுங்களேன்.

தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்