விஸ்வரூபம் - 2 புதிய படங்கள்...

விஸ்வரூபம் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் பல எதிர்பார்புகளை  உருவாக்கியிருக்கிறது. தமிழில் ரஜினியின் எந்திரனுக்கு பிறகு ரூ 100 கோடி வசூல் சாதனை படைத்தது விஸ்வரூபம் , இராண்டாம்பாகமும் இந்த சாதனை தொடுமா?.
முதல் பாக்த்தில் மூன்று கெட்டப் இரண்டாம் பாகத்தில் எத்தனை வேடம் என்பதும், இந்த படமும் பிரச்சனைகளை உருவாக்குமா? என்கிற எதிப்பார்ப்பும் உள்ளது. என்னை பெருத்தவரை பிரச்சனைகள் வராது. கமல் முதல் பாகத்தில் செய்த தவறுகளை செய்யமாட்டார்.  இண்டாவது இந்திய மற்றும் தமிழக அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அந்த வேலைகளில் இருக்கிறார்கள்.படத்தின் கதையும், பட தயாரிப்பு பணிகளும் ரகசியமாகவே செய்யப்படுகின்றன. இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும என்பதால், காட்சிகளை இன்னும் பிரமாண்டமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கி வருகிறார்.

முதல் பாகத்தில் ஆப்கானிஸ்தான், அமெரிக்க போன்ற பகுதிகளில் நடந்த கதை, 2வது பாகத்தில் இந்தியாவில் நடக்கிறது. அதனால் இந்தியாவில் சில பகுதிகளில் படமாக்கினபோதும், அடுத்து இந்தியாவில் நடப்பது போன்ற காட்சிகளை தாய்லாந்த் நாட்டில் படமாக்குகிறாராம் கமல். தவிர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.‘தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது.விஸ்வரூபம் 2’ படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

                       
                         
மக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்டரை கமல் வெளியிட்டார்.

நான் ரசிகர்களுக்காகவே படங்கள் எடுக்கிறேன். விளம்பரத்துக்காக இந்த தொழிலை செய்ய வில்லை. விஸ்வரூபம் படத்தின் கதையை ஆரம்பத்திலேயே இரண்டு பாகமாக எழுதினேன். ஒரு படத்தை ரிலீஸ் செய்த பிறகுதான் அதன் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பது வழக்கும். ஆனால் நான் படத்தின் முதல் பகுதியை எடுக்கும் போதே இரண்டாம் பகுதி பற்றி தெரிவித்து விட்டேன்.

முதல் பகுதி படப்படிப்பை நடத்தும் போதே இரண்டாம் பகுதியையும் படமாக்கினேன். என் நம்பிக்கை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும். மனித உறவுகளின் உணர்ச்சிகள் இருக்கும். அத்துடன் அதிநவீன தொழில் நுட்பத்தில் இரண்டாம் பாகத்தை படமாக்குகிறேன். தண்ணீருக்கு அடியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் காதலும் இருக்கும்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெறுகிறது. இறுதியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.எப்படியோ பிரச்சனை  இல்லாமல் படம்  ரீலிஸ் ஆனால் சரி ...

தொகுப்பு செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
...ம்... பார்ப்போம்... நன்றி...