பா.ம.க. ராமதாஸ்க்கு பிடிக்காத புத்தகம்...


2016ல் தமிழகத்தின் முதல்வர் ராமதாஸ்தான். இந்த கனவு ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கு இருக்கிறது. அதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சாதி . தருமபுரி,மரக்காணம் பகுதிகளில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது,( தன்சாதியை விட உயர்சாதிகளின் மீது தாக்குதல் நடத்துவதில்லையே ஏன்? இவர் மட்டுமல்ல எல்லா சாதிபயல்களும் அப்படிதான்).தமிழக முழுவதுமான சாதிய தலைவர்களை அழைத்து கூட்டம் போடுவது, காதலுக்கு எதிராக பேசுவது, 500 பேருந்துகள் எரிப்பு, வட மாவட்டங்களில் பதட்டம். என தற்போது ஊடகங்களுக்கு பரபரபான செய்தி களம் அவர்தான்.

               அப்படிபட்டவருக்கு பிடிக்காத புத்தகம் ..... ''அழகு ராட்சசி'' - காதல் கவிதைகளின் தொகுப்பு. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காதல் குறித்து ஒவ்வொரு பக்கதிலும் தனது கவிதையை ரசனையோடு பதிவு செய்திருக்கிறார்.
படித்து முடித்ததும் இரண்டு விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.ஒன்று இந்த புத்தகத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் படிக்கவேண்டும். இரண்டு காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், இனி காதலிப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.கவிதைகளில் சில...

நீ என்னைசெல்லமாய்  

திட்ட வேண்டும் 
என்பதற்காகவே 
குறும்புகள் செய்யத் தோன்றுகிறது
உன்னிடம்...

நீ கண்ணாடி பார்த்து 
உன்னழகை 
சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும் 
உன்னை பார்த்து 
தங்களின் அழகை 
சரி செய்து கொள்கிறார்கள்...

ழகு என்ற தலைப்பில்
கவிதை எழுதச்சொன்னார்கள்
உன்பெயரை மட்டும் 
எழுதிக் கொடுத்துவிட்டு 
வந்தேன்
முதல் பரிசு 
கிடைத்தது எனக்கு...


நான் 
காதல் முன்னேற்றக் கழகம்
என்று ஒரு 
கட்சி ஆரம்பிக்கலாமென்று 
இருக்கிறேன் 
பொதுச்செயலாளர்
நீ தான்...
ஆனால் 
ஒரு நிபந்தனை

கட்சியின் 
காதல் பரப்பு செயலாளராக
நான் மட்டும் தான் 
இருப்பேன்...

தொகுப்பு   முழுவதும் காதலை நிறுத்தி, நிதானமாக அனுபவித்து எழுதியிருக்கிறார் கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார். தினதந்தி,தினமலர்,மாகாகவி போன்ற தினசரிகள், சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்புதான் அழகு ராட்சசி. ஒவியா பதிப்பகத்தின் அழகான வடிவமைப்பு கவிதைகளுக்கு அழுகுக்கு அழகு சேர்த்திருக்கிறது. அட்டைபடமே அழகு ராட்சசி தான். என்ன நண்பர்களே ராமதாஸ்க்கு நிச்சயம் இந்த புத்தகம்  பிடிக்காது இல்லையா?. கவிதை தொகுப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் முடிந்தால் ஒரு பிரதியை ராமதாஸ்அனுப்பவும்.


e.boook page

புத்தகம் கிடைக்கும் முகவரி

முனைவென்றி நா.சுரேஷ்குமார்
மின்னஞ்சல் munaivendri.naa.sureshkumar@gmail.com
செல்பேசி 8754962106.
-செல்வன்
     
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Seeni said…
pakirvukku nantri!
காதலே அழகு...
காதலை விட
காதலி அழகு....
அவள் கிடைத்துவிட்டால்
வாழ்க்கையே அழகு...
gurujeyachandran said…
Nangu erunthathu magilci