ஒரு நடிகர் எறும்புகள் பத்தி என்ன பெருசா சொல்லபோறார். அதுவும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் எறும்புகள் பத்தி.... உண்மைதான். அமிதாபச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனிப்பட்ட தகவல்களை மட்டுமல்ல இப்படி சில புதிய தகவலையும் சொல்லி வருகிறார். இந்த பதிவில் எறும்புகளை பற்றி மூன்று தகவல்கள் சொல்கிறேன். அமிதாப் சொன்ன தகவல் கடைசியாக ....
கூடுகட்டி வாழும் எறும்புகள்...
எறும்பு புற்று என்றுதான் நாம் சொல்வோம், அந்த புற்றை கூட பாம்புகள் பயன்படுத்தி கொள்ளும் என்பது நமக்கு தெரிந்த தகவல். முற்றிலும் வினோதமான முறையில் இலைகளின் நடுவே குருவிகள் போல் கூடுகட்டி பஞ்சுமெத்தையில் சொகுசாக வாழ்ந்திடும் முசுறு எறும்புகள் மதுரை திருமங்கலம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் அதிகம் வாழ்ந்து வருகிறது.
அளவில் மிகவும் சிறியதாக உள்ள குருவிகள், தங்களை விட பெரிய அளவுடைய இலைகளில் கூடுகட்டி அதனுள்ளே வசித்து வருகின்றன.இதற்கு சற்றுமாறாக பூமியிலும்,மற்றும் சில இடங்களில் புற்றுகள் அமைத்து எறும்புகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் தற்போது இவற்றுக்கெல்லாம் மாறாக முற்றிலும் விநோதமான முறையில் இலைகளின் நடுவே குருவிகள் போல கூடுகட்டி அதனுள்ளே சொகுசாக பஞ்சுமெத்தையில் வாழ்ந்து வரும் முசுறு எறும்புகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் முசுறு இன எறும்புகள் அதிகளவு காணப்படுகின்றன. 2 சென்டிமீட்டர் அளவுடைய முசுறு எறும்புகள் சுறுசுறுப்பிற்கு பேர்போனவை. அதே போல் வெட்டுக்கிளி, பூரான்,சிலந்தி போன்ற உயிரினங்களை 5,6 முசுறு எறும்புகள் ஒன்று சேர்ந்து உணவுக்கு தூக்கி வந்து விடக்கூடிய அசுர பலம் கொண்டவை. பெரும் கூட்டமாக ஒன்று சேர்ந்து வசித்திடாமல் தனித்தனி அணிகளாக குடும்பங்களாக வசிப்பதையே முசுறு எறும்புகள் வழக்கமாக கொண்டுள்ளன. எறும்புகளின் அணிகளுக்கிடையே இரையை பங்கிடுவது குறுத்து அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.ஆனால் இவற்றுக்கெல்லாம் மேலாக முசுறு எறும்புகளின் வாழ்க்கை முறை சற்று வித்தியாசமாக உள்ளது.
குறிப்பாக முசுறு எறும்புகள் சாதாரணமாக எறும்புகள் போல் இல்லாமல் குருவிகளை போல் இலைகளின் நடுவே கூடுகட்டி அதன் உள்ள பஞ்சு மெத்தையில் சொகுசாக வாழ்ந்து வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் காணப்பட்ட முசுறு தற்போது திருமங்கலம் அருகேயுள்ள கட்ராம்பட்டி , செங்கப்படை பகுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றன.
அதிலும் பனைமரங்கள் நிறைந்த காடுகளில் உள்ள புதர் மரங்களில் உள்ள இலைகளை நேர்த்தியாக மடித்து தண்ணீர் உள்ளே புகாதவகையில் தங்களுக்கென முசுறு எறும்புகள் கூடுகட்டுகின்றன.பகலில் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடும் இவ்வகை எறும்புகள் இரவிலே துயில் கொண்டிட கூட்டின் உட்புறம் பஞ்சினை வைத்து மெத்தை போன்ற அமைப்பினை ஏற்படுத்தி சுகஜ¦வனம் மேற்கொள்கின்றன.
தனித்தனி குடும்பங்களாக பறவைகள், மனிதர்கள் வசிப்பது போல் மரங்களில் நூற்றுக்கணக்கான கூடுகளை கட்டி அதிநவீன அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதுபோல் இவ்வகை எறும்புகள் வாழ்ந்து வருகின்றன.இவைகள் வாழும் மரங்களில் வேறு ஏதேனும் சிறிய உரியனங்கள் வந்தால் அவற்றின் உயிருக்கு உத்திரவாதமில்லை.அதோ கதிதான். ஏனென்றால் லேசான ''டாக்சிக் விஷம்'' கொண்ட முசுறு எறும்புகள் கடித்தால் கடுமையான வலி ஏற்படுவதுடன், கடித்த இடம் வீங்கி, சிறுது நேரத்தில் முழுமையாக மறத்து போய் விடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே முசுறு எறும்புகூட்டம் உள்ள மரங்களில் வேறு உயிரினங்கள் வருவது கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சில பறவைகள் மட்டும் இந்த எறும்புகளுக்கு அஞ்சாமல் இவற்றின் கூடுகளை கலைத்து, கடும் எதிப்பை மீறி உள்ளே இருக்கும் உணவு சேமிப்பை களவாடி சென்று விடுகின்றன.என்றாலும் கூடு கலைந்தது குறித்து கவலைப்படாத முசுறு எறும்புகள் 1 மணி நேரத்திற்குள்ளாக தங்களுக்கு வேறொரு கூட்டை கட்டி குடியேறிவிடுகின்றன.
2. மழை வருவதை அறிவிக்கு எறும்புகள்....
எறும்புகளின் நடமாட்டத்தை வைத்தே நிலநடுக்கம், எரிமலைகள் வெடிக்க இருப்பதை கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கூடுதலாக உங்கள் வீட்டில் எந்த தீண்பண்டம் வைத்தாலும் எறும்புகள் சுற்றி வளைத்து விடுகின்றனவா? வீட்டில் எங்கு பார்த்தாலும எறும்பு நடமாட்டம் தெரிகிறாதா? உங்கள் ஊரில் மழைபெய்யும் வாய்ப்பு அதிகம்.
3. அமிதாப் சொன்ன தகவல்...
அமிதாப் எறும்புகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சொன்ன தகவல் சற்று ஆச்சரியமானது தான்.நாம் எதிர்பார்க்காதது தான். நாம் வாழும் பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எடை, பூமியில் வாழும் ஒட்டுமொத்த மனிதர்கள் (நாமதாங்க) எடைக்கு சரியாக இருக்கும். அப்போ இந்த பூமியில் எவ்வளவு எறும்புகள் இருக்கும் கணக்கு போட்டுகாங்க கோடிகோடி எறும்புகள் இருக்கலாம். இதாம்பா அமிதாப் ஜி சொன்ன தகவல்... அம்புட்டுதான்...
-செல்வராஜ்.
Comments
தொடர வாழ்த்துக்கள்...