மே 28 வரையே கடைசி வாய்ப்பு ... தவறினால் 2021 ல் தான் கிடைக்கும்

சில் ஆச்சரியமளிக்கும் ,அதிசயவாய்ப்புகள்  தவறினாள் அடுத்த வாய்ப்புக்கு நிண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். சில வாய்ப்புகள் நம் வாழ்நாளில் கிடைக்கமலேயே  போகலாம். வான் வெளியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் நிகழ உள்ளது.
வெள்ளி வியாழன்,மற்றும் புதன் ஆகிய 3 கிரகங்களும் ஒன்றுக்கு ஒன்று அருகாமையில் நெருங்கி வருகின்றன. வியாழனும் வெள்ளியும் வானில் ஏற்கனவே பார்க்கும்படியாக உள்ளன. அந்த கிரகங்களுடன் இந்த மே மாதம் 24ம் தேதியன்று (இன்று) புதன் கிரகமும் அருகாமையில் வருகிறது.தெளிவான வானம் உள்ள நிலையில் கோடை காலத்தில் பொதுமக்கள் இந்த கிரகங்களை வெறும் கண்களால் காண முடியும். இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் சனிக்கிரகம் ஏற்கனவே வானில் தெரிகிறது. 3 கிரகங்களும் மிக அருகாமையில் வரும்போது வெளியே நடந்து செல்லும் நபர் 4 கிரகங்களை வெறும் கண்களால் மிக எளிதாக பார்க்க முடியும்.சூரியன் மறையும்போது வடக்கு திசையில் பார்க்கும்போது பிரகாசமான நட்சத்திரமான வெள்ளிக்கிரகத்தை காண முடியும். வியாழன் கிரகம் 2வது பிரகாசமான கிரகமாக காணப்படும். இந்த வார இறுதியில் புதன் கிரகத்தை இருகிரகத்திற்கு அருகாமையில் சிறு புள்ளியாக காணப்படும். இந்த 3 கிரகங்களும் மிக அருகாமையில் வரும் அடுத்த நிகழ்வு வருகிற 2021ம்ஆண்டு நிகழும் என்று ஆய்வாளர் தனஞ்செயன் ராவல் கூறினார்.மூத்தவிஞ்ஞானி நரோத்தம் சாகு கூறுகையில் பல லடசம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரகங்கள் மிக அருகாமையில் வரும்விண்வெளி அதிசயமாகும். இந்த3 கிரகங்களும் மிக அருகாமையில் காண்பதற்கு ஏற்ற நேரமாக சூரிய அஸ்தமனம் ஆனதும் 30 -60 நிமிடங்களில் காண வேண்டும்.அப்போது அந்த கிரகங்கள் அருகாமையில் இருப்பதைக்காண முடியும். மே 23ம் தேதியன்று வியாழமற்றம் வெள்ளி கிரகங்கள் 5 டிகிரிக்கு குறைவாக நெருங்கி வருகின்றன.. மறுநாள் புதன் கிரகம் அந்த கிரகங்களுக்கு 2டிகிரி தள்ளி காணப்படும். இந்த விண்வெளி அதிசயத்தை மே 28ம் தேதிய வரை காண முடியும்

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

நிகழ இருக்கும் தகவலுக்கு நன்றி...